இடுகைகள்

பரிவர்த்தனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோசடிகளை தடுக்க க்யூஆர் கோடை ஏடிஎம் கார்டு போல பயன்படுத்தலாம்!

படம்
  க்யூஆர் கோட் மூலம் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம்! பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் குறைவாக நிரப்பப்படுகிறது. இல்லையெனில் அவுட் ஆப் சர்வீஸில் இயந்திரம் இருக்கும். இதையெல்லாம் தாண்டி செயல்பட்டால் ஏடிஎம் இயந்திரம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் மெனு ஆப்சன்களைக் கொண்டிருக்கும். பணத்தை எடுக்க டெபிட் கார்டுகள் உதவுகின்றன. இதில் நிறைய மோசடிகள் நடந்து வந்தன. அதையெல்லாம் ஒழிக்க கார்டுகளைக் கூட நவீனப்படுத்தி ஒருவரின் பெயர் இல்லாமல் தயாரிப்பது, கார்டை ஸ்வைப் செய்யாமல் காட்டினாலே போதும் என நிறைய ஆப்சன்களை உருவாக்கினார்கள்.  இப்போது ஆர்பிஐ போனை ஏடிஎம் கார்டாக பயன்படுத்த யோசனை ஒன்றை சொல்லியிருக்கிறது. ஏடிஎம் சென்று யுபிஐ வசதியை இயக்கி, போனைத் திறந்து யுபிஐ வசதிக்காக பாரத் பே, சிட்டி யூனியன் மணி பிளஸ், அல்லது படுஸ்லோவாக வேலை செய்யும் யூனியன் பேங்க் ஆப்பைப் பயன்படுத்தலாம். ஏடிஎம் ஸ்க்ரீனில் உள்ள க்யூஆர் கோடை போனில் வெரிபை செய்தால் போதும். காசை மெஷினில் நிரப்பிப் பெற்றுக்கொள்ளலாம. இதற்கு முக்கியமாக இணைய வசதி கொண்ட போன் அவசியம். இல்லையெனில் பணத்தை எடுக்க முடியாது.  அதேசமயம் டெபிட், கிரடிட் கார்டுகளைப் பயன்ப

யுபிஐ ஏற்படுத்தும் அதிவேக பிரிவினை! - சாதகங்களும் பாதகங்களும்

படம்
  யுபிஐ ஏற்படுத்தும் பிரிவினை! உங்கள் போன்தான் இனி வாலட்டாக இருக்கப் போகிறது என பில்கேட்ஸ் 1996ஆம் ஆண்டு சொன்னார். அப்போது அவர் அப்படி சொன்னது பலருக்கும் புரியாமல் இருந்தாலும் இப்போது நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்று போன்பே, பேடிஎம், வங்கி ஆப்களில் வாலட்டில் பணம் வைத்து இணையத்தில் பொருட்களை வாங்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறோம்.  பூம்பூம் மாட்டிற்கான தொகையை கூட யுபிஐயில் கொடுக்கலாம் என்றளவுக்கு நிலை மாறியதை, சிலர் பெருமையாக பேசுகிறார்கள். இடதுசாரிகள் பிச்சை எடுப்பதை நேரடியாக எடுத்தால் என்ன டிஜிட்டலாக எடுத்தால் என்ன என்று விமர்சிக்கிறார்கள். முதலில் சொன்னதை விட இரண்டாவது கேள்வியில் சற்று பொருள் உள்ளது.  யுபிஐ பிற வசதிகளை விட வேகமாக பணக்கார ர்கள் ஏழைகள் ஆகியோருக்கு இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், செக்கை ஒருவர் வங்கிக்கு சென்று மாற்றுவது கடினமானது. வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் போடுவது இதில் முக்கியமான அம்சம். இப்படி மாறும் பணம் சரியாக கணக்கில் வந்து விழ பதினைந்து நாட்கள் தேவை. இதில் வங்கி விடுமுறைகள் வந்தால் என்ன செய்வது? பொறு

ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.  பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே  இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.   அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.  ஜப்பானில் 21 சதவீத ரொக்கப