இடுகைகள்

குழந்தை தொழிலாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ! கப்பல் உடைப்பு - டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ! உலகில் தொண்ணூறு சதவீத வர்த்தகம் கப்பல் வழியாக நீர்நிலைகளில் நடைபெறுகிறது. பயன்படுத்திய கப்பல்கள்தெற்காசியப் பகுதிகளில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. இத்தொழிற்சாலைகள் இங்கு அதிகமாக உள்ளன. ஒரு கப்பலை முழுமையாக உடைத்து எடுக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகின்றன. கப்பலிலிருந்து பெறும் இரும்பில் 90 சதவீதம் கட்டுமானத்துறையில் பயன்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கப்பலை உடைக்கும் தொழிலாளர் ஒருவருக்கு தரப்பட்ட கூலி ஆறு டாலர். உலகிலுள்ள கப்பல்களில் 33 சதவீத கப்பல்கள் இந்தியாவிலுள்ள ஆலங் பகுதியில் உடைக்கப்படுகின்றன. இப்பகுதியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம். வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் அளவு 25 %. ஒரு கப்பலை உடைத்தால் அதிலிருந்து கழிவாக பெறும் ஆஸ்பெஸ்டாசின் அளவு 6,800 கி.கி. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இறந்த கப்பல் உடைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1200. 1504 அடி நீளம் கொண்ட கப்பல், இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது. நன்றி - க்வார்ட்ஸ்