இடுகைகள்

விரல்ரேகைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களின் விரல்ரேகைகளை விற்கிறதா சீனா?

படம்
ஐக்யூ ஸ்கேனர்கள் உண்மையா? சீனாவில் சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்தது பரபரப்பான நிகழ்வாகியுள்ளது. இதன் விளைவாக,  கல்வித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. சென்ஷென் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி மீது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஷாங்காய் ஆவோடியன் இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ற நிறுவனம் இந்த ஐக்யூ மெஷினை உருவாக்கியுள்ளது.  இவர்கள் மாணவர்களின் விரல்ரேகைகளை பெறுவதாக தகவல்கள் கிளம்பியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒருவரின் பலம், பலவீனத்தை அறியலாம் என்று கூறுகின்றனர். தலையில் சென்சார் கொண்ட கருவியை மாட்டி அதனை விரலால் அழுத்தினால் இக்கருவி ஐக்யூவை அளவிடுகிறது. நாடு முழுவதுமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இச்சோதனைக்கு உட்பட்டுள்ளனர். ஒரு குழந்தைக்கு 30 டாலர்களை வசூலிக்கிறது. சுரண்டல் ஐக்யூ ஸ்கேனர் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தாலும் கம்பெனி அதனை உறுதியாக மறுத்துவிட்டது. மேலும் இக்கருவியை கல்வித்துறை அங்கீகரித்துள்ளதும் மற்றொரு வலுவான காரணம். நன்றி: சீனா மார்னிங் போஸ்ட்.