காமெடி பிட்ஸ் -ரோனி
பள்ளத்தில் கனவுகார்!
சீனாவின் ஹெய்லாங்ஜியாங்
பகுதியிலுள்ள ஹார்பின் நகர சாலையில் ஜாலி சவாரி செய்த ஒருவரின் கார் திடீரென சாலை நடுவில்
உருவான 3
மீ. அகல பள்ளத்தில் விழுந்தது. ஓனர் மீட்கப்பட்டாலும் குழியில் விழுந்தது 7 லட்சம் டாலர்கள்
மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் கார் என்பதால் வீடியோ பரிதாபங்களை அள்ளி ஹிட் அடித்துள்ளது.
துபாயின் விஐபி
சுட்டி!
பிரைவேட் ஜெட், ஃபெராரி
கார் என வலம்வரும் ரஷீத் பெல்ஹாசா, சல்மான்கான், மெஸ்ஸி, ஜாக்கிசான் ஆகிய பிரபலங்களோடு எடுக்கும் போட்டோக்கள்
செம வைரல். பிசினஸ்மேன் சைஃப் அகமது பெல்ஹாசாவின் தவப்புதல்வன்தான்
ரஷீத். 15 வயதிலேயே ஆன்லைன் கடையை ஓபன் செய்து பிசினசிலும்,
பப்ளிசிட்டியிலும் பின்னுகிறார்.
பெண்களுக்கு சுதந்திரம்!
அண்மையில் சவுதி
அரேபியா அரசு,
பெண்கள் வண்டி ஓட்ட அனுமதித்துள்ளது. ஜூலை
2018 அன்று பெண்கள் புதிய லைசென்ஸ்களுக்கு அப்ளை செய்யலாம் என அரசு அறிவித்தவுடன்
குஷியான கார் கம்பெனிகள் குஷியாகி, பெண்களை மையமாக்கி விளம்பரங்களை
வெளியிட்டு வருகின்றன. இது உங்கள் டர்ன், உலகை முன்னோக்கி நடத்தி செல்வோம் என விளம்பர வாசகங்கள் றெக்கை கட்டுகின்றன.
கரன்சி ஜெயந்தி!
அலட்சியமாக கவனித்தால்
சிறுமி காந்திஜெயந்தியை முன்னிட்ட காந்தி போட்டோக்களை ஸ்க்ராப் நோட்டில் ஒட்டுவது போல
தோன்றும்.
நன்றாக பார்த்தால்தான் தெரியும், 500, 2000 ரூபாய்
நோட்டுகளிலுள்ள கரன்சி காந்திதான் வெட்டி ஒட்டப்பட்டிருக்கிறார் என ஷாக்காகி பலருக்கும்
ஹார்ட் அட்டாக் வரவைத்த இணையத்தின் வைரல் புகைப்படம் இது. காந்திமேல்
பாசம்னாலும் இப்படியா? என கண்டனங்களை குவித்து வருகின்றது நெட்டிசன்கள்
குழு.
தொழில்பக்தி காம்பியர்!
அமெரிக்காவின்
நியூயார்க் டிவி ஸ்டூடியோவில் ட்விட்டர் தொடர்பான விவாதம். கர்ப்பிணியான
காம்பியர் நடாலியா பாஸ்க்வாரெல்லாவுக்கு நிகழ்ச்சியின் நடுவில் வயிற்றில் வலி ஏற்பட்டு
பனிக்குடம் உடைந்துவிட்டது. ஆனாலும் வலி பொறுத்து ப்ரோகிராமை
முடித்துவிட்டு, டிவி குழுவுக்கு தகவல் சொல்லி ஹாஸ்பிடல் சென்று
மகனை பெற்றெடுத்துவிட்டார். வாட் எ தொழில்பக்தி என டிவி வட்டாரமே
நடாலியாவை மெச்சி வருகிறது.
குங்குமம் பிட்ஸ்!
டையமண்ட் புதுசு!
ரஷ்யாவின் யாகுட்டியா
பகுதியிலுள்ள சுரங்க நிறுவனத்தில் 27.85 கேரட்டில் மாஸ் சைஸ் வைரம்
கண்டறியப்பட்டுள்ளது. அரிய வைரமாக அல்ரோஸா வைர கூட்டமைப்பினால்
மதிப்பிடப்பட்டு வரும் இந்த வைரமே அதன் ஏல ஹிஸ்டரியில் மிகப்பெரிய வைரமாம்.
பாடிபில்டர் துறவி!
தாய்லாந்தில் பழனி
படிக்கட்டாய் உடலை வைத்திருக்கும் துறவி ஒருவரின் படம் ஹிட் ஹாட் ்வைரலாகி வருகிறது. துறவிகளுக்கான
ஆரோக்கிய உணவுப்பொருட்களை தானம் கேட்கும் சோஷியல் தள பதிவு அவருடையது. ஆரோக்கிய விழிப்புணர்வுக்கான மனிதர், இப்போதுதான் அவர்
பௌத்தத்தில் சேர்ந்திருக்கிறார் என தாறுமாறு கமெண்டுகள் க்யூ கட்டுகின்றன.
சைக்கிள் ரேஸில்
கங்காரு!
ஆஸ்திரேலியாவில்
அடிலெய்ட் ஹில்ஸில் நடந்த சைக்கிள் ரேஸ் நடைபெற்றது. அதில் சைக்கிள் வீரர்கள்
மும்முரமாய் பெடல் மிதித்து சைக்கிள் ஓட்ட, அவர்களின் இடதுபுறம்
கங்காரு ஒன்றும் அவர்களுடன் அரை கி.மீ. ஓடிவந்த காட்சி வீடியோ, இணையத்தில் ஜாலி வைரலாகியுள்ளது.
ட்ரெயினில் சாகசவீரன்!
ஆஸ்திரேலியாவின்
பெர்த்திலுள்ள மிட்செல் ப்ரீவே வழித்தடத்தில் வந்த 70 கி.மீ வேகத்தில் வந்த ட்ரெயினைப் பார்த்த மக்களுக்கு செம ஷாக். ட்ரெயின் எஞ்சினில் வைப்பரை பிடித்தபடி மனிதர் ஒருவர் நின்றுகொண்டு இருந்ததுதான்
காரணம். உடனே காவல்துறை ட்ரெயினை நிறுத்தி சாகச வீரனை கைது செய்து கடமையாற்றியுள்ளது.
வெற்றுக்கையில்
மெகா நண்டு!
ஆஸ்திரேலியா சூழலியலாளரான
ப்யூ க்ரீவ்ஸின் கையிலிருந்த நண்டின் சைசைப் பார்த்து அவரது கேமராமேன்கூட அலறிவிட்டார். மெகா சைஸ்
நண்டான gargantuan crustacean என்ற நண்டை நூதனமான பிடித்த வீடியோ
ஆன்லைனில் செம ஹிட். நண்டு இருமுறை கடித்தும் விரல் துண்டான நிலையிலும்
நண்டை க்ரீவ்ஸ் விடவில்லையாம். மெகா தில்!
மெகா சுறா வேட்டை!
அமெரிக்காவின்
டெக்ஸாஸைச் சேர்ந்த செர்ஜியோ ரோக், 55 ஆவது மீன்பிடிக்கும் போட்டியில்
ஜாலியாக கலந்துகொண்டார். 3 மணிநேர போராட்டத்தில் அவருக்கு கிடைத்த
புலிச்சுறா மீனின் எடை எவ்வளவு தெரியுமா? 437 கிலோ. இந்த மீனின் மூலமே முதல்பரிசு வாங்கிவிட்டார் செர்ஜியோ. சொல்லியடி!
nguage:
EN-ZW'>
பிட்ஸ்!
ஜப்பானின் பூனை
கஃபே!
ஜப்பானின் ஓஹாகி
டூ இல்கெனா வரையிலான ரயில் தடத்தில் ரயிலில் திடீரென பூனை கஃபே உதயம். 30
பூனைகள் செய்த குறும்பில் பயணிகள், உற்சாகமாகி
நெகிழ்ந்து போனார்கள். ஆதரவற்ற பூனைகளுக்கு ஆதரவு தரும் விதமாக
யோரோ ரயில் நிலையத்துடன் பூனைகள் காப்பகம் ஒன்று இணைந்து செய்த ஒருநாள் நிகழ்ச்சி இது.
போர்வெல் விளக்கு!
கர்நாடகாவின் விஜயபுரா
நகரில் போர்வெல்லில் டார்ச் தவறிவிழுந்துவிட்டது. அப்படியே விட முடியுமா?
என எடுக்க முயற்சித்தார் மிஸ் செய்த வாலிபர். அவரது
நண்பர் குழு அதற்கு செய்த ஹெல்ப் ஆசம். அப்படியே நண்பரை தலைகீழாக
கால்களை பிடித்து போர்வெல் குழியில் இறக்கி சகாயம் செய்த வீடியோ ஸ்லீப்பர் ஹிட்.
மெட்ரோவில் மங்கி!
ஜில் ஏசியில் மெட்ரோவில்
செல்ல யாருக்குத்தான் பிடிக்காது! குரங்குகளுக்கும் மனிதர்களுக்கு நிறைய விஷயங்கள்
தாறுமாறு தகராறாக இருந்தாலும் ட்ராவல் என்பது இருவருக்கும் பிடித்தமானதுதானே!
டெல்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஆசையாய் பாய்ந்து ஏறி பயணித்த வீடியோதான்
இன்று செம ஹாட் வைரல்.
நீளக்கால் அழகி!
ரஷ்யாவைச் சேர்ந்த
மாடல் அழகி இகாடரினா லிசினா நீளக்கால் அழகியாக கின்னஸ் புகழ் பெற்றிருக்கிறார். இருகால்களின்
அமேசிங் நீளம் 132 செ.மீ. சாதனை ஓகே. பிராக்டிகலாக அம்மணி சைசுக்கு செருப்பே கடையில்
கிடையாது. காரில், விமானத்தில் உட்கார்ந்து
போவதும் கஷ்டமாக இருக்கிறது என அலுத்துக்கொள்கிறார் அழகி.
பிட்ஸ்!
பைக்கில் விஐபி
சேர்!
விழாக்களில் விஐபிகளுக்கு
சேர் ஓகே.
ஆனால் ஆன் தி வே பைக்கிலுமா? யெஸ். தாய்லாந்தில் ஒருவர் தன் பைக்கில் பின் சீட்டில் விஐபியை சேரை பொருத்தியதோடு
அதில் தன் செல்ல நாயையும் உட்காரவைத்து விர்ரென பறந்து செல்லும் வீடியோ பலருக்கும்
செம கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறது. நாயின் மனதைரியம்தான் வீடியோவின்
பெருமையே.
இனவெறி கருவி!
நைஜீரியரான சுக்வுஎமகா
அஃபிக்போ என்பவரின் கைகழுவும் வீடியோதான் இன்றைய ஹாட் அண்ட் ஷாக். கைகழுவுமிடத்தில்
டிஸ்பென்ஷரின் முன் வெள்ளையர் கைநீட்டி, கை கழுவுகிறார்.
ஆனால் கறுப்புநிறத்தவர் கைநீட்டினால் கருவி வேலை செய்யவில்லை.
கையின் மீது வெண்ணிறடவல் வைத்தால் கருவி இயங்குகிறது. இது தொழில்நுட்ப பிரச்னை என்று கூறிவிட்டது அஃபிக்போவின் கம்பெனி.
டாக்டர் டான்ஸ்!
இந்தோனேஷிய டாக்டர்கள்
முகத்தில் மாஸ்க் வித் கூலிங்கிளாசுடன் ஜாலி டான்ஸ் போடும் வீடியோ இணையத்தில் செம ஹிட். எதற்கு?
மெசேஜ் சொன்னார்களே அதற்காகத்தான். கைகளை சுத்தமாக
கழுவவேண்டும் என்ற உலக மகா மெசேஜை மக்களுக்கு சொல்லவே இந்த குத்தாட்ட டான்ஸ் சொல்கிறது
இந்த டாக்டர்கள் குழு.
கிஃப்டை திருப்பிக்கொடு!
ஆஸ்திரேலியாவில்
எட்வின்,
வின்னி என்ற ஜோடிக்கு மேரேஜ் பிக்ஸானது. ஏதோ காரணத்தால்
மேரேஜ் நின்றுபோக, வின்னி தன் காதலருக்கு கொடுத்த ஷூ,
பர்ஸ் என அனைத்தையும் சூதானமாக ரிடர்ன் வாங்கிவிட்டார். ஆனால் எட்வின் வின்னிக்கு கொடுத்த கிஃப்ட்களை திரும்ப கேட்க, வின்னி தரவில்லை. கோர்ட் ஆர்டர் படி வின்னி தரவேண்டிய கிஃப்ட் மதிப்பு
15,500 டாலர்கள்.
ரோமியோவுக்கு காப்பு!
மும்பை பெண்ணான
ஆசிராவை இரு ரோமியோக்கள் அந்தேரியிலிருந்து, ஜூகி சர்க்கிள் வரை பைக்கில் ஃபாலோ
செய்தனர் அஞ்சா மனுஷியான ஆசிரா அதனை மும்பை போலீஸ் ஐடிக்கு பைக் நம்பரோடு அனுப்ப, ரோமியோக்களை
காலரை பிடித்து காப்பு மாட்டி பெண்களின் பெருமை சேர்த்திருக்கிறது மும்பை போலீஸ்.
சல்யூட் இந்தியன் போலீஸ்.
பிட்ஸ்!
கின்னஸ் கேரட்!
அமெரிக்காவின்
மின்னசோட்டாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் க்வாலி, தன் ஆட்ஸெகோ பண்ணையில் 10 கி.கி அசுர கேரட்டை விளைவித்து கின்னஸ் ரெக்கார்ட் தட்டியுள்ளார். உலகப்புகழ் கேரட்டை உருவாக காரணம் மண், தட்பவெப்பநிலை,
விதை ஆகியவையே காரணம் குளோபல் ஊடகங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்
கிறிஸ்டோபர்.
மெர்சல் வாம்பயர்!
அமெரிக்காவிலுள்ள
ப்ரூக்ளின் நகரில் திடீர் பரபரப்பு, கஃபே, சாலைகளில்
மக்களுக்கு கொடுத்த போஸ்ட்கார்டில் சிரித்த வாம்பயர்தான் காரணம். அம்ப்ரோஸ் லைட் என்ற வலைப்பூ எழுத்தாளர் டேனியல் ஹெட்டிக்ஸ்தான் ஷாக் விளம்பரத்திற்கு
கர்த்தா. மக்கள் ஓட்டுப்போட ரெஜிஸ்டர் செய்ய விழிப்புணர்வு விளம்பரமாம்
இது.
காருக்குள் ஹல்க்!
அமெரிக்காவின்
வாஷிங்டனிலுள்ள தனியாக நின்ற காரிலுள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தன. ஸ்பாட்டுக்கு
வந்த பாஸ்கோ போலீசுக்கு கிடைத்த ஒரே க்ளூ ஹல்க் கைகள். அதைவைத்தே
காருக்கு அருகிலுள்ள இரு வீடுகளைத் தள்ளி திருடிய காரை தன் பெயரில் மாற்றிக்கொண்டிருந
திருடனை பிடித்து லாக்அப்பில் தள்ளி வெளுத்து வருகின்றனர். கைராசி!
மனைவியை சுமந்தால்
சாம்பியன்!
அமெரிக்காவின்
மைனிலுள்ள நியூரி ரிசார்ட்டில் மனைவியைச் சுமந்து தடைதாண்டி ஓடும் போட்டி நடைபெற்றது. இதில்
லெக்ஸிங்டனைச் சேர்ந்த ஜேக், கிறிஸ்டன் பார்னி ஜோடி 58.26
செகண்டில் ஓடி ஜெயித்து 12 பெட்டி பீர்,
630 டாலர்கள் பரிசு வென்றுள்ளனர்.
பிட்ஸ்!
காம்போ ஆஃபர் பதட்டம்!
அமெரிக்காவின்
ஓஹியோவைச் சேர்ந்த ஏஞ்சலா மிக்ஸன், டெலிபோன் கனெக்ஷனோடு டிவி இணைப்பு
ஒன்றையும் ஏப்ரல் மாதம் விபரம் அறியாமல் ஆஃபரில் வாங்கினார். தபாலில் வந்த பில் தொகை 1,84,530 டாலர்கள். பில்லைப் பார்த்து ஷாக்கானவரை "அது எங்களுடைய தவறு" என போன் கம்பெனி மன்னிப்பு கேட்டப்பின்தான் ஏஞ்சலாவுக்கு ஹார்ட்பீட் குறைந்திருக்கிறது.
29 வருஷ
மெசேஜ்!
அமெரிக்காவின்
சவுத்கரோலினாவைச் சேர்ந்த மிராண்டா சாவேஸ், தன் எட்டு வயதில் 1988 ஆம் ஆண்டு எடிஸ்டோ பீச்சில் பாட்டிலில் அனுப்பிய மெசேஜை 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகளான லிண்டா&டேவிட் தம்பதிகள் கண்டுபிடித்துள்ளனர். பாட்டில் செய்தியை
ஃபேஸ்புக் வழியாக அறிந்த மிராண்டா, நெகிழ்ந்துவிட்டார்.
சர்ஃபிங் கோழி!
அமெரிக்காவின்
ஃப்ளோரிடாவைச் சேர்ந்த கார்லி வெனேஸியா, தன் செல்லப்பிராணியான கோழி லாரெட்டாவோடு
கடலில் பேடல் போர்ட்டில் ஜாலி ரைடு அடித்து அசத்தியுள்ளார். "லாரெட்டாவோடு கடலில் பயணிப்பது தனி அற்புதம்" என
உருகியுள்ளார் கார்லி வெனேஸியா. மன்ரோ கவுண்டி டூரிசம் கவுன்சில்
இப்படங்களை இணையத்தில் ரிலீஸ் செய்துள்ளது.
லிஃப்ட் கேட்ட
மாடு!
டெல்லியில் சுற்றித்திரிந்த
மாடு செய்யும் ரவுசுதான் இணைய சென்சேஷன். பிஸி சாலையில் பைக்குகளுக்கு இணையாக
பாய்ந்த மாடு, பீதியான பயணிகளின் பைக்கில் திடீரென லிஃப்ட் கேட்காமல்
ஏற முயன்றது. 400கி.கி எடையுள்ள மாடு ஏறினால்
வண்டி என்னாகும் என பயணிகள் மாட்டை நானோ நொடியில் சேஸ் செய்து பறந்துவிட்டனர்.
பிட்ஸ்!
ஏர்போர்ட் டான்ஸ்!
நியூயார்க் ரோசெஸ்டர்
ஏர்போர்ட்டில் விமானநிலைய பணியாளர் கைரன் ஆஸ்ஃபோர்டு, மெக்பிரைட்
விமானத்திற்கு வழிகாட்ட ஸ்பெஷலாக ஆடிய அமேசிங் டான்ஸ் வீடியோ இணையத்தில் சுனாமி வைரல்.
டெரி என்பவர் இதனை படம்பிடித்து ஃபேஸ்புக்கில் பதிய, ஆஸ்ஃபோர்டு நொடியில் உலகப்புகழ் பெற்றுவிட்டார்.
செல்ஃபீ திருட்டு!
சீனாவின் ஹைனன்
நகரிலுள்ள ஹைனன் ஜூவில் சுற்றிப்பார்க்க வந்த இளம்பெண் ஒருவர், கம்பிக்குள்ளிருந்த
குரங்குகளுடன் பாசநேசமாய் ஜாலி செல்ஃபீ எடுத்தார். திடீரென செல்போனை
குரங்கு பிடுங்க முயற்சிக்க, டக்கென சுதாரித்த லேடி, அரும்பாடுபட்டு போனைக் காப்பாற்றிவிட்டார்.
பந்தை திருடிய
நரி!
ஸ்வீடனிலுள்ள கோல்ஃப்
கிளப்பில் விளையாடிய வீரர் பாய்ண்டாக ஸ்டிக்கால் பந்தை அடித்தார். கோல்ஃப்
பந்தை தேடினால் அங்கு வந்த நரி ஒன்று அதனை முட்டை என நினைத்து மூக்கினால் தள்ளிச்செல்வதை
ஷாக்கானாலும் வீடியோவாக பதிவாக்கியது ஹிட்ஸ்களை
அள்ளி வருகிறது. இறுதியில் நரியை விரட்டி பந்தை கைப்பற்றிவிட்டார்
லோக்கல் டைகர்வுட்ஸ்.
சைலன்ஸ் நூடுல்ஸ்!
ஜப்பானின் கப்
நூடுல்ஸ் கம்பெனியான நிசினின் புதிய கண்டுபிடிப்பு, Otohiko எனும் சைலன்ஸ் ஃபோர்க்
கரண்டி. மைக்ரோபோன் இணைப்புடன் 5 ஆயிரம்
ஃபோர்க் மட்டுமே சந்தைக்கு வரவிருக்கிறது. ஆடோஹிகோவில் நூடுல்ஸ்
சாப்பிட்டால் உறிஞ்சும் சவுண்ட் பிறருக்கு கேட்காதாம். விலை ரூ.8,420.
tion:none;mso-layout-grid-align:none;text-autospace:none'>
பிட்ஸ்!
கலிஃபோர்னியாவில்
மர்ம மனிதர்!
ஃபாரஸ்ட் கம்ப்(1994) படத்தில்
டாம் ஹேங்க்ஸ் ரன்னிங் செல்வதைப்போல, கலிஃபோர்னியாவில் மர்ம மனிதர்
முகத்தில் கண்ணாடியும், தாடியுமாக ஓடுவதை சிலர் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.
"நான் யார் என்பது முக்கியமல்ல. மக்கள் முகத்தில்
என்னைப் பார்த்தவுடன் சிரிப்பு மலர்கிறது. அதுவே போதும்"
என்று ரன்னிங்கிலேயே பதில் சொல்லுகிறார் இவர்.
இருதலை ஆமை!
தாய்லாந்தின் விலங்கு
பராமரிப்பாளரான நாங் சோம்ஜாய் வெளியிட்ட இருதலை ஆமை வீடியோ, செம ஹிட்.
மைக்கேல் ஏஞ்சலோ என பெயரிடப்பட்ட இருதலை ஆமைக்கு வயது 3.
"நான் பல்வேறு ரக ஆமைகளை வளர்த்து விற்றாலும் மைக்கேல் சம்திங்
ஸ்பெஷல்" என நெகிழ்கிறார் சோம்ஜாய்.
ஓநாய்க்கு சிகிச்சை!
மியாமியில் ஷாப்பிங்
மையத்தின் அருகில் காயமடைந்து சாலையில் கிடந்த நாயை, அங்கிருந்த விலங்கு அமைப்பு
மீட்டு சிகிச்சை அளித்தது. அப்போதுதான் அது நாயல்ல, ஓநாய் என்று அறிந்து ஷாக்கான குழுவினர், 'நகருக்குள்
ஊடுருவும் விலங்குகளிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும்' என மெசேஜ்
சொல்லி, ஓநாயை ப்ளோரிடாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பென்குயின் சாதனை!
அமெரிக்காவின்
ஓஹியோவிலுள்ள யங்ஸ்டோவ்ன் பல்கலைக்கழக மாணவர்கள் 972 பேர் பென்குயின் ட்ரெஸ்ஸில்
குரூப்பாக நின்று சாதனை செய்திருக்கிறார்கள். லண்டனில்
2015 ஆம் ஆண்டு 624 பேர் செய்த சாதனையை முறியடித்ததற்காக
யுனிவர்சிட்டி தலைவர் ஜிம் ட்ரெஸ்ஸல் பங்கேற்றவர்களுக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கிறார்.
in;margin-bottom:.0001pt;line-height:
normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none'> tion:none;mso-layout-grid-align:none;text-autospace:none'>
பிட்ஸ்!
பெட்ரோல் குரங்கு!
ஹரியானாவின் பானிபட்டில்
இன்சார் பஜார் வியாபாரிகளின் பைக்கில் சிலநாட்களாக பெட்ரோல் குறைந்திருந்தது. யார் ஆட்டையப்போடுவது
என்று பார்த்தால் நம் முப்பாட்டன் குரங்குதான் திருடர். அருகில்
யாருமில்லாதபோது பைக்கில் பெட்ரோலைக் குடிக்கும் குரங்கு பழங்கள்,பருப்புகள் என எதையும் தொடுவதில்லை.
மீன்தொட்டி ஃபிரிட்ஜ்!
பாங்காங்கில் அம்சாவாங்
கனபாய், தன் வீட்டிற்கு நண்பரை கெஸ்ட்டாக அழைத்தார். ஃபிரிட்ஜை
எதேச்சையாக திறந்த திறந்த நண்பருக்கு செம ஷாக். பின்னே, ஃபிரிட்ஜில் மீன்கள் ப்ளூ லைட்டில் உற்சாக நீந்திக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்?
எல்லாம் கனபாயின் காமெடி ட்ரீட்மெண்ட்தான். 'ஃபிரிட்ஜை விட சிறந்த இடம் மீன்களுக்கு கிடைக்காது' என்று
சொல்லி சிரிக்கிறார்.
வெட்டிங் தூக்கம்!
அமெரிக்காவின்
லூசியானாவில் டேவிட் மற்றும் ரோசலி பியர்ஸ் தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரின்
மகனான மேக்ஸ் ரிவருக்கு வயது 9. கல்யாண ஆரவாரம் கண்களை அயரவைக்க,
கெட்டிமேளம் முழங்கும்போது மேக்ஸ் ரிமோட் காரில் தலைசாய்த்து தூங்கியேவிட்டார். உடனே பளிச் என ஸ்டில் எடுத்து இணையத்தில்
ஏற்ற, மேக்ஸ்,இன்று சோஷியல்தள பிரபலமாகிவிட்டார்.
ஹெல்ப் கேட்ட கிளி!
அமெரிக்காவின்
ஓரேகானிலுள்ள கிளாக்கமாஸ் நகரின் வீட்டிலிருந்து ஹெல்ப் என குரல் கேட்க, பதறிய
டாக்ஸி ட்ரைவர் உடனே போலீசுக்கு நம்பர் அழுத்திவிட்டார். ஹெய்டன்
சான்டர்ஸ் என்ற போலீஸ் வீட்டில் நுழைந்து ஹெல்ப் கேட்டவரைப் பார்த்து சிரித்தேவிட்டார்.
யெஸ். டியாகோ எனும் பச்சைக்கிளி அது.
பிட்ஸ்!
வாய்பிளக்கும்
சாதனை!
ஒடிஷாவின் மனோஜ்குமார்
மகாரானா,
வாய்பிளக்கும் கின்னஸ் சாதனையை வெறும் 459 ஸ்ட்ராக்களை
வைத்தே செய்திருக்கிறார். யெஸ்! ரப்பர்
பேண்டால் ஸ்ட்ராக்களை கட்டி வாயில் திணித்து பத்து நொடிகள் விழாமல் வைத்திருந்த மகாரானாவின்
சாதனைதான் இன்று டாக் ஆப் தி டவுன்!
நண்பேன்டா குரங்கு!
வியட்நாமிலுள்ள
ஹா டின் பண்ணையில் வளர்க்கப்படும் குரங்குகளுக்கும்
நாய்களுக்கும் அப்படியொரு நட்பு. ஸ்ட்ராங்க் நட்புக்கு சாம்பிள், நாய் பிரியமாக தலையைக் கொடுத்து நிற்க,கூண்டிலுள்ள குரங்கு
நாய்க்கு பேன் பார்த்து அளவளாவுவதுதான். வெளியாகியுள்ள நண்பேன்டா
வீடியோ இணையத்தில் ஹாட் ஹிட்.
ஜன்னலில் திருடி!
கொலம்பியாவில்
உள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரெண்டில் ஜன்னல் வழியாகவே கொள்ளையடித்த லேடியை ஹோவர்ட் கவுன்டி
போலீஸ் அரஸ்ட் செய்துள்ளது.
உணவு,குளிர்பானம் கூடவே 1,400 டாலர்களை சிம்பிளாக திருடிய பெண்ணை சிசிடிவி புகைப்படம் மூலமே போலீஸ் பிடித்துள்ளதுதான்
ஆச்சரியம்.
கின்னஸ் ஸ்டிக்கர்பால்!
உலகின் மெகா ஸ்டிக்கர்
பாலை ஸ்டிக்கர் ஜெயண்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 2 லட்சம் ஸ்டிக்கர்களோடு,
231 பவுண்டு எடை கொண்ட ஸ்டிக்கர்பந்து இது."மக்களை மகிழ்விக்க ஜாலியாக செய்த விஷயம் இது" என புன்னகைக்கிறார் ஸ்டிக்கர்பந்தின்
பிரம்மாவான ஜான் ஃபிஷ்ஷர்.
நன்றி: குங்குமம் வார இதழ்
தொகுப்பு: ரோனி&கோ