முத்தாரம் பிட்ஸ் - கா.சி.வின்சென்ட்




பிட்ஸ் ஸ்பாட்!

ஆடுகளால் 360 டிகிரியில் பார்க்க முடியுமா? 320-340 டிகிரி வரை ஆடுகளால் பார்க்கமுடியும். அப்போது மனிதர்களால்? 160-210 டிகிரி என்பது நமக்கான லிமிட்.

சிவப்பு பாண்டா கரடிகள், வால்ரஸ், ஸ்கங்க் ஆகிய விலங்குகளோடு ஒப்பிடப்பட்டாலும் இவை அவற்றோடு தொடர்பற்ற தனி விலங்கு.

மண்புழுக்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்து இதயங்கள் உண்டு.

ஜூவுக்கு செல்லும் சமயத்தில் சளி, இருமல் இருந்தால் கொரில்லா கூண்டுக்கு செல்லாதீர்கள். அவற்றுக்கும் சளி டக்கென தொற்றிவிடும் வாய்ப்பு அதிகமாம்.


 அம்மா சென்டிமெண்ட் கடல் ஆமைகளுக்கு இம்மியளவும் கிடையாது. மணலில் குஞ்சு பொறித்தவுடன் உயிர்பிழைக்க கடல்நீருக்குள் இறங்குபவை பிறகு, அம்மா மட்டுமல்ல, சகோதரர்களைக்கூட ஆயுளுக்கும் சந்திப்பதேயில்லை. 
அமேஸிங் பிட்ஸ்!

நாய்களின் மூக்கு ஈரமாக இருப்பது எதற்காக தெரியுமா? அதன் உடல் வெப்பநிலையை சமநிலையாக வைத்துக்கொள்ளவே. நாயின் மூக்கிலுள்ள சளிச்சவ்வு மூலம் மூக்கு ஈரமாக இருப்பது அதன் மோப்பத்திறனை அதிகரிக்கிறது.

பனிக்காலத்தில் கரடிகள் தூக்கத்தில் இருக்கும் என்பது சூப்பர் புருடா. இயல்பான வேகம் உடலில் இருக்காது எனினும் மந்தமான அக்காலத்திலும் அவை நடமாட முடியும்.

தங்கமீன்களால் ஐந்து மாதங்கள் வரை விஷயங்களை மெமரியில் வைத்துக்கொள்ள முடியும்.

காளைகள் சிவப்புக்கொடியை அசைப்பவரை பார்த்து முட்டுவதற்கு பாய என்ன காரணம் தெரியுமா? நிறமல்ல. கொடியின் அசைவு.

ஒட்டகம் குடிநீரின்றி 7 நாட்கள் வாழ முடியும். அதன் முதுகில் உள்ள திண்டு, கொழுப்புத்திசு; நீர் சேமிக்கும் டேங்க் அல்ல. ஒட்டகம் நீரை தன் சிறுநீரகத்தில் சேமிக்கிறது.

பிட்ஸ் பக்கம்!

கடலிலிருந்த தேள்கள் நிலம் கண்டு 340 மில்லியன் ஆண்டுகளாகின்றன. இரண்டாயிரம் வகைகளுள்ள தேள்களில் 20 மட்டுமே கடுமையாக விஷம் கொண்டவை. ஆண்டுக்கு தேள் நச்சால் இறப்பு 5,000 பேர்கள்.

பச்சைக்கிளிகள் ஒன்றையொன்று அழைத்துக்கொள்ள தனிப்பெயரைக் கொண்டிருக்கின்றன.

மான்கள் குடும்பத்தில் Caribou என்ற மான் இனத்தில் மட்டுமே ஆண்,பெண் என இரு மான்களுக்கும் கொம்புகள் உண்டு.  

ஆப்பிரிக்காவில் வாழும் காட்டு நாய்கள் வயதான, நோயுற்ற தமது இனத்தைச் சேர்ந்த பிற நாய்களை பராமரிக்கும் பழக்கம் உண்டு.

சிறுத்தைக்குட்டிகள் தமது தாயை வழிதவறாது பல்வேறு கோரைப்புற்கள் கொண்ட நிலப்பகுதியிலும் பின்தொடர தாய் சிறுத்தையின் வாலிலுள்ள வெள்ளை நிறம் உதவுகிறது.   


 பிட்ஸ் ஸ்பாட்!

இங்கிலாந்தில் காணப்படும் The least weasel (Mustela nivalis) எனும் மரநாயின் எடை 25 கிராம் மட்டுமே.

மத்திய ஆசியா பகுதிகளில் காணப்படும் Otocolobus manul எனும் பூனை மிகச்சிறிய பாறை பிளவுகளிடையே வசிக்கக்கூடியது.

உலகில் அதிகம் காணப்படும் வாத்து இனங்களில்  mallards  ஒன்று.

Titi வகை குரங்குகள் ஜோடியாக மரங்களில் அமர்ந்திருக்கும்போது அதன் வால்கள் ஒன்றாக பின்னியிருக்கும்.

துருவக்கரடிகள் ஒன்றையொன்று உதவி கேட்க மூக்குகளை செல்லமாக உரசிக்கொள்ளும்.  



 பிட்ஸ் பக்கம்!

பிலிப்பைன்ஸில் 2010 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட claw lobster(Dinochelus ausubeli) வின் நகங்கள் ரம்பம் ஷேப்பில்  விநோத அரிய அழகு.

அட்லாண்டிக், பசிபிக், இந்தியப்பெருங்கடல்களில் ஆழத்தில் வசிக்கும் barreleye(Opisthoproctidae) மீனின் தலைப்பகுதியில் என்ன நடக்கிறது பார்த்தவுடனே நாமே சொல்லிவிடும்படி அப்படியொரு கிறிஸ்டல் டிசைன் இந்த மீனுக்கு.

இடத்திற்கேற்ப தன் நிறத்தை மேட்ச் செய்துகொள்ளும் ஆக்டோபஸ்களின் தோலில் சுரக்கும் புரதம், கண்களின் உதவியின்றி அதன் எதிரிகளை ஈஸியாக கண்டறிய உதவுகின்றன.  

அடோலா ஜெல்லிமீனின் உடல் அமைப்பு பிற ஜெல்லி மீன்களைப் போலத்தான்.(சுவாசம், நரம்பு, செரிமான அமைப்பு லேது ) வித்தியாசம், அந்நிய உயிரிகள் அருகே வந்தால் 300 அடிக்கு முன்பே அலாரம் போல அலறத் தொடங்கும்.

  பிட்ஸ் பார்க்!

வீட்டு ஈக்களின் ஆயுள் 14 நாட்கள்தான் என்றாலும், கீபோர்டின் F கீ சங்கீதத்தை பாடி சாதகம் செய்தபின்பே இறக்கின்றன.


நெருப்புக்கோழிகள் மனசு வைத்து ஓடத்தொடங்கினால் குதிரைகளும் பின்தங்கிவிடும்.

புலிகளின் உடலிலுள்ள வரிக்கோடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

நீர் இருக்கும் இடத்தை 3 கி.மீ முன்பே யானைகள் அறிந்துவிடும் திறன் கொண்டவை.

வண்ணத்துப்பூச்சியின் கூட்டுக்கண்களில் ஆயிரக்கணக்கான லென்ஸ்கள் உண்டு. ஆனால் சிவப்பு, ப்ளூ, மஞ்சள் ஆகிய நிறங்களையே அவையால் பார்க்க முடியும்.   

பிட்ஸ் பேங்க்!

ப்ளூ மற்றும் பிற லைட் நிற கண்களைக் கொண்டவர்கள் மதுவுக்கு அடிமையாக சான்ஸ் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

துருவக்கரடிகளின் தோலின் நிறம் தெரியுமா? உடனே கைதூக்கி வெள்ளை என்ற பதில் சொல்லக்கூடாது. அதன் தோலின் நிறம் கருப்பு.

ஜெஸிகா(Merchant of Venice 1596), ஒலிவியா(Twelfth Night' 1602),மிராண்டா(The Tempest' 1611) ஆகிய பெயர்களை உருவாக்கியவர் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர்.

உங்கள் வீட்டில் பழக்கப்பட்ட வாசனை தவிர்த்து புதிய வாசனை வந்தால் மூளை உஷார் அலர்ட் கொடுத்து உடலை தயார் செய்வதற்கு Olfactory adaptation என்று பெயர்.

ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிகம் திருடப்படும் பொருள் சீஸ்.  

நன்றி: முத்தாரம் வார  இதழ்