கோமாளிமேடை ஸ்பெஷல்! தொகுப்பு: ரோனி




ஃபேக்டரியை எரித்த அணில்!

வெற்றிக்கு அணிலாக உதவினேன் என்று சிலர் வெட்டிப் பெருமை பேசுவார்கள். நிஜமாகவே அணில் உதவியா, உபத்திரமா என கீழேவரும் சீஸ் ஃபேக்டரி ஓனர்தான் சொல்லவேண்டும். ஏன்? அவருக்கு அணில் செய்த செய்வினை அப்படி.

கனடாவின் பர்னபி பகுதியிலுள்ள ஸ்கார்டில்லோ சீஸ் ஃபேக்டரிதான் சம்பவம் நடந்த ஸ்பாட்.  காலை 9 மணிக்கு அப்பகுதியின் ஃபயர்சர்வீஸ் நிலைய அலாரம் ஒலித்தது. நெருப்புடா என பதறிய வீரர்கள் உடனே மின்னல் வேகத்தில் சீஸ் ஃபேக்டரியில் என்ட்ரியானார்கள். என்ன ஆச்சு? அணில்தான். பல்லை வைத்துக்கொண்டு பழம், பாதம் என தின்னாமல் முக்கிய பவர்லைனின் வயர்களை கடித்து வைக்க, ஃபேக்டரி முழுக்க தீ ஜம்மென்று பிடித்துவிட்டது. 4 வண்டிகள், 15 ஃபயர் ஆட்கள் என 12 மணிநேரம் போராடி தீயை அணைத்ததில் சீஸ் செய்ய வைத்திருந்த 20ஆயிரம் காலன் பாலும் காலி. இப்போ சொல்லுங்க, இதுக்கு மேலயும் அணிலைப் பார்த்தால் உங்களுக்கு பாசம் வருங்களா ஆபீசர்?


என்னை காப்பாத்துங்க அமைச்சரே!

குறைந்தபட்ச அமைச்சரவை அதிகபட்ச நிர்வாகம் என்ற லட்சியத்தில் அணுவளவும் பிறழாமல் மாதம் ஒரு வரி, மாதம் ஒரு மிட்நைட் அறிவிப்பு என மெட்ரோ ரயில் வேகத்தில் செல்லும் பிரதமர் மோடியின் டீம், அவருக்கு ஈடுகொடுத்து தினசரி அட்டண்டன்ஸ் போடும் ஒரே இடம் ட்விட்டர்தான். அதிலும் உருப்படியாக செயல்படுவர்களில் அமைச்சர்களில் சுஷ்மா சுவராஜூம் ஒருவர். அதற்காக அவரை கலாய்த்து கலாட்டா செய்யாமல் விடுவார்களா நம் நெட்டிசன்கள்?

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா, அயல்நாட்டு பிரச்னைகளை தன் ட்விட்டர் கணக்கு மூலமே சிம்பிளாக அடையாளம் கண்டு தன் பரிவாரங்கள் மூலம் தீர்த்து வைப்பது உலகிற்கே தெரியும். அண்மையில் வெளியான Jab Harry Met Sejal என்ற படத்தை பார்த்த புனே ரசிகர், படம் தந்த அமேசிங் விரக்தியில் என்னை காப்பாத்துங்க அமைச்சரே என சுஷ்மாவுக்கு ஜாலி கலாய் ட்விட் அனுப்ப, அதை பின்னர் பலரும் வழிமொழிய பதிவுகள் ட்விட்டரில் க்யூ கட்டி செம வைரலாகிவிட்டன. அமைச்சருக்கே இந்த கதியா?  


51 இன் ஒன் மாங்காய் மரம்!

மஸ்கட்டிலிருந்து மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலுள்ள வாஷிம் என்ற தன் சொந்த கிராமத்துக்கு 2001 ஆம் ஆண்டு திரும்பிய ரவி மார்செட்வாருக்கு புத்தி பிசகிவிட்டதா என்றுதான் அவரின் குடும்பம் உட்பட சொந்தங்களுக்கும் டவுட். பின்னே? பத்து ஆண்டுகள் எஞ்சினியராக வேலை செய்தவர், திடீரென தங்களின் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்போகிறேன் என தடாலடியாக பேசினால் எப்படி?

தன் தந்தையின் சமூகசெயல்களை சாம்பிளாக எடுத்துக்கொண்டு, கான்ஃபிடன்டாக தன் நிலத்தில் மாமரங்களை விவசாயம் செய்து சாதித்திருக்கிறார். இதில் சாதனை என்ன? ஐம்பது வயதான மரத்தில் 51 வெரைட்டிகளை விளைவித்து 51 இன் ஒன்னாக மாமரத்தை மாற்றி, சீசனில் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் வருமானத்தை 30 ஆயிரம் ரூபாயாக மாற்றியதில் பின்னால் இருக்கிறது மகேஷின் ஸ்மார்ட்புத்தி. கிர் மாடுகளை வளர்ப்பது, ஜீரோபட்ஜெட் விஞ்ஞானி சுபாஷ் பாலேகரின் விவசாயமுறை ஃபாலோ செய்ததோடு அரசு திட்டங்களையும் அலைந்து சேகரித்து தன் ஊருக்கே பகிர்ந்து நம்பிக்கையிழந்த விவசாயிகளை  தேற்றும் மகேஷ், "விவசாயம் குறித்த விழிப்புணர்வு அவசியத்தேவை" என்கிறார் உறுதியுடன். தலைவன் இருக்கின்றான்! 


இஸ்‌ரோ பாடும் பாட்டு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி, யோகி பி. மட்டும்தான் இசை ஆல்பம் பண்ணனுமா? நாங்க பண்ணமாட்டோமா இறங்கி அடித்திருக்கிறது இஸ்‌ரோ. யெஸ். இஸ்‌ரோ விஞ்ஞானிகளின் இசை வீடியோதான் இணையத்தின் தற்போதைய ஹிட் ஹாட் ஆல்பம்.

இந்தியா சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று யூட்யூபில் இஸ்‌ரோவில் பணியாற்றும் 20 ஆராய்ச்சியாளர்கள் Rock@band என்ற பெயரில் பாட்டு ஒன்றை பதிவேற்றி சாதித்திருக்கிறது. என்ன பாட்டு அது? தேசபக்தி பாட்டுதான். அரபிக்கடலோரத்தில் 18 மாதங்களுக்கு மேலாக கால்ஷீட் போட்டு ஷூட் செய்து எடுத்த பாடலில் புதிய வன்முறையில்லாத இந்தியா பிறப்பதையும், அடுத்த ஆண்டு ப்ராஜெக்டான சந்திரயான் -2 பற்றிய எக்கச்சக்க கனவுகளும் நிறைந்த வீடியோ பாடல் இது. எஞ்சினியர்கள் அசோசியேஷன் ஆதரவுடன் எடுக்கப்பட்ட வீடியோவுக்கான செலவு ரூ.10 ஆயிரம். இஸ்‌ரோவில் பாட்டுச்சத்தம் கேட்குதா?

 பைலட் ஃபேமிலி 100!

பறவை போல வானில் பறக்க அனைவருக்கும் ஆசைதான். டெல்லியின் பாசின் குடும்பத்திற்கு அந்த ஆசை மூன்று தலைமுறையாக, பாரம்பரியமாக  நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

1954 ஆம் ஆண்டு ஜெய்தேவ் பாசின் பைலட்டானதிலிருந்து, அவரது மகன் ரோகித், மருமகள் நிவேதா, இவர்களின் பிள்ளைகள் இருவர் அனைவருமே பைலட் ட்ரெஸ் போட்ட வெள்ளுடை வேந்தர்கள்தான். டீன்ஏஜ் வயதில் ரோகித் தன் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் இருக்கும்போது அவரது தந்தை ஜெய்தேவ், நேரே விமானப்படை அப்ளிகேஷனை ஃபில்அப் செய்ய, பார்ட்டிக்கே சென்றுவிட்டார்அப்போது வானில் ஏறிய ரோகித் பின்பு கீழே இறங்கவேயில்லை. மனைவி நிவேதாவும் வான்புலிதான். ஏர்பஸ் 300, போயிங் 737 என இவரின் கைபடாத  விமானங்களே கிடையாது. இப்படி எப்போதும் கழுகு போல வானிலேயே ரவுண்டி கட்டி அடித்தால் குடும்பம்? மாதத்திற்கு 5 நாட்கள் ஒன்றாக சந்திப்பார்களாம். அடுத்து நிஹாரிகாவுக்கு பைலட் வரன் பார்த்து வருகிறார்களாம். வானத்திலேயே ரிசப்ஷன் வெச்சுக்கலாம்!     

கேரட்டில் என்கேஜ்மெண்ட் மோதிரம்!

தலையில் சீப்பு, காதில் பேனா, மூக்கில் கண்ணாடி இதையெல்லாம் திடீரென  வைத்துக்கொண்டு வீடு எங்கும் தேடுவது உலக ட்ரெண்ட். கனடா லேடி இந்த லிஸ்டில் மோதிரத்தையும் இணைத்துள்ளார். நடந்தது என்ன?

கனடாவைச் சேர்ந்த மேரி கிராம், தன் பண்ணை நிலத்தில் கேரட்டுகளை உற்சாகமாக விதைக்கும்போது தன் என்கேஜ்மெண்ட் மோதிரம் நழுவியதை கவனிக்கவில்லை. வீட்டுக்கு வந்தபின்தான் கையில் ஏதோ குறைவதாக தோன்ற, ஐயோ என அலறியபடி கையைப்பார்த்தால் மோதிரத்தை காணோம்! கணவர் நார்மனிடம் எப்படியோ மழுப்பி சமாளித்துவிட்டார். ஆனாலும் குற்றவுணர்வு தீரவில்லை. தற்போது அவரது மருமகள் தோட்டத்தில் கேரட்டை அறுவடை செய்யும்போது, கேரட்டிலிருந்து மோதிரத்தை மீட்டு மேரிக்கு சாந்தி தந்துவிட்டார். மேரியின் கணவர் நார்மன் கைலாசம் சேர்ந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது மோதிரம் தொலைந்து எவ்வளவு நாட்கள் ஆச்சு? 13 ஆண்டுகள். உலக மகா லேடி! 
ிசப்ஷன் வெச்சுக்கலாம்!     

எலக்ட்ரிக் பில் ஷாக்

உலகில் பில், வரி போடுவதில் இந்திய அரசுக்கு  நிகரான சமர்த்து யாருக்கும் கிடையாது. ஜார்கண்ட்டைச் சேர்ந்தவருக்கும் மின்சார வாரியம் அப்படித்தால் கர்மசிரத்தையாக மின்கட்டண பில்லை அனுப்பியது. அமவுண்டை பார்த்தவருக்கு தலையை கிறுகிறுத்துவிட்டது.  பல்ப் ப்யூஸ் போன கதை இதோ!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிஆர் குஹா என்பவர்தான் அந்த அப்பாவி பில்தாரர். அவரது வீட்டிலுள்ள மூன்று அறைகளில் மூன்று பேன்கள், மூன்று ட்யூப்லைட்டுகள், ஒரு டிவி உள்ளது. இதற்கு எப்படி இவ்வளவு பெரிய அமவுண்ட் கட்டவேண்டி வரும் என பதறி பாய்கிறார் குஹா. "என் அம்மா நீரிழிவு நோயாளி, அப்பாவுக்கு பிரஷர் எனவே அருகிலுள்ளவர்களின் சதியால் இப்படி நடந்துள்ளது" என பேசுகிறார் குஹாவின் மகளான ரத்னா பிஸ்வாஸ். சரி இப்படி இவர்கள் பதறி பேசும் மின்வாரியத்தின் பில்தொகைதான் எவ்வளவு? 3,800 கோடிதான் ப்ரோ! 


சல்யூட் இந்தியா!

கருப்புபணத்தை ஒழிப்போம் என செங்கோட்டையில் பிரதமர் மோடி மைக் வளையும்படி ஆக்ரோஷமாக பேசி புதிய இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பித்தது ஓகே. செயல்பாட்டில் நாம் எப்படி? ஆர்ப்பரிக்கும் தேசபக்தி அலையில் வெள்ளத்தில் தடுமாறும் வடகிழக்கு மாநிலங்களை மறந்துபோனதை நினைவுபடுத்தியுள்ளது  சமூகவலைதள போட்டோ ஒன்று.

அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள நஸ்காரா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மிஷனூர் ரஹ்மான் போட்ட போட்டோதான் அது. மூன்று சிறுவர்களோடு ஆசிரியர் தேசியக்கொடியை ஏற்றும் புகைப்படம் அது. விஷயம் அதல்ல. அசாமில் வெள்ளம் பெருக்கெடுத்து இடுப்பளவு ஓட. தேசியக்கொடிக்கு விறைப்பாக நின்று சல்யூட் அடித்ததுதான் பரிதாப காட்சி. 170 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் வெள்ளம் புகுந்ததால் பள்ளி லீவ். தனது ஃபேஸ்புக் பதிவில், "இந்த போட்டோவே எங்களது நிலையை உணர்த்தியிருக்கும் எங்கள் வாழ்வுக்கு உதவுங்கள்" என எழுதியிருப்பது பலரையும் நெகிழச்செய்திருக்கிறது


 பிளாஸ்டிக் டூ பெட்ரோல்!

இனி பிளாஸ்டிக் இருந்தால் போதும் வண்டியை எவரெஸ்ட் வரை ஓட்டலாம் என்கிற கான்ஃபிடன்டை தந்துள்ளார் மனவாடு தேச எஞ்சினியர் ஒருவர். யார் அவர்?

ஹைதராபாத்தின் மெக்கானிக்கல் எஞ்சினியரான சதீஷ்குமார், பிளாஸ்டிக்கிலிருந்து சிந்தடிக் எரிபொருளை கண்டுபிடித்து சாதித்திருக்கிறார். " 500 கிலோ பிளாஸ்டிக்கின் மூலம் 400 லிட்டர் எரிபொருள் நிச்சயம்" என்று புன்னகைக்கும் சதீஷ் இம்முறைக்கு பிளாஸ்டிக் பைரோலிஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.

"இம்முறைக்கு நீர் தேவையில்லை, அதோடு இதில் கழிவு நீரும் வராது. இது காற்றையும் மாசுபடுத்தாது" என நம் கையில் பிராமிஸ் செய்பவர், 50 டன் பிளாஸ்டிக் கழிவுகளை இதற்கு பயன்படுத்தியுள்ளார்.  2016 இல் தொடங்கிய இந்த ப்ராஜெக்டை தொடர்ந்து செய்தால் ஒரு லிட்டர் எரிபொருளை விற்கும் விலை எவ்வளவு தெரியுமா? ரூ.50

ace:none'> 
-align:none;text-autospace:none'> 
 இறுதிச்சடங்கு செய்யும் பெப்பர் ரோபாட்! -ரோனி

புத்தம் புதுசாக மூளையைப் பிழிந்து கண்டுபிடித்து ப்ரீமியம் என லேபிள் அடித்து மார்க்கெட் செய்வதில் ஜப்பான் சூப்பர் கில்லி. டோக்கியோவில் அறிமுகப்படுத்தியுள்ள பெப்பரும் கூட அப்படித்தான்.

சாஃப்ட்பேங்கின் ஹியூமனாய்டு ரோபோவான பெப்பர் தொழில்கண்காட்சியில் சூப்பராக அறிமுகமானது என்ன பெயரில் என்பதுதான் விசேஷம். இறுதிச்சடங்கு செய்யும் புத்த பாதிரி வேலையை மந்திரம் சொல்லி, ட்ரம்ஸ் முழக்கி சமர்த்தாக செய்கிறது இந்த பெப்பர் ரோபோ. இறுதிச்சடங்கு செய்யும் புத்த பாதிரிகள் விலைவாசியை சமாளிக்க பல்வேறு வேலைகளுக்கு சென்றுவிட அந்தப் பற்றாக்குறையை சமாளிக்க வந்துள்ளது பெப்பர். புத்த பாதிரிகளுக்கு தரும் ஃபீஸ் 2200 டாலர்கள் என்றால், பெப்பரின் விலை 450 டாலர்கள்தான்.

நன்றி: குங்குமம் வார இதழ்