இடுகைகள்

வேட்டைவிலங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்மை பிரிக்கும் வெறுப்பு வேண்டாம்; ஒன்றுசேர்க்கும் அன்பு போதும் - ஜூடோபியா

படம்
  ஜூடோபியா டிஸ்னி கிராமத்தில் கேரட் விவசாயம் செய்யும் பெற்றோர். பாரம்பரியத் தொழிலான கேரட்டை விளைவித்து விற்பதைக் கைவிட்டு சிறுவயது ஆசையான காவல்துறை வேலைக்கு செல்லும் ஹாப்ஸ் என்ற முயல், ஜூடோபியா நகருக்குச் செல்கிறது. அங்கு சென்று சந்தித்த சவால்கள் என்ன, சாதித்த சாதனைகள் என்ன என்பதுதான் கதை. படத்தை சாதாரணமாக பார்த்தால் சாதாரண முயல் காவல்துறை அதிகாரியாகும் சாதனைக் கதை போலத் தெரியும். ஆனால், இன வேற்றுமை, வன்முறைக்கு எதிரான ஏராளமான செய்திகளை, போலிச்செய்திகளை பிரிவினைகளை பரப்பும் ஊடகங்களைப் பற்றியும் படம் மறைமுகமாக பேசுகிறது. படத்தை தனித்துவமான ஒன்றாக மாற்றுவதும் அதுதான். சிறுவயதில் பெற்றோர் வழியாக அல்லது சுய அனுபவம் வழியாக மனதில் பதியும் விரோதம், பகை எப்படி பல்வேறு முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது. நிறைய மனிதர்களை பாதிக்கிறது என்பதை படம் கலைப்பூர்வமாக நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் வழியாக சொல்லுகிறது. ஹாப்ஸ்   என்ற முயல் கிராமத்தில் வாழ்கிறது. அங்கு பள்ளியில் நாடகம் ஒன்றில் நடிக்கிறது. அதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறது. அப்படியே அதே வேலைக்கு முயற்சி செய்யவேண்டும் என்பதே ஆசையாகிறது