விண்வெளியில் நம்பர் 1!-ஜெ.திருமால்முத்து






விண்வெளியில் நம்பர் 1!-ஜெ.திருமால்முத்து


நீல் ஆம்ஸ்ட்ராங், யூரி ககாரின், லைகா நாய் உள்ளிட்டவை விண்வெளிக்கு சென்ற கதைகளெல்லாம் நிலவில் வடைசுட்ட பாட்டிக்கே அலுத்துப்போனவை. வேறென்ன புதுசு இருக்கு! பார்ப்போமா?

விண்வெளியில் ஈக்கள்!

லைக்கா எனும் நாய் சோவியத்தின் விண்கலமேறி தன் பெயரை ஹிஸ்டரியில் அழுத்தமாக பதித்துவிட்டது. ஆனால் லைகா மட்டுமே முதலிடம் கிடையாது. 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவின் V2 ராக்கெட்டில் சீட் ரிசர்வ் செய்து பின் பூமியும் திரும்பி சாதித்தவை பழ ஈக்கள் என்றால் நம்புவீர்களா?

முதல் விண்வெளி பயணி!

அமெரிக்க தொழிலதிபரான டென்னிஸ் டில்டோ 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று, தன் 20 மில்லியன் சொத்தை உலகறிய கரைத்து விண்வெளியிலுள்ள சர்வதேச விண்வெளி மையத்தை தொட்டு வந்த முதல் விண்வெளி பயணி.

நிலவின் முகம் பார்த்த மனுஷகுமாரர்கள்!

அப்போலோ டீமின் 8 பயமறியாத நபர்கள். 1968 ஆம் ஆண்டு டிச.24 இல் அப்போலோ 8 மிஷனில் பூமியின் வட்டப்பாதை கடந்து பூமியையும், நிலவையும் முதன்முதலாக விண்வெளியில் பார்த்தார்கள். வில்லியன் ஆண்டர்ஸ் எடுத்த பூமியின் படம்தான் இன்றுவரை ஆல்டைம் ஃபேவரிட்.

விண்வெளியில் முதல் பெண்!

யூரி ககாரின் விண்வெளிக்கு சென்ற முதல் என்ற பெருமை இருக்கட்டும். முதல் பெண் யார் தெரியுமா? வேலன்டினா டெரஸ்கோவா. பயணித்த ஆண்டு 1963, ஜூன் 16.

விண்வெளியின் முதல் இறப்பு

1971 ஆம் ஆண்டு ஜூன் 30 சோயுஸ் 11 விண்கலத்தை ரெகவரி குழு திறந்தபோது மூன்று ரஷ்ய வானியலாளர்களும்(ஜார்ஜ் டோப்ரோவோஸ்கி, விலாடிஸ்லாவ் வோல்காவ், விக்டர் படாசாயேவ்) இறந்து கிடந்தனர். பூமியின் பரப்பிலிருந்து 168 கி.மீ(கடல் பரப்பிலிருந்து 100 கி.மீ.) மேலே நடந்த கோரமான விபத்து இதுவே. விண்வெளி தொடங்கும் இந்த இடத்திற்கு கார்மன் லைன் என்று பெயர்.    

நிலவோடு விளையாட்டு!

நிலவில் கால்பதித்தவர், தொட்டவர், மிதந்தவர் என பலர் இருந்தாலும் அமெரிக்க வானியலாளரான ஆலன் ஷெப்பர்டு நிலவில் கோல்ஃப் விளையாடி சாதித்தவர்.

விண்வெளியில் மாரத்தான்!

ஜீரோ புவியீர்ப்பு விசையில் ட்ரெட்மில்லில் 42கி.மீ ஸ்பீடில் ஓடுவது சாத்தியமா? அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் 2007 ஆம் ஆண்டு போஸ்டனில் நடந்த மாரத்தானில் கலந்துகொண்டு பந்தயதூரத்தை 4 மணி 24 நிமிடங்களில் கடந்திருந்தார்.   

 நன்றி: முத்தாரம் வார இதழ்
.







பிரபலமான இடுகைகள்