ரியலா? ரீலா?




ரியலா? ரீலா?

ரீல்: திருமண ஆசீர்வாத அரிசி பறவைகளைக் கொல்லும்.
ரியல்: அரிசியால் பறவைகள் இறக்கும் என்பது செம டூப். பறவைகளின் இறப்பு பயத்தால் எகிப்தின் தொன்மையில் உருவான ஆசீர்வாத அரிசி கைவிடப்பட்டு இன்று திருமணங்களில் மிகச்சிறிய பந்துகள் தம்பதிகள் மீது வீசப்படுகின்றன. 2002 இல் கென்டக்கி யுனிவர்சிட்டி செய்த ஆய்வில், பறவைகள் தின்னும் விதைகள் அரிசியை விட நிறைவு தருகின்றன என்று கூறுகிறது.

ரீல்:வௌவால்கள் குருடானவை
ரியல்: அப்புறம் ஏன் வௌவால்களுக்கு கண்கள் இருக்கவேண்டும்? வௌவால்களின் கண்களால் பார்க்க முடிவதோடு, கூடுதலாக எதிரொலி முறையையும் பயன்படுத்துகிறது. கண்களைவிட எதிரொலி டெக்னிக் இன்னும் தெளிவைத் தருகிறது.

ரீல்: பறவைகுஞ்சுகளை மனிதர்கள் கையாண்டால் தாய்ப்பறவை அவற்றை கைவிட்டுவிடும்.

ரியல்: பறவைகளுக்கு உடல்மண வேறுபாடு தெரியாது. குஞ்சுகள் தனிதது தாயால் விடப்படுவது அவை பறப்பதற்கான பயிற்சிக்காகவே. இது பொய்யான கருத்து.   


ரியலா? ரீலா?

ரீல்: ஓநாய்க்கூட்டத்துக்கு தலைமை தாங்கும் ஓநாய்க்கு ஆல்பா என்று பெயர்.

ரியல்: ஆல்பா, பீட்டா மனிதர்களின் புரிதலுக்கு. ஓநாய்க்குடும்பம் மனிதர்களின் ஃபேமிலி போலவேதான். தாத்தா,பாட்டி, அண்ணன், தங்கை என முறையாக இருக்கும். ஓநாய் தனக்கென ஃபேமிலி அமைக்கும்வரை மூத்தோர் சொல் கேட்டு நடக்கவேண்டும்.

ரீல்: பேன்கள் அழுக்குத்தலையில்தான் வாழும்.

ரியல்: வகுப்பில் பெண்தோழியோடு ஜாலியாக சாய்ந்தாடினாலே தலையில் பேன் வந்துவிடும். நல்ல, நாறிய கூந்தல் என்ற பாகுபாடு பேன்களிடம் கிடையாது. முடிந்தவரை குடும்பத்தை பெருக்கி, அடுத்த தலைநோக்கி நகர்ந்துவிடும்.

ரீல்:பிட்புல் வகை நாய்கள் மிகவும் ஆபத்தானவை.

ரியல்: நாய்கள் மனிதர்களை தாக்கினால் உடனே இப்படி கூறிவிடுவார்கள். பிட்புல் வகை நாய்களுக்கு கொடுக்கும் ட்ரெய்னிங்கால், இயல்பிலேயே இருக்கும் ஆக்ரோஷம் கூடிவிடுகிறது அவ்வளவுதான். German shepherds, rottweilers, dobermans, chows ஆகிய நாய்களும் பிற நாய் வகைகளை விட கொஞ்சம் காரம் ஜாஸ்தியானவை.    

 ரியலா? ரீலா?

ரீல்: விண்வெளியில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது ஸ்புட்னிக் விண்கலம்.
ரியல்: 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று ஸ்புட்னிக் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு பூமியை 3 மாதங்கள் ஸ்புட்னிக்1 சுற்றி வந்தது. ஆனால் இதற்கு முன்பே இங்கிலாந்து, பிரான்ஸ் பல ராக்கெட்டுகளை செய்து இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தியுள்ளன. .கா ஜெர்மன் V2 ஏவுகணைகள்.

ரீல்: கண்ணாடி என்பது ஓர் திரவம்

ரியல்: பழமையான கட்டிடத்தில் கண்ணாடிகளின் கீழ்ப்புறம் தடிமனாக இருப்பதால் இப்படி பல புரளிகள். முந்தைய கால டெக்னாலஜிப்படி கண்ணாடி அடர்த்தி, தன்மை அப்படியிருந்தது. எனவே அடர்த்தியான கண்ணாடியை பொருந்தாத ப்ரேமில் அடைத்தால் அப்படி தெரியும்.

ரீல்: நம் உடல் நமக்கு மட்டுமே ஸ்பெஷலான சொந்தம்.
ரியல்: உடலின் பல்வேறு சதைமடிப்புகளில் வாழும் பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட நுண்ணுயிரிகளும் ரென்ட் கொடுக்காமல் வாழ்வது நம் உடலில்தான். உடலின் உருவான செல்களோடு, தாயிடமிருந்து வந்த செல்களும் உண்டு. உடல் உள்உறுப்புகள் உருவாவதும் இவ்விதம்தான். மண்ணீரலில் சுமங்கலி பாட்டியின் செல்களும், குடலில் சுப்ரமணி மாமாவின் செல்களும் கூட இருக்க சான்ஸ் உண்டு.     
 ரியலா? ரீலா?

ரீல்:செல்போனிலிருந்து வரும் மின்காந்த அலைகள் மருத்துவமனையிலுள்ள சாதனங்களை பாதிக்கும்.

ரியல்: செல்போன்கள் மருத்துவ சாதனங்களுக்கு ஒரு மீட்டர் தொலைவில் இருந்தால் அனைத்து சாதனங்களையும் அல்ல; குறிப்பிட்ட சில சாதனங்களை மட்டுமே 1.2% அளவு பாதிக்கும்.


ரீல்:Schizophrenia நோய் ஒரு மனிதருக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி தன்மையை ஏற்படுத்தும்.

ரியல்: ஸிப்ஸோபெரேனியா, மல்டிபிள் பர்சனாலிட்டி என்பது இருவேறு மனநோய்கள். கற்பனையான நடக்காத ஒன்றை நிஜமென நம்புவது ஸிப்ஸோபெரேனியா. மல்டிபிள் பர்சனாலிட்டி(DID) என்பது சிறுவயதில் ஒருவருக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்புகளின் பிற்கால விளைவு. ஒவ்வொரு கேரக்டருக்கும் குரல்,மேனரிசம்,பழக்கவழக்கம் என அனைத்தும் மாறுபடும்.

ரீல்:நாம் 10% மூளையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

ரியல்: பரமார்த்த குருவுக்கும் மூளையின் அனைத்து பார்ட்டும் பக்காவாக வேலை செய்யும். நீங்கள் தூங்கும்போதும்கூட மூளையின் சில பகுதிகள் இயங்கிக்கொண்டிருக்கும். மூளை விபத்தால் பாதிக்கப்பட்டாலும் அதில் வெறும் 10% பயன்படுகிறது என்று கூறமுடியாது.


தொகுப்பு: கிராண்ட் ரங்கன், சிவசாமி முருகேஷ்
நன்றி: முத்தாரம் வார இதழ்