புத்தக விமர்சனம் - கோமாளிமேடை டீம்

புத்தக விமர்சனம்

கி.மு கி.பி 
மதன்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.170

கி.மு கி.பி- ஆசிரியர் மதன்
கி.மு. கி.பி நூல் உலகம் தோன்றியதிலிருந்து நாகரிகம், கலாசாரம், முக்கியமான மனிதர்கள் என பலரையும் எளிய மொழியில் அறிமுகம் செய்கிறது. சிறுவயதில் சமூக அறிவியல் புத்தகத்தில் படிப்பது போன்ற கடுநடையில் எழுதாமல் சிம்பிளாக ஜாலி மொழியில் அறிமுகம் செய்யும் வரலாற்று நூல் என்பது இதனை யாரும் எடுத்து வாசிக்கலாம் என்ற தெம்பை தருகிறது. 

இதில் நேர்த்தியான புகைப்படங்களோடு செய்தியை நறுக்கென் சொல்லிச்செல்வது சுவாரசியமாக இருப்பதோடு, அத்தியாயங்களும் கடலென நீளாமல் வாசகனின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. பரபரவென புல்லட் ரயில் வேகத்தில் அத்தியாயங்கள் கேலியும் கிண்டலும் நடுவில் சுவாரசியங்களும் திடுக் திருப்பங்களும் கார்டூனிஸ்ட் - எழுத்தாளர் மதனின் தனிச்சிறப்பு. 

அக்நெடான், டூட்டாங் ஆமன் எனும் மன்னர்கள் பற்றிய பகுதி அதி சுவாரசியம். டூட்டாங் கொல்லப்படும் பகுதியை மதன் விவரித்திருப்பது , ஹாஸ்பிடலில் 70 நாட்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு பின் இறப்பு அறிவிக்கப்பட்ட அமரர் ஜெ. ஜெயலலிதாவின் இறப்பை நினைவுபடுத்துவது  தற்செயலானதாக இருக்கலாம். ஆனால் அப்படியே கமா மாறாமல் அச்சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருப்பது வரலாறு ரீஎன்ட்ரி ஆவது நிச்சயம் என நிரூபிக்கிறது. 

வரலாற்றை இவ்வளவு சிம்பிளாக எழுத முடியுமா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்திய  நூல் கி.மு கி.பி. 

நூல் உதவி: கே.என்.சிவராமன்(குங்குமம் முதன்மை ஆசிரியர்)