அறிவியல் அப்டேட்ஸ்- விக்டர் காமெஸி



நியூக்ளியர் போரில் தப்பிப்பது எப்படி?

அணுஆயுதப்போரில் தப்பிப்பதற்காக இங்கிலாந்தின் லண்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழியின் பெயர் பிண்டர். இது கிரேக்க கவிஞரின் பெயர். நாளிதழ்களிலும் மிகச்சில படங்களே வெளியிடப்பட்டுள்ள இடம் இது. அரசு அதிகாரிகள், ராணுவ இயக்குநர், பிரதமர் என அனைவரும் ஈஸியாக பதுங்குழியில் தப்பித்துவிடுவார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வது?

நியூஜெர்ஸியின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த வெலர்ஸ்டெய்ன், அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து Nukemap என்பதை உருவாக்கியுள்ளார். கூகுள்மேப்பை ரீமேக் செய்து உருவாக்கிய மேப் இது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் 15 ஆயிரம் அணுகுண்டுகள் இருக்கும். தற்போது வடகொரியா தொடந்து ஏவுகணைகளை டெஸ்ட் செய்வதால், அமெரிக்கா கடும் கோபத்திலுள்ளது. ஜப்பான் தன் மக்களுக்கு அணுகுண்டு வெடிக்கும்போது எப்படி தப்பிப்பது என இப்போதே டிரில் வகுப்புகளை தொடங்கிவிட்டதுகுவாம் தீவிலுள்ள அரசும் பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுவிட, அமெரிக்க அரசு அணு ஆயுத பாதுகாப்புக்காக ready,gov என தனி இணையதளமே தொடங்கிவிட்டது.

"பிற எமர்ஜென்சி பிரச்னைகளை விட அணுஆயுதம் என்பது முற்றிலும் வேறுவிதமானது." என்கிறார் தேசிய பாதுகாப்பு கொள்கை சதாம் ஹவுஸ் இயக்குநர் பேட்ரிஷியா லூயிஸ்.


தப்பிப்பது எப்படி?

குண்டுவெடிக்கும் நிகழ்வை பார்ப்பது பார்வையிழப்பை ஏற்படுத்தும்.

பாதுகாப்பிடத்தில் தங்கியிருக்கவேண்டும். தூரம், நேரம், பாதுகாப்பு ஆகியவை இதில் முக்கியம்.

கதிர்வீச்சு பொருட்களை அகற்றுவதோடு,அதிலிருந்து விலகியிருப்பது உயிரைக் காக்கும்.

கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உடைகளை பாலிதீனால் இறுக்க கட்டி மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பற்ற இடத்தில் வைக்கலாம்.


சோப்பு கலந்த நீரை உடல்மீது ஊற்றிக்கொள்ளலாம். ஆனால் உடலை தேய்த்து கழுவக்கூடாது. அதேபோல கெமிக்கல் பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தக் கூடாது. .கா. ஷாம்பூ, கண்டிஷனர்.

கண்ணாடி கற்களில் மின்சாரம்!

வீடுகளின் கூரையாக சோலார் பேனல்களை பயன்படுத்தினாலும் விலை, கையாளுவது ஆகியவற்றில் சிக்கல்களுண்டு. தற்போது அதனைத் தீர்க்க வந்துள்ளது புதிய தொழில்நுட்பம்.

எக்ஸிடர் பல்கலையைச் சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் BIPV(Building Integrated Photovoltaics) எனும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்திருக்கிறார்கள். இது டெஸ்லா கார் நிறுவனத்தின் சோலார் பேனல் போல டைல் ஷேப்பில் கட்டுமானத்தில் பயன்படுத்தலாம். சோலார் ஸ்கொயர் எனும் இந்த கண்ணாடி பேனல் மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இந்த கண்ணாடிக்கற்களின் மூலம் 40% மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறார்கள் இந்த பல்கலை ஆராய்ச்சியாளர்கள் குழு. சூரிய ஒளியை ஒவ்வொரு கற்களும் தனித்தனியாக சேகரிக்கின்றன. ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸிடர் விரைவில் இதனை சந்தைப்படுத்தவிருக்கிறது.  

 ஆண்ட்ராய்ட் ஓரியோ வந்தாச்சு!

கூகுளின் ஆண்ட்ராய்டு 'O' வுக்காக உலகமே க்யூ கட்டி வெயிட்டிங். தன் ஒவ்வொரு ஓஎஸ்ஸிற்கும் ஸ்வீட்டுகளின் பெயரை வைக்கும் கூகுள் இம்முறை தன் ஓஎஸ்ஸிற்கு Oreo என பிஸ்கட் பெயரைச் சூட்டியிருக்கிறது. கிட்கேட்(4.0,2013), லாலிபாப் (5.0,2014), மார்ஸ்மாலோ(6.0,2015), நூகட்(7.0,2016) ஆகியவை இதற்கு முந்தை ஓஎஸ்கள்.

கூகுளின் புதிய பிக்ஸல் போனோடு இந்த ஓரியோ ஓஎஸ் இலவசமாக அக்டோபரில் ரிலீசாகும் என்று செய்திகள் கசிகின்றன. ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தலாம், ஹோம் ஸ்கிரீலேயே நோட்டிஃபிகேஷன் என்பது போன்ற புதிய வசதிகள் ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோவின் ஸ்பெஷல். ஓரியோ என்றால் பிஸ்கட் கம்பெனியோடு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தமா என்றால் என்ன சொல்வது? யாமறியேன் பராபரமே!

 செக்ஸ் ரோபாட் வந்தாச்சு!  

ரோபாட்டுகள் என்றால் உடனே டெர்மினேட்டர் அல்லது ஐரோபாட் பயங்கரங்களோ அல்லது சயின்ஸ் எழுத்துக்களின் ராஜேஷ்குமாரான ஐசக் அஸிமோவின் கதைகளோ நினைவுக்கு வரும். ஆனால் தினசரி வாழ்வில் ரோபாட்டுகள் பங்குபெறத் தொடங்கிவிட்டன. எப்படி? ரோபாட்டுகளை மேரேஜ் செய்யும் அளவு தீவிரமாகிவிட்டது நிலைமை. உலகம் முழுக்க தத்ரூபமாக பெண் ரோபாட்டுகளை தயாரிக்கும் 4 நிறுவனங்கள் உள்ளன. இனி இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். கூடுதலாக, ஆதரவற்றவர்களை பராமரிக்கும் பணி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு என ரோபாட்டுகள் விரைவில் அதிரடி காட்டும்.

கலிஃபோர்னியாவின் ரியல்டால் நிறுவனம் 15 ஆயிரம் டாலர் செலவில் தயாரிக்கும் ஹார்மோனி எனும் ஹைப்பர் ரியல் செக்ஸ்பெண், உங்களோடு பேசுவாள், சிரிப்பாள், ஏன் பாலுறவும் சாத்தியம்தான். விளையாட்டல்ல, 30 பில்லியன் டாலர் புழங்கும் சந்தை இது. "இப்போது மனிதர்கள் தங்களுக்குள் இடையறாது பாலுறவை வைத்திருப்பதால், ரோபாட்டுகள் பிற பணிகளை செய்துகொண்டிருக்கின்றன. விரைவில் செக்ஸிலும் நுழையும். 25 ஆண்டுகளில் சாத்தியம்." என்று திடமாக பேசுகிறார் டாக்டர் ட்ரூடி பார்பர். சந்தையில் 7 ஆயிரம் யூரோக்களில் தற்போது Rocky or Roxxxy ஆகிய ரோபாட்டுகள் செக்ஸ் பயன்பாட்டிலுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த ரிக்கி மா என்பவர், ரோபாட்டுகளை பற்றி அறிவுஜீவியெல்லாம் கிடையாது. 35 ஆயிரம் பவுண்டுகளை செலவில் ஸ்கார்லெட் ஜோகன்ஸன் போன்ற பெண் ரோபாட்டை உருவாக்கியிருக்கிறார். ஸ்கார்லெட் என்றதும் அவென்ஞ்சர் பட பைட்டையெல்லாம் டூப்பில்லாமல் செய்யாது. நீ அழகாக இருக்கிறாய் என்றால், படு சிம்பிளாக வெட்கபுன்னகையோடு கண்சிமிட்டும். உடனே பெண்கள் எப்போதும் செக்சுக்காகத்தானே என ஃபெமிநாஸி மூர்க்கம் காட்டுவது நல்லதல்ல.

"ரோபாட்டுகளை செக்சுக்காக ஆண்கள் பயன்படுத்துவது தவறு என்று ஊடகங்கள் தொடர்ந்து ஆண்கள் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் போர்ன் வீடியோவில் உள்ள பெண்ணைப் போலத்தான் ஆண்களிடம் பெண்கள் நடந்துகொள்கிறார்களா என்ன? பெண்களுக்கு தனி விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் உண்டு. ஆனால் ஆண் இயல்பான பெண்ணிடம் உணராத பெண்மையை ரோபாட்டிடம் உணர்கிறான் என்றால் பிரச்னையின் ஆதாரம் எது?" என அழுத்தமாக பேசுகிறார் ரோபாட்டிக்ஸ் எதிக்ஸ் சென்டரைச் சேர்ந்த டாக்டர் கேத்லின் ரிச்சர்ட்சன். ஆண் ரோபாட் தொழிற்சாலை பணிகளுக்கும் பெண் ரோபாட் குடும்ப பணிகளுக்கும் சிறந்தவை என்று 2014 ஆம் ஆண்டு வெளியான நெஸ்டா ஆய்வு கூறுகிறது. பெண் செக்ஸ் ரோபாட்டுகளைப் போலவே ஆண்களிலும் செக்ஸ் ரோபாட் உண்டா என்ற கேள்வியும் எழாமலில்லை.

''இந்த விவாதம் இன்று மிக அவசியம். இதை கண்டுகொள்ளாவிட்டால் நாளை நீங்கள் தூங்கி எழும்போது உங்கள் அருகில் இருப்பது ரோபாட் துணையாகவே இருக்கும். அப்போது இது சரியா,தவறா என்று சிந்திக்க நமக்கு ஆப்ஷன்களே இருக்காது" என தீர்க்கதரிசனமாக பேசுகிறார் டாக்டர் வொயிட்பை. "தொழில்நுட்பம் என்பது நல்ல வேலைக்காரனாக இருக்கும்வரை நல்லதுதான். பூதமாக மாறாதபடி விழிப்புணர்வோடு பார்த்துக்கொள்வது நம் கடமை" என்று கடந்தாண்டு அட்வான்ஸ்மென்ட் சயின்ஸ் விழாவில் பேசிய யேல் விஞ்ஞானி வெண்டெல் வாலச்சின் வார்த்தைகள் சொல்வதே வருங்கால நிஜம்.

நன்றி: முத்தாரம் வார இதழ்
தொகுப்பு: கண்ணன், ரிட்சி விஜேஷ்

பிரபலமான இடுகைகள்