பசுமை பேச்சாளர்கள் 21 ஏஞ்சலா மெர்கெல் ச.அன்பரசு



பசுமை பேச்சாளர்கள் 21
ஏஞ்சலா மெர்கெல்.அன்பரசு


ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்கெல், சூழல் திட்டங்களின் நம்பிக்கை கொண்டு அதனை மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் பசுமை அரசியல் பெண்மணி.
ஏஞ்சலா மெர்கெல்(1954 ஜூலை 17) வேதி இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற விஞ்ஞானி. 1989 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர், 2000  ஆம் ஆண்டில் CDU கட்சித்தலைவரும், 2005 ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மனி அதிபராகவும் உள்ளார். இவர் ஜெர்மனியின் முதல் பெண் அதிபரும் கூட.

புதுப்பிக்கதக்க ஆற்றல் நாடாக ஜெர்மனியை 2050 ஆண்டுக்குள் மாற்றவேண்டும் என அறிவித்தவர், இதில் வேலைவாய்ப்புகளும் ஏராளம் என மக்களிடையே உரையாற்றியதோடு அதில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி ஆச்சரியப்படுத்தினார். இன்று சூழல் பொருளாதாரத்தில் நம்பர் 1 நாடு ஜெர்மனி. அதோடு ஐரோப்பாவின் அணு உலை சக்திக்கு எதிராக, பசுமை ஆற்றலை உருவாக்க அணுஉலைகளை கைவிடும் முடிவை ஏஞ்சலா எடுத்தார். "மிக வேகமாக தொழில்மயமாகும் நாடுகள் தங்களுடைய சூழல்கேடுகளை குறைத்தாலே சிறிய நாடுகளும் மாசுபாட்டைக் குறைக்க முயற்சி எடுக்கும் " என்பது ஏஞ்சலாவின் வாக்கு.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்திற்கான சட்டத்தை கொண்டு வந்து அதன்மூலம் மிக குறைவான செலவில் மின்சாரத்தை தயாரித்ததோடு, 10% க்கும் மேலான மின்சார பயன்பாட்டையும் குறைத்தது ஏஞ்சலாவின் பசுமைச்சாதனை.

உலகில் கார்பனை அதிகளவில் வெளியிடும் ஆறாவது பெரிய நாடாக ஜெர்மனி இருந்தாலும், ஏஞ்சலாவின் புதுப்பிக்கும் ஆற்றல் மூலங்களின் மீதான முதலீட்டிற்கு நான்கு மடங்குக்கு மேல் லாபம் கிடைப்பது உறுதி. ஜெர்மனியில் 23 ஆயிரம் காற்றாலைகளும், 1.4 மில்லியன் சோலார் பேனல்களும் நிறுவப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுப்படி காற்றாலை சோலார் மூலம் 74% மின்னாற்றலை பெற்றதோடு இதனை அதிகரிக்கவும் அரசு முயற்சித்து வருகிறது. 2020 இல் தன் நாட்டின் கார்பன் மாசை 40% மாக குறைக்க பிளான் செய்து வரும் ஏஞ்சலா, 2022 க்குள் மிச்சமிருக்கும் 17 அணு உலைகளையும் மூட முடிவு செய்திருப்பது பிற நாடுகளுக்கு முன்னுதாராண சூழல் நடவடிக்கை.
நன்றி:
முத்தாரம் வார இதழ்.  


      

பிரபலமான இடுகைகள்