ஹைப்பர்லூப் இந்தியா! -ச.அன்பரசு
ஹைப்பர்லூப் இந்தியா! -ச.அன்பரசுபெங்களூரு எஞ்சினியர்களின் ஃப்யூச்சர் சாதனை!
டெல்லி
டூ மும்பை - 1மணிநேரம், நியூயார்க் டூ வாஷிங்டன்
-29 நிமிஷங்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் டூ சான் பிரான்சிஸ்கோ -36 நிமிஷங்கள் போதும். இது ஃப்யூச்சரில் நாம் செல்லவிருக்கும் ஹைப்பர்லூப் பயணத்தின் ட்ராவல் டைம். நம்புங்கள். சொல்வது அனைத்தும் ஹைப்பர்லூப் கனவை எப்பாடு பட்டேனும் இவ்வாண்டே நிறைவேற்றத்துடிக்கும் எலன் மஸ்க் மீது சத்தியமாக உண்மை.
2015 ஆம் ஆண்டு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்,
உலகிலுள்ள அனைத்து எஞ்சினியர்களும் ஹைப்பர் லூப் டிசைனில் பங்கேற்க அழைத்தது.இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே டீம் பெங்களூரின் வொர்க் பென்ச்சர்ஸ் (எ) ஹைப்பர்லூப் இந்தியா மட்டுமே.
ஹைப்பர்லூப் என்ற போக்குவரத்து பற்றிய எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் ஆராய்ச்சி செய்து கற்று பெங்களூரைச்சேர்ந்த பொறியியல் குழு ஹைப்பர்லூப் மாடலை வடிவமைத்துள்ளது சாதனைதானே!
வொர்க் பென்ச் நிறுவனத்தின் இயக்குநரான அனுபமா கௌடாவின் வழிகாட்டுதலில் உருவான மாடலுக்கு ஆர்காபாட் என்று பெயர். திமிங்கலத்தின் உடல் ஷேப்பில் நெகிழ்வாக உருவாகியுள்ள ஆர்காபாட்,
மணிக்கு 483 கி.மீ
வேகத்தில் சீட்டாவாக பாயக்கூடியது. இது ஒலியின் வேகத்தில் பாதி.
கலிஃபோர்னியாவிலுள்ள ஹாதோர்ன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1 கி.மீ
நீண்ட ட்ராக்கில் 'ஹைப்பர்லூப்' மாடல்களை விரைவில் டெஸ்ட் செய்யப்போகிறார்கள். ஜப்பான் கேயோ பல்கலையின்
'கேயோ ஆல்பா', மேரிலாண்ட் பல்கலையின் UMD
லூப், ஸ்விட்சர்லாந்து ஸூரிச் பல்கலையின் ஸ்விஸ்லூப் உள்பட
24 டீம்கள் இதில் கான்ஃபிடன்டாக பங்கேற்றுள்ளன.
ஹைப்பர்லூப் என்ற கான்செப்டை
1904 ஆம் ஆண்டு உலகிற்கு முதன்முதலாக தன் எழுத்தின் வழியாக அறிமுகப்படுத்தியவர் ராபர்ட் கோடார்ட்.
பின்னர் இது தொடர்பான ஆராய்ச்சி விஷயங்களை 2013 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இத்திட்டத்தில் பங்கேற்க எஞ்சினியர்கள் மற்றும் தொழிலதிபர்களையும் அழைத்தார் ஸ்பேஸ்எக்ஸின் தலைவர் எலன் மஸ்க். இதன்பின்தான் உலகமெங்கும் ஹைப்பர்லூப் ஜூரம் தீயாய் பற்றிக்கொண்டது. ஏன் இந்தியாவின் நிதி ஆயோக்கின் திட்டங்களிலும் கூட ஹைப்பர்லூப் பிளான் உண்டு.
"ஹைப்பர்லூப் மாடலைப் பொறுத்தவரை இதுதான் சரி, இது தவறு என்று எதையும் கூற முடியாத சிக்கல் உள்ளது"
என்கிறார் வொர்க்பென்ச் குழுவின் பொறியாளர் குழு தலைவரான சைபேஷ் கர். இவர் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்.
தனது கோடை விடுமுறையில் ஆர்காபாட் டிசைன் டீமில் இணைந்துள்ளார். 90 லட்சம் ரூபாயை விழுங்கி உருவாகி வரும் ஆர்காபாட் திட்டத்திற்கான தொகை முழுக்க கிரவுட் ஃபண்டிங் மூலம் மக்களிடமிருந்தே திரட்டப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யத்தகவல். இதோடு அமெரிக்காவின் ஹைப்பர்லூப் ஒன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பும் கிடைத்துள்ளது திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது.
"நாட்டை உலக அரங்கில் பெருமைப்படுத்துவதோடு லட்சியத்திற்காக இரவும் பகலுமாக வேலை செய்யும் இந்த இளைஞர்களிடம் நாங்கள் கற்கவேண்டியது ஏராளம்"
என்று நெகிழ்ச்சியாகும் ரிப்பிள் டெக்னாலஜி இயக்குநர் ஹரிஷ் பழனி, ஏறத்தாழ 25 லட்சத்திற்கான வேலைகளை விலையின்றி ஹைப்பர்லூப் இந்தியாவுக்கு செய்துதந்துள்ளார். மிராக்கிள் எலக்ட்ரானிக்ஸின் ஜிதேந்திர தேவ்தா இக்குழுவின் டெக்னிக்கல் வழிகாட்டி.
இவர்கள் இளைஞர்களின் ஹைப்பர்லூப் மாடலை நம்பினாலும், ஸ்பான்சர்ஷிப் தேடும்போது பெரிதும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. "ஏனெனில் அப்போது எங்களிடம் தியரியாக ஐடியா ரெடி. ஆனால் ஸ்பான்சர்ஷிப் ஆட்களுக்கு காட்ட எந்த மாடலும் இல்லை. எனவே மாடலை சிரமப்பட்டு தயாரிக்கத்தொடங்கிய சில நாட்களுக்கு பிறகே ஸ்பான்சர்ஷிப் தொடர்பாக பேசத்தொடங்கினோம்." என ஆழமாக பேசுகிறார் ராஜஸ்தானின் பிட்ஸ் பிலானி பல்கலை மாணவரான பிரித்வி சங்கர்.
உலகெங்குமிருந்து பெறப்பட்ட 120 விண்ணப்பங்களில் ஒன்றாக ஹைப்பர்லூப் இந்தியா செலக்ட் ஆனது இந்தியராக பெருமை நிகழ்வு.
அமெரிக்காவின் கிழக்கு கடற்புரத்தில் ஹைப்பர்லூப் அமைப்பதற்கான பர்மிஷனை எலன்மஸ்க் அரசிடம் சாமர்த்தியமாக முன்னமே பெற்றுவிட்டார். செலக்ட் ஆகும் சூப்பர் டிசைனுக்கான பரிசு என்னவென்று ஸ்பேஸ்எக்ஸ் இன்னும் அறிவிக்கவில்லை. சாம்பியன் குழுவுக்கு ஹைப்பர்லூப் டிசைனில் வேலை செய்யும் சான்ஸ் கிடைக்கலாம். டிசைன் மாடலுக்கு பிறர் காற்று,
ஜெட் எஞ்சின் மூலம் காற்றாடிகளை சுழல வைக்க, இந்தியர்கள் எலக்ட்ரிக் மோட்டார்களை பயன்படுத்த்துகின்றனர். புழக்கத்திற்கு வந்தால் மக்கள் போக்குவரத்தில் மகத்தான சாதனை இதுவே.
ஹலோ ஹைப்பர்லூப்!
டெஸ்லா
மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கம்பெனி தலைவர் எலன் மஸ்க்
2013 இல் அறிவித்த சூப்பர்பாஸ்ட் ட்ரெயின் பிளான் இது. காற்று பிளஸ் காந்தம் மூலம் பூமிக்கு கீழே இயங்கும் போக்குவரத்து இது. ஷெர்வின் ஷேவரின் ஹைப்பர்லூப் ஒன், டிர்க் அல்பார்னின் ஹைப்பர்லூப் ட்ரான்ஸ்போர்டேஷன் டெக்னாலஜிஸ் ஆகிய இரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஹைப்பர்லூப் ரிசர்ச்சில் செம மாஸ். 1799
ஆம் ஆண்டில் ஜார்ஜ் மெதுர்ஸ்ட் என்பவர் காற்று மூலம் சரக்குகளை கொண்டு செல்லலாம் என்று முயற்சித்தது இன்றைய ஹைப்பர்லூப் மாடலின் ஆதாரம்.
எலன் மஸ்கின் கான்செப்டில் ஹைப்பர்லூப்பின் முன்புறம் காற்றாடியும், நடுவில் பயணிகளின் சீட்டும்,
பின்புறம் பேட்டரியும் இருக்கும். பேட்டரியால் ஹைப்பர்லூப் ஓடத்தொடங்கி, புரொபெல்லர் மூலம் காற்றையும்,
ட்யூபிலுள்ள காந்தம் மூலம் வலிமையான மின்காந்த சக்தி பெற்று உராய்வு குறைத்து உச்சவேகம் தொடுவதே இதன் பார்முலா.கடந்த மே 12 இல் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம்,
அமெரிக்காவின் நெவடாவில் தேவ்லூப் ட்ராக்கில் 5.3 நிமிடங்களில் 112 கி.மீ
வேகத்தை எட்டிப்பிடித்து முதல்வெற்றியை ருசித்துள்ளது.
ஹைஸ்பீட் ஹைப்பர்லூப்!
கான்கார்டு விமானம்
-1354 Mph
ஹைப்பர்லூப்-
760 Mph
போயிங்
737- 485 Mph
புல்லட்
ரயில் - 275 Mph
யூரோஸ்டார் -
186 Mph
தொகுப்பு: ரன்வீர் கால்சா, ரோஷா நிமி
நன்றி: குங்குமம் வார இதழ்