இது மன்னர்களுக்கான காலமல்ல'
'இது மன்னர்களுக்கான
காலமல்ல' நேர்காணல்: ஐரோப்பிய
யூனியனின் பாதுகாப்புத்துறை தலைவர் ஃபெடரிகா மொஹெரினி
தமிழில்: ச.
அன்பரசு
ஆங்கிலத்தில்: சைமன்
சஸ்டர்(டைம்)
அண்மையில் நீங்கள்
உலகமே குழப்பத்தில் சிக்கியுள்ளது என்று கூறினீர்கள். அதற்கு
என்ன அர்த்தம்?
அமெரிக்கா உலகநாடுகளை
கட்டுப்படுத்தும் போலீஸ் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். நாம் அனைவரும்
ஒரேதிசையில் நிற்க விரும்பவில்லை என்பது சரிதான். ஆனால் நாம்
பன்முனைப்பட்ட நாடு என்று யார் குறிப்பிடுவார்கள்? ரஷ்யா,
அமெரிக்கா, இந்தியா, சீனா
உள்ளிட்ட நாடுகளா? அதிகாரம் கொண்ட உலகளாவிய விதிமுறைகளில் ஆதிக்கம்
செலுத்தும் பிற நாடுகளா?
உலகமே இன்று ஆதிக்கத்தினால்
பல்வேறு பகுதிகளாக பிரிந்து வருகிறது என்பதை குறிப்பிடுகிறீர்களா?
மக்களிடம் அதிகாரம்
உள்ளது. அதிகாரம் என்பது இன்று ஒருவரின் கையில் ஏன் அரசின் கையில் கூட இல்லை. அது நிலப்பரப்பு சார்ந்து சமூகம், தனியார் நிறுவனங்களுக்கும்
கூட மாறுகிறது. இது மன்னர்களுக்கான காலமல்ல.
கடந்தாண்டு ஜூனில்
மக்களின் வாக்கெடுப்பு அடிப்படையில் ஐரோப்பிய யூனியனை விட்டு இங்கிலாந்து வெளியேறும்
முடிவெடுத்தது.
இதிலிருந்து என்ன விஷயங்களை நீங்கள் கற்றீர்கள்?
வாக்காளர்களின்
முடிவு சரிதான்.
ஏனெனில் அவர்கள், ஏன் ஐரோப்பிய யூனியன் எங்கள்
வாழ்வை முன்னேற்றவில்லை என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஐரோப்பிய
யூனியனுக்கு எதிரான இயக்கமாக இதனை நான் நினைக்கவில்லை. அமைப்பின்
விதிகளின் மீது விரக்தியுற்ற மக்களின் கோபம் அது.
அகதிகள் பிரச்னையை
ஐரோப்பிய யூனியன் சரியான முறையில் எதிர்கொண்டுள்ளதா?
ஐரோப்பிய யூனியன் 9.5 பில்லியன்
டாலர்களை சிரியாவில் முதலீடு செய்துள்ளது. சிரிய மக்களுக்கான
கல்வி, உணவு, இருப்பிடம் உள்ளிட்டவைகளுக்காக
எந்த ஒரு நாடும் இதுபோல உதவி செய்யவில்லை. ஒருங்கிணைந்த செயல்பாடு,
அகதிகளுக்கான மறுவாழ்வு என்பது இப்படியாகத்தானே இருக்கமுடியும்.
அகதிகளின் வருகை
குறைப்பதற்கு ஐரோப்பிய யூனியன் எல்லைகளை மூடிவிடுமா?
எங்களது எல்லைகள்
மூடப்படாது.
நாங்கள் அச்சிக்கலை சரியான வகையில் எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் சுவர்களை எழுப்ப வேண்டிய அவசியமில்லை ஏனெனில் அது ஐரோப்பிய யூனியனின்
அணுகுமுறையுமல்ல.
இங்கிலாந்து அமெரிக்காவுடன்
தனியாக ஒப்பந்தங்களை பேச விரும்புகிறது. இது ஐரோப்பிய யூனியனுக்கு சிக்கலை
ஏற்படுத்துமா?
ஐரோப்பிய யூனியனில்
உறுப்பினராக இருந்த இங்கிலாந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதில் நீடித்திருக்கும்
நிலையில் பிற நாடுகளோடு வணிகரீதியான ஒப்பந்தங்களை செய்ய முடியாது.
அமெரிக்க அதிபர்
ட்ரம்பின் பிரெக்ஸிட்டிற்கு ஆதரவான ட்வீட்களைப்பற்றி…
ட்வீட் என்பது
வணிக ஒப்பந்தம் ஆகாது.
தொகுப்பு: வில் பார்க்கர், விபானா பணிக்கர்.
நன்றி: முத்தாரம் வார இதழ்
டைட்டில் லோகோ: கதிரவன்