புத்தக விமர்சனம் - மனிதனும் மர்மங்களும்(மதன்)
மனிதனும் மர்மங்களும்
மதன்
கிழக்கு
ரூ.150
மனிதனின் மூளையின் திறன்கள், அவற்றை பயன்படுத்தி ஹிப்னாடிசம், சைகோகைனெசிஸ்,டெலிபதி,டெலிபோர்டேஷன் உள்ளிட்ட விஷயங்கள் செய்யமுடியுமா என்ற கேள்வி முன்னர் பலருக்கும் இருந்தது. ஆனால் மெல்ல பல்வேறு விஷயங்கள் நடைபெற தொடங்கியபோது பலரும் அதனை நம்பத்தொடங்கினார்கள். உலகில் நடந்த முக்கியமான அமானுஷ்ய சம்பவங்களின் தொகுப்பு இந்நூல். குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான தொடர் இது.
வெறும் அமானுஷ்யம் என்று பயமுறுத்தாமல் அதுதொடர்பாக மருத்துவர்கள் பேசியது , அதனை எதிர்கொண்ட விதம் என துல்லியமாகவும் சிம்பிளாகவும் எழுதியது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. அறிவியலும், மூளைக்கு எட்டாத சக்திகளும் சந்திக்கும் இடங்கள் இந்நூலில் அதிகம்.
தேஜா வூ நிகழ்வுகள், ஆவிகளின் வகைகள், இஎஸ்பி பவர், எதிர்காலம் சொல்லும் கனவுகள், டெலிபதி சம்பவங்கள், மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்ட மனதின் ஆற்றலை சொல்லும் நிகழ்வுகள் என அத்தனை செய்திகளும் அட்டகாச தலைப்புடன் படிக்க வசீகரமாக உள்ளது. எதையும் அலட்சியப்படுத்தமுடியாதபடி தகவல்கள் துல்லியமாக உள்ளன என்பதோடு அவை வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டிருப்பது ஆசம்.
யூரிகெல்லர் சாகசங்கள், அவரைக்காய், மீன்கள், தவளை ஆகியவை மழையாய் கொட்டுவது, வயிற்றில் தீப்பிடித்து இறப்பது ஆகிய அத்தியாயங்கள் பெரும் திகிலூட்டுவது நிஜம். பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகள் இன்னும் கிரிப்பாக இருந்திருக்கலாம். பொதுவான செய்திகளாக போனதால் க்ளைமாக்ஸ் பகுதி ஊசலாட்டமாக இருக்கிறது. அறிவியல் பிளஸ் அமானுஷ்யங்களை அறிய வாசிக்க வேண்டிய நூல் மனிதனும் மர்மங்களும் என்றால் அதில் டவுட்டே இல்லை.
-கோமாளிமேடை டீம்