உலகை மிரட்டிய மாஃபியா குழுக்கள்!
கோமாளிமேடை ஸ்பெஷல்
உலகை மிரட்டிய
மாஃபியா குழுக்கள்!
நம்பர்ஸ் கேங்க்ஸ்
தென் ஆப்பிரிக்காவிலுள்ள
பால்ஸ்மூர் சிறை ஃபேமஸாக காரணம், இங்கு சிறைபட்ட நெல்சன் மண்டேலா, அடுத்து நம்பர்ஸ் குழு.
26,27,28 என மூன்று குழுக்கள்தான் ஜெயிலுக்கு இன்சார்ஜ். இந்த மூன்றில் ஒன்றை நீங்கள் செலக்ட் செய்தேயாகவேண்டும். நோ சொன்னால், கற்பழிப்பு அல்லது கொலை இரு ஆப்ஷன்கள் மட்டுமே உங்களுக்குண்டு. 27 கேங்கில் சேர, ஜெயிலரை கத்தியால் குத்தவேண்டும்.
28 இல் சேர கோல்டு, சில்வர் என இரு பிளான்கள் உண்டு.
கோல்டில் பிறரோடு சண்டையிட வேண்டும். சில்வரா?
பாலியல் அடிமை நீங்கள்.
ட்ரியாட் கேங்க்ஸ்(சுன் யீ
ஆன்)
17 ஆம் நூற்றாண்டின்
சீன மாஃபியா இது. 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது,
தைவான், மக்காவு, ஹாங்காங்
ஆகிய இடங்களுக்கு சுன் யீன் ஆன் குழு இடம்பெயர்ந்தது. மொத்தம்
57 சங்கங்கள், 60 ஆயிரம் உறுப்பினர்கள்.
போதைப்பொருள், விபச்சாரம், ஆட்கடத்தல் என அத்தனையிலும் ஜெயித்த குழு இது. சுன் யீ
ஆன் குழுவின் ஸ்பெஷல், கொலை செய்ய கத்திதான் ஆயுதம். ஒருவரை கொன்றால் அவரின் மூட்டு எலும்பை எடுத்து செல்வது இவர்களின் சிம்பல்.
டி கம்பெனி
இந்தியாவில் தாவூத்
இப்ராகிம் எனும் போலீஸ் கான்ஸ்டபிள் பிள்ளை வளர்த்தெடுத்த சுதேசி மாஃபியா குழு. 1970 -1980 வரை போதைப்பொருள், ஆட்கடத்தல், கள்ளநோட்டு அச்சிடல், திரைப்படத்தயாரிப்பு, ரியல்எஸ்டேட் என அத்தனை தொழிலும் ராஜாதிராஜா இவர்கள்தான். 1993 ஆம் ஆண்டு பிளான் செய்த மும்பை குண்டுவெடிப்பில் 257 பேரை சொர்க்கம் அனுப்பியது தாவூத்தின் சாதனை. போலீஸூக்கு பயந்து துபாய்
சென்று பின் அங்கிருந்து தற்போது இதன் தலைவர் பாகிஸ்தானின் கராச்சியில் தஞ்சமடைந்து
தன் சேவையை தொடர்ந்து வருகிறார்.
யமகுசி குமி
1915 ஆம்
ஆண்டு ஜப்பானின் கோபே நகரில் யமகுசியைத் தொடங்கியவர் ஹாருகிச்சி யமகுசி. அரசு பெயில் கொடுக்காமல் ஜெயிலில் தள்ளும் அத்தனை விஷயங்களையும் கர்மசிரத்தையாக
செய்யும் குழு இது. 1985 -89 ஆண்டுகளில் யமகுசி குழுவால் கொல்லப்பட்டவர்களை
எண்ணுவதே பத்திரிகைகளுக்கு த்ரில் வேலை. வன்முறை மாஃபியா குழுக்களுக்கு
யாகுஸா என்று பெயர். 1990-2000 வரை ஜப்பான் மாஃபியா குழுவில்
உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். அதிலும்
லீடிங் யமகுசி டீம்தான். சட்டங்கள் காலரைப்பிடிக்க, யமகுசி குழுக்களுக்கு துட்டு குறைய, உறுப்பினர்கள் கட்சி
மாறினார்கள். தற்போதைய மெம்பர்களின் எண்ணிக்கை
11,500.
நன்றி: முத்தாரம் வார இதழ்