கல்வி மொழி -முன்னோர்களின் வாய்மொழி




நம் முன்னோர்களின் வாய்மொழியாக.
கல்வி மொழி
மோகன்தாஸ் காந்தியின்
கல்வி மொழி

பெண்களிடையே கல்வியறிவின்மை
    பெண்கள் சமுதாயத்தில் கல்வியறிவின்மை தோன்றியதற்கு வெற்றுச் சோம்பல், செயல்திறனற்ற எண்ணம் என்று மட்டும் வரையறுத்துவிட முடியாது. இதுவே ஆண்களின் விஷயத்தில் தலைகீழாக நடக்கிறது. மேலாதிக்க ஆணவத்தில் ஆண்கள் சமுதாயம் பெண்களை மேலெழவே விடவில்லை என்பதே நிஜம். ஆண்கள் பெண்களை போகப் பொருளாகவும் மனைவி என்ற பெயரில் வீட்டுவேலைகளை செய்யும் அடிமையாகவுமே நடத்தி கபட நாடகமாடுகின்றனர். மனித சமூகத்தையே கருவில் சுமந்து உருவாக்கும் பெண்ணுக்கு கல்வியறிவைத் தராமல் மிகப்பெரிய பிழையை இழைத்துள்ளோம்.

உழைப்போடு இணைந்த கல்வி
    பள்ளிக்கல்வியில் அனுபவம், சோதனை உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்புண்டா என்பதில் எனக்கு சந்தேகமே. தம் வாழ்வின் வழியே பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு உண்மையான கல்வியை அளிக்க முடியும் என்று திடமாக நம்புகிறேன். இப்பண்ணையில் இருக்கும் இளைஞர்களுக்கு கல்வி கற்றுத்தரும் பணியை என் தோளில் ஏற்றுள்ளேன். இங்கே குழுமியுள்ள இளைஞர்கள் பலரும் வேறுபட்ட வாழ்வியல் சூழலிலிருந்து வந்துள்ளதால் அவர்களின் கற்றல் திறன் ஒத்ததல்ல. நான் இங்கு 24 மணி நேரமும் அவர்களுக்கு தந்தையின் இடத்திலிருந்து அவர்களின் குணங்களை கட்டமைக்க முயல்கிறேன். கல்வி கற்க ஏதுவான அவசிய அடிப்படையாக ஒருவரின் குணத்தையே முதல்படியாக கருதுகிறேன். சரியான முறையில் ஒருவரின் குணத்தை கட்டமைக்கும்போது அவர் சுயமாகவே அல்லது நண்பர்களின் வழியாகவும் எளிதில் தனக்கான கல்வியை கண்டடைய முடியும்.  
விடுதலை கல்வி
    மனிதனுக்கு விடுதலை அளிப்பது எதுவோ அதுவே கல்வி என்பது தொன்மை நீதிமொழியாகும். கல்வி மனிதத்தன்மை அளிப்பதோடு, அவனுடைய நிகழ்கால அடிமைவாழ்விலிலிருந்து விடுதலை அளிப்பதாகும். கல்வி லட்சிய வாழ்விலிருந்து பெறும் அறிவை நமக்கு அளிப்பதோடு, வெளியிலிருந்து செயற்கையாக நம்மைத் அலைகழிக்கும் தேவைகளை களையவும் உதவுவது அவசியம்.

சமச்சீரான வளர்ச்சி
    நமது கல்வி முறை மாணவர்களின் உடல்,மனம், ஆன்மா இவற்றை சமச்சீராக வளர்க்க உதவ வேண்டுமே தவிர மூளைக்கு மட்டும் பலனளிப்பதாக அல்ல.
வாழ்வின் அடையாளம்
    கற்றலோ அல்லது இலக்கியமோ ஒரு மனிதனை உருவாக்குவதில்லை. ஆனால் சரியான கல்வி அவனுக்கு உண்மையான வாழ்வை அடையாளம் காட்டித்தரும்.

2
தாகூரின் கல்வி மொழி

1. சிறந்த கல்வி என்பது வெறும் தகவல்களை மூளையில் திணிப்பதாக இல்லாமல் நம் முழு வாழ்வையும் இசைவுற வாழச்செய்வோடு புத்துயிர்ப்பு தருவதாகவும் இருக்க வேண்டும்.

2. தீவிரமான காதலுடன் தன் வாழ்வை புதிதாக அணுகும் குழந்தைகள் தம் வாழ் தேவைப்படும் அனைத்தையும் தமது தேடுதலின் வேட்கையிலிருந்தே பெற முடியும். சுயமாக கற்கும் திறன் கொண்டவர்களின் மூளையில்  தகவல் திணிப்பின் அவசியம்தான் என்ன?

3. கல்வி என்பது பணம் சேர்க்க, அதிகாரம் பெறுவதற்கான் சூத்திரம் என்பதாக அல்லாமல் ஆன்மாவிற்கான சுதந்திர சாளரமாக அமையவேண்டும் என்று முன்னமே தீர்மானித்திருந்தேன். எனவே கல்வியை பணம் செய்வது என்பதைத் தாண்டிய மேம்பட்டதாக உருவாக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் மேற்கூறிய தன்மைகளோடு அணுவளவும் பகை கிடையாது.

4. எளிய குழந்தைகளின் மேல் பிறரின் சொகுசுகளையும் ஏற்றி அவர்களின் இயற்கையுடன் ஒன்றுபட்டு கற்கும் தன்மையை சிதைத்து அதனை வாழ்நாள்  பெருமையாகவும் கருதி பெற்றோர்கள் மகிழ்வது பெரும் பிழை.

5. புத்துணர்வோடும் ஆச்சர்யத்தோடும் உலகை பார்த்து தம் செயல்பாடு வழியே ஒவ்வொன்றையும் கற்கும் குழந்தை, புற தூண்டுதல் இல்லாமலேயே வாழ்விற்கான விஷயங்களை பெற முடியும். அப்படி சுய தூண்டுதல் வழியே கல்வி அனுபவம் கிடைக்கப்பெறுகிற குழந்தையின் வாழ்வு நிகழ்கால சொர்க்கமாகவே அமையும்.

3
ஜவகர்லால் நேருவின்
கல்வி மொழி

1. நல்ல மனநிலை உருவாக சிறப்பான உடல்நிலை மிக அவசியம்.

2. பயப்படும் மனிதன் எதையும் சாதிப்பதில்லை.

3. எந்த புரட்சிகரமான செயல்பாடும் காலத்திற்கு பொருத்தமானதா? தேவையா? என தீர்மானிக்கும் பொறுப்பு நமது கையில்தான் உள்ளது.

4. ஒரு செயலில் ஈடுபடுவதை தாமதித்து விட்டு அதைக்குறித்து பேசிக்கொண்டே இருப்பதுதான் நமது ஆகப்பெரும் பிழை.

5. சிந்தனையை செயல்படுத்தும் முன் இரு கேள்விகளை கேட்டுக்கொள்ளவேண்டும். ஒன்று, காலத்திற்கு பொருத்தமானதா? பலருக்கும் நன்மை தருமா? இரண்டாவதாகும்.

6. நேர்மையுடன் கூடிய கடின உழைப்பு உடனே அங்கீகரிக்கப்படாவிட்டாலும் இறுதியில் அதற்கான நிச்சய பலன்கள் உண்டு.

7. மனிதர்களின் மனசாட்சியே அவர்களை உண்மையாக காட்டும் கண்ணாடி.

8. பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். பிறர் உங்களைப் பின்தொடர்வார்கள்.

9. நேர்மை, நம்பிக்கையோடு உறுதியாக பின்பற்றிவரும் லட்சியமே வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்.

10. நீங்கள் உங்களின் அடிப்படை கொள்கைகளையும் நோக்கங்களையும் மறக்கும்போது நேர்வதுதான் தோல்வி.


தொகுப்பு: ச.அன்பரசு, கா.சி.வின்சென்ட்