சயின்ஸ் ஸ்பெஷல்! - கா.சி.வின்சென்ட்.

குரங்குகளை அழிக்கும் பாமாயில்!

உராங் உட்டான் குரங்களின் அதிகம் வாழும் இடங்களில் இந்தோனேஷியாவும் ஒன்று. சுமத்ரா தீவுகளிலுள்ள ட்ரைபாபீட் காடுகள் பலவும் பாமாயில் பெறுவதற்காக தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதால், உராங் உட்டான் குரங்குகளின் வாழ்க்கை உறைந்துபோய் நிற்கிறது. சுமத்ரா மற்றும் போர்னியோ ஆகிய இரு தீவுகளில் மட்டுமே தற்போது உராங் உட்டான் குரங்குகள் வாழ்கின்றன.

பிஸ்கட்டுகள், லிப்ஸ்டிக், பெயிண்ட், ஷாம்பூ, நூடுல்ஸ் என அனைத்திலும் இடம்பெறும் பாமாயில் தயாரிப்பில் இந்தோனேஷியா நாடு முன்னிலை வகிக்கிறது. வணிகத்திற்காக சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு பாமாயில் பெறுவதற்காக பனைமரங்கள் விதைக்கப்படுவது அங்கு வாழும் பன்மைத்தன்மையை சிதைத்து உயிரிகளை அழித்துவருகிறது. உணவுதேடிவரும் குரங்குகளை கொன்று, அதன்குட்டிகளை வளர்ப்பு பிராணிகளாக விற்கும் பிஸினஸூம் கொடிகட்டி பறக்கிறது. இயற்கை பாதுகாப்பு அமைப்பு, சுமத்ரா காடுகளிலுள்ள உராங் உட்டான் குரங்குகளை பாதுகாப்பதற்கான இடத்திற்கு மாற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன.



 கேட்ஜெட்ஸ் ரவுண்ட் அப்!

Brompton Electric bicycle

எலக்ட்ரிக் பைக் என்பது புதிதல்ல. பிராம்ப்டன் சைக்களில் பேட்டரியை உங்களுக்கு ஏற்ற இடத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சவாரி போகலாம். 25 வாட் பவரில் இயங்கும் மோட்டார் மூலம் 48 கி.மீ செல்லமுடியும். நீங்கள் செல்லும் தூரம், சர்வீஸ் குறித்தவற்றை ஆப் மூலம் செட் செய்து கொள்ளலாம். விலை 2,13,820

JBL Boombox
வேலை முடிந்ததும் பார்ட்டி என கிளப்,பப், பீச் என கிளம்புபவரா? உங்களுக்கு சூப்பர் துணை இந்த பூம்பாக்ஸ். 20 ஆயிரம் மில்லி ஆம்ப் பேட்டரி ஒரு நாளுக்கு உங்கள் மனதில் தடதட இசையால் எனர்ஜி கொப்பளிக்க வைக்கும். யுஎஸ்பி சார்ஜிங், வாட்டர்ப்ரூஃப் வசதிகள் உண்டு. அடுத்த வீட்டுக்காரர்களை எழுப்பியும் சந்தோஷம் குறைந்தால் மேலும் ஸ்பீக்கர்களை கனெக்ட் செய்து மொத்த ஊரையே வம்பிழுக்கலாம். விலை ரூ. 32,948

Penclic B2 Mouse
பேனாவும் மௌஸூம் ஒன்றாக கலந்த ஹைபிரிட் டிவைஸ் இது. பேனா எங்கே என டார்ச்லைட் பிடித்து தேடும் வேலை மிச்சம். இந்த டிவைஸை நீங்கள் கம்ப்யூட்டரோடு ஈஸியாக ப்ளூடூத் மூலம் இணைக்க முடியும். விலை ரூ. 6591

Somfy One security camera

ஹெச்டி கேமராவில் இருக்கும் ஸ்க்ரீன், 90 டெசிபலில் அலறும் சைரன், மைக், கேமராவை ஆட்டோமேட்டிக்காக மறைக்கும் வசதி என பல்வேறு வசதிகள் இந்த செக்யூரிட்டி கேமராவை வாங்கலாம என தெம்பு தருகின்றன. விலை ரூ. 18,868

Sony Xperia Touch

சோனியின் சூப்பர் காம்பாக்ட் புரொஜெக்டர் இது. 80 செ.மீ திரையில் டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட ஆண்ட்ராய்ட்டு ஓஎஸ்ஸை அடிப்படையாக கொண்டதுலேப்டாப்போடும் எளிதால இணைத்து பயன்படுத்தலாம். அதற்குத்தானே HDMI இணைப்பு உள்ளது! விலை ரூ.1.15,364





 உலகத்தை சுற்றிவளைக்கும் சூயிங்கம்!

மெக்சிகோவில் ஒவ்வொரு இரவும் டஜன் கணக்கிலான லாரிகளில், லாரிக்கு தலா 15 நபர்கள் தொற்றிக்கொள்ள பிரான்சிஸ்கோ மடேரோ அவென்யூக்கு செல்கின்றனர். 9 ஆயிரம் ச.அடியில் உள்ள வீதியில் 8 மணி நேரம் மூன்று நாட்களாக வேலை செய்து 11 ஆயிரம் சூயிங்கம்களை நீக்கியிருக்கின்றனர்.

நகரமெங்கும் தின்று துப்பப்படும் சூயிங்கம்மால் ஈகோலி, சால்மோனெல்லா உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகரிப்பதால், இதை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் உருவாகி வருகிறது. மெக்சிகோவுக்கு தினசரி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியன். இது அமெரிக்காவின் டைம் சதுக்கத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கைக்கு சமம். மெக்சிகோவில் சூயிங்கம் விற்கும் ஆல்பெர்ட்டோவின் ஒரு கடையில் மட்டும் சூயிங்கம் ஒருநாளுக்கு 60 பாக்கெட்டுகள் விற்கின்றன. 2002 ஆம் ஆண்டு டோனி பிளேர், ஜார்ஜ் புஷ், ஜெஃப்ரி ஆர்ச்சர் ஆகியோர் இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தும், 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சூயிங்கம் துப்பியவர்களுக்கு ஃபைன் விதித்தும் நிலைமை சீராகவில்லை.

2015  ஆம் ஆண்டு சியாட்டிலின் 20 வயதாகும் சூயிங்கம் சுவரில் 130 மணிநேரம் போராடிய துப்புரவு பணியாளர்கள் 1,066 கிலோ சூயிங்கம்களை அகற்றினர். ஆனால் இரண்டே நாட்களில் சுவரில் மூல பவுத்திர நோட்டீஸ் போல நீக்கமற நிறைந்துவிட்டது சூயிங்கம்கள். சிங்கப்பூரில் 1992 ஆம் ஆண்டிலிருந்தே சூயிங்கம் மீதான தடை உண்டு. அதையும் மீறினால் ஃபைன் 500 டாலர்கள்.2004 இல் மருத்துவ சிகிச்சைக்கான சூயிங்கத்துக்கு மட்டும் அனுமதி உள்ளது.

சூயிங்கம் வரலாறு

ஃபின்லாந்தில் உலகின் மிகத்தொன்மையான சூயிங்கம் என 6 ஆயிரம் ஆண்டு பழமையான பிர்ச்பட்டையை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் மனிதர்களின் பற்கள் தடம் பதிந்துள்ளது. க்ரீஸில் மஸ்டிக் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ரெசினை சூயிங்கம்மாக மென்று தாடைகளுக்கு பயிற்சியளித்திருக்கின்றனர். இவர்களை வழிமொழிந்த மயன், அஸ்டெக் இனக்குழுவினர், சபோடில்லா மரத்திலிருந்து எடுத்த பசையை மென்று வந்தனர். tzicli எனப்படும் பசையை திருமணமான பெண் அல்லது விதவை ஒருவர் பொதுஇடத்தில் மென்றால் அவர் விபச்சாரி என்றும், ஆணாக இருந்தால் ஓரினச்சேர்க்கையாளர் என முடிவு கட்டுவது அன்றைய வழக்கம் என்கிறார் Unwrapping the History of Chewing Gum என்ற நூலின் எழுத்தாளரான லூயிஸ் வெர்னர்

மெக்சிகோவில் சிக்கில் என்னும் பசையை வேகவைத்து பக்குவப்படுத்தி மென்று வந்தனர். பின்னாளில் இதனை 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர் மெக்சிகன் ஜெனரலான சான்டா அன்னா. டயர்களுக்கு பயன்படும் ரப்பரும் சூயிங்கம்மில் சேர்க்கப்பட்டு, பின் அதற்கு பதிலாக அதில் வெந்நீர் சேர்க்கப்பட்டு உருண்டை வடிவில் விற்பனை செய்யப்பட்டது. சூயிங்கத்தை அக்காலத்தில் பெண்கள் மெல்லுவது புரட்சியாக கருதப்பட்டது. 1936 இல் கடைக்காரர் அவரிருந்த 25 குடியிருப்புகளைக் கொண்ட தெருவில் மட்டும் தினசரி 84 ஆயிரம் சூயிங்கம் துண்டுகளை கண்டதாக கணக்கிட்டிருக்கிறார்இரண்டாம் உலகப்போரில் சூயிங்கம் உலகம் முழுக்க பரவத்தொடங்கியது. பாலிவினைல் அசிட்டேட், பிளாஸ்டிக் ஆகியவை சூயிங்கம்மில் சேர்க்கப்பட்டதால், உலர்ந்தபின் அதனை ஓரிடத்திலிருந்து அகற்றுவது கடினமானது.

பாக்ஸ்1

டாப் 5 சூயிங்கம்கள்
1. Trident, 2. Orbit, 3. Stride, 4. Extra
5. Juicy Fruit

பாக்ஸ் 2

சந்தை மதிப்பு - 25.1 பில்லியன்
வளர்ச்சி கணிப்பு  -34.50 பில்லியன்(2022)
முன்னணி நிறுவனங்கள் - Wrigley’s,Mondelez,Perfetti,Lotte, Cloetta
(www.mordorintelligence.com தகவல்படி)

 ரியலா? ரீலா?

ரீல்: திருமண ஆசீர்வாத அரிசி பறவைகளைக் கொல்லும்.
ரியல்: அரிசியால் பறவைகள் இறக்கும் என்பது செம டூப். பறவைகளின் இறப்பு பயத்தால் எகிப்தின் தொன்மையில் உருவான ஆசீர்வாத அரிசி கைவிடப்பட்டு இன்று திருமணங்களில் மிகச்சிறிய பந்துகள் தம்பதிகள் மீது வீசப்படுகின்றன. 2002 இல் கென்டக்கி யுனிவர்சிட்டி செய்த ஆய்வில், பறவைகள் தின்னும் விதைகள் அரிசியை விட நிறைவு தருகின்றன என்று கூறுகிறது.

ரீல்:வௌவால்கள் குருடானவை
ரியல்: அப்புறம் ஏன் வௌவால்களுக்கு கண்கள் இருக்கவேண்டும்? வௌவால்களின் கண்களால் பார்க்க முடிவதோடு, கூடுதலாக எதிரொலி முறையையும் பயன்படுத்துகிறது. கண்களைவிட எதிரொலி டெக்னிக் இன்னும் தெளிவைத் தருகிறது.

ரீல்: பறவைகுஞ்சுகளை மனிதர்கள் கையாண்டால் தாய்ப்பறவை அவற்றை கைவிட்டுவிடும்.
ரியல்: பறவைகளுக்கு உடல்மண வேறுபாடு தெரியாது. குஞ்சுகள் தனிதது தாயால் விடப்படுவது அவை பறப்பதற்கான பயிற்சிக்காகவே. இது பொய்யான கருத்து.   
பிளாஸ்டிக்குக்கு தடா!

அண்மையில் கென்யாவின் உச்சநீதிமன்றம், பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவுதான் பலருக்கும் பீதி தருகிறது. உலகிலேயே உச்சபட்ச அபராத தொகை இதுவே. எவ்வளவு? 40 ஆயிரம் டாலர்கள்.

கென்யாவின் காவல்துறை தயாரிப்பாளர்கள், டீலர்களிடம் கடுமையாக நடந்தாலும், மக்களை  தொந்தரவு செய்யவில்லை. இது அந்நாட்டில் மூன்றாவது முறையாக அமலுக்கும் வரும் பிளாஸ்டிக் தடையாகும். கேமரூன், கினியா-பிஸாயூ, மாலி, தான்சானியா, உகாண்டா, எதியோப்பியா, மலாவி, மாரிடானியா ஆகிய ஆப்பிரிக்க பிளாஸ்டிக் தடைநாடுகளில் கென்யாவும் இணைந்துள்ளது. கென்யாவில் ஓராண்டுக்கு 100 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என ஐநா சபையின் சூழலியல் அமைப்பு கூறியுள்ளது. "பிளாஸடிக் பைகளுக்கு தடை என்பதால் சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை" என்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜூடி வாகுங்கு.
்னிக் இன்னும் தெளிவைத் தருகிறது.


ரீல்: பறவைகுஞ்சுகளை மனிதர்கள் கையாண்டால் தாய்ப்பறவை அவற்றை கைவிட்டுவிடும்.
ரியல்: பறவைகளுக்கு உடல்மண வேறுபாடு தெரியாது. குஞ்சுகள் தனிதது தாயால் விடப்படுவது அவை பறப்பதற்கான பயிற்சிக்காகவே. இது பொய்யான கருத்து.   

மனிதர்களை கண்காணிக்கும் செயற்கைக்கோள்!

ஒருநாளைக்கு இருமுறை விண்வெளியிலுள்ள சேட்டிலைட் உங்களை படமெடுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? டிஜிடல்குளோப் நிறுவனம் தற்போது வைத்துள்ள செயற்கைக்கோள்கள் மூலம் தினசரி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பல்வேறு பகுதிகளை போட்டோ எடுத்து சேமித்துவைக்கிறது.

2021 ஆம் ஆண்டுக்குள் உலகின் பல்வேறு பாகங்களை ஃபிளாஷ் வெளிச்ச துல்லியத்துடன் போட்டோ எடுப்பதே டிஜிட்டல் குளோப் நிறுவனத்தின் லட்சியம். மனிதர்களை எதற்கு கவனிக்கவேண்டும்? பிஸினஸிற்குத்தான். அரசு, எண்ணெய் வியாபாரிகள், இரும்பு சுரங்க வியாபாரிகள், சூப்பர்மார்க்கெட் தலைவர்கள் ஆகியோரின் தேவையை நிறைவேற்றுவதே டிஜிடல்குளோப் நிறுவனத்தின் வேலை. இயற்கை வளங்களின் இடங்கள், மரங்களை வெட்டுவது, ஷாப்பிங் வளாகத்தில் கார்களை நிறுத்துவது உள்ளிட்டவற்றை செய்ய செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. கண்காணிப்பு பிஸினஸில் டிஜிடல்குளோப் மற்றும் எம்டிஏ என இரு நிறுவனங்களும் 54% சந்தையை கையகப்படுத்தியுள்ளன.

class=MsoNormal style='margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none'> 

ரீல்: பறவைகுஞ்சுகளை மனிதர்கள் கையாண்டால் தாய்ப்பறவை அவற்றை கைவிட்டுவிடும்.
ரியல்: பறவைகளுக்கு உடல்மண வேறுபாடு தெரியாது. குஞ்சுகள் தனிதது தாயால் விடப்படுவது அவை பறப்பதற்கான பயிற்சிக்காகவே. இது பொய்யான கருத்து


நன்றி: முத்தாரம் வார இதழ்
தொகுப்பு: கண்மணி குமாரன், ராஜேஷ் ரதி