அறிவியல் பிட்ஸ் - முத்தாரம் ஸ்பெஷல்




மரங்கள் சைவமா? அசைவமா?

கற்பகம் மெஸ்ஸில் சைவ மனிதர்களையும், ஹோட்டல் பாண்டியனில் அசைவ மனிதர்களையும் பார்க்கலாம். ஆனால் மரங்கள் எதில் சேரும்? "தாவரங்கள் உறுதியாக வெஜிடேரியன் கிடையாது" என உறுதியாக பேசுகிறார் ஓஹியோவிலுள்ள மியாமி பல்கலையின் தாவரவியல் பேராசிரியர் நிகோலஸ் மணி. தாவரங்கள் அசைவமா எப்படி? "நேரடியாக சாப்பிடுவதில்லை ஆனால் பூஞ்சைகளின் மூலமாக அதை செய்கின்றன" என்கிறார் நிகோலஸ்.


சூரியன் மூலம் கார்பன்டை ஆக்சைடும், ஆக்சிஜனையும் பெறுகின்றன. கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றை பெற மரங்கள் பூஞ்சைகளை நாடுகின்றனதமக்கான உணவை பூஞ்சைகள் இறந்த சிறிய புழுக்களின் வழியாக பெறுகின்றன. (.கா:காளான்) பூஞ்சைகள் சர்க்கரையை ஒளிச்சேர்க்கை மூலம் பெற முடியாது என்பதால், மரங்களுடன் இணைகின்றன. மரங்களுக்கு பூஞ்சைகள் சில சத்துக்களை தந்து, ஒளிச்சேர்கை பலனான சர்க்கரையை மரங்களிடமிருந்து பரஸ்பர சகாயமாக பெறுகின்றன. இதில் யார் வெஜ், யார் நான் வெஜ் நீங்களே சொல்லுங்கள்.

2
ஒளியை கன்ட்ரோல் செய்யும் Voicy!

லைட்டுகளின் ஒளியைக் குறைக்க ஸ்விட்சுகளை பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அப்படித்தான் இனி லைட்டுகள் ஒளிரும், அணையும் அதற்கு உதவுகிறது வாய்ஸி எல்இடி கன்ட்ரோலர்.

அலெக்ஸா, சிரி ஆகியவற்றோடு இணைத்து பயன்படுத்தலாம் என்பதால், தனி ஆப் தேவையில்லை. லைட்டுகளுக்கு பெயர் வைத்து அதை அணை என்றால் போதும். லைட்டுகளை அணையும், பின் ஆன் சொன்னால் ஒளிரும். இதில் அலாரம் செட் செய்யலாம். வைஃபை மூலம் எளிதாக கலர் காம்பினேஷன் செட் செய்து இசைக்கு ஏற்ப ஒளியை செட் செய்து அசத்தலாம்.

வாய்ஸியை முதலில் பிளக்கில் பொருத்தி, பின் அதற்கான செட்டிங்கை ஸ்மார்ட்போனில் செய்துகொண்டு, தேவையான நேரத்தில் லைட்டை சிம்பிளாக மாற்றியமைத்து  கொண்டாடலாம். லைட்டை அணைத்துவிட்டோமா இல்லையா என்ற கவலை இனியில்லை. விலை ரூ. 2955.



 டைப் செய்ய ஈஸி மொழி எது?

சீனமொழிதான். தகவல்களை சிறிய குறியீடுகளில் எளிதாக சொல்லிவிடலாம். பிறமொழிகளை விட இம்மொழியை எழுதினால் இடமும் நிறைய மிச்சமாகும். பலரும் கீபோர்டு மூலம் எழுதும் இந்த காலத்தில் வளவளவென எழுதினால் எப்படி? சீனமொழியின் டைப் டூலான பின்யின் மூலம் சில எழுத்துக்களை டைப் செய்தாலே முழுவார்த்தையும் அமைந்துவிடும் எ.கா: சாப்பிட்டு விட்டீர்களா? என்பதற்கு nclm என்ற எழுத்துக்களை தட்டினால் போதும். பியூட்டிஃபுல் என்ற ஆங்கில சொல்லுக்கு சீனமொழியில் இரு எழுத்துக்கள் போதும்.

குறைந்த எழுத்துக்கள் கொண்ட மொழி என்பது கணினியில் பயன்படுத்த எளிதானது. அதற்கான மென்பொருட்களை தயாரிப்பதும் எளிது என்கிறார் ரோசெஸ்டர் பல்கலையில் மொழியியல் துறை தலைவர் ஸ்டீவன் பியான்டடோஷி.

2011 ஆம் ஆண்டு  ஆய்வாளர் மார்செலோ மாண்டெமுரோ மான்செஸ்டர் பல்கலைக்கழக உதவியுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஃபின்னிஷ், டகலாக், சீன மற்றும் சுமேரிய மொழிகளை ஆராய்ச்சி செய்தார். அதில் சுமேரியா, எகிப்து, சீனம் ஆகியவை பயன்படுத்த எளிதானவை என கண்டறியப்பட்டன. அதிலும் சுமேரிய, எகிப்து மொழிகள் டைப் செய்ய இலகுவான வேகமான மொழி என்று கண்டறியப்பட்டது.  
bsp;
ஹார்வி தாண்டவம்!

அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி புயல், டெக்ஸாஸ் மாநிலத்தில் 9 ட்ரில்லியன் காலன் நீரை மழையாக கொட்டியுள்ளது. மெக்சிகோ வளைகுடாவில் சாதாரணமாக எதிர்கொள்ளப்பட்ட ஹார்வி தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முந்தைய புயல் ரெகார்டுகளை முறியடித்தது.

 "சூழல்மாற்றத்தால் இயற்கையாக தோன்றும் புயல்களின் அளவு அதிகரிக்கலாம்" என்கிறார் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தின் பருவநிலை ஆய்வாளரும், பேராசிரியருமான கேத்தரின் கேஹோ. புயலுக்கு நீர் ஆவியாதல் தேவை. மெக்சிகோ வளைகுடாவில்  2.7-7.2 ஆக புயலுக்கு ஒருவாரம் முன்பு வெப்பநிலை நிலவியிருந்தது. கடலின் மட்ட வெப்பம் 1 டிகிரி உயர்ந்ததால் ஈரப்பதத்தின் அளவு 5% அதிகரித்துள்ளது. கடல்நீர்மட்டமும் 2100 ஆம் ஆண்டுக்குள் 2.4 மீ உயரும் என NOAA நிறுவனத்தின் ஆய்வு எச்சரிக்கிறது. "பொதுவாக மழைமேகங்களை காற்று கடல்புறமாக ஒக்லஹாமாவுக்கு வடக்கே தள்ளிச்செல்லும். ஆனால் இந்தமுறை அவ்வாறு நடக்கவில்லை" என வியக்கிறார் கடல்சூழல் ஆராய்ச்சியாளர் இம்மானுவேல். எதிர்கால புயல்களை பற்றி ஆராய ஹார்வி உதவக்கூடும்.

மைக்ரோசாஃப்டின் ப்ரெய்ன்வேவ் முயற்சி!

மைக்ரோசாஃப்ட் தனது AI முயற்சிகளை மேம்படுத்தும் விதமாக ப்ரெய்ன்வேவ் எனும் ஹார்ட்வேரை தயாரித்துள்ளது. இது இன்டெலின் ஸ்டேடிக்ஸ் 10 சிப்பில் விரைவில் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.

AI முறையில் கணினிகளுக்கு பல்வேறு விஷயங்களை எளிதில் கற்கும்படியான புரோகிராமை எழுதும்வகையிலான  ப்ரெய்ன்வேவ் ஹார்ட்வேரை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. "கிளவுட் முறையில் கோரிக்கைகளை சரிபார்த்து அனுப்பும் AI இது. தகவல்களை தேடுவது, வீடியோக்கள், பயனர்களுடன் உரையாடுவது என்பதை இந்த அமைப்பு நேர்த்தியாக செய்யும்" என்கிறது மைக்ரோசாஃப்டின் அறிக்கை. இந்த மாடல் பிற மாடல்களை விட கொஞ்சம் பெரிய சைஸ். இதனை சோதிப்பதற்கான தகவல் மையங்களை மைக்ரோசாஃப்ட் பல்வேறு இடங்களிலும் அமைத்து வருகிறது.  

 தொகுப்பு: கிறிஸ் வில்சன், நாராயணன் மாரிமுத்து
நன்றி:முத்தாரம் வார இதழ்