இடுகைகள்

அகிலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரயில் நிலையத்தில் திடீர் ஜோதிடர்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  12.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கார்ட்டூன் கதிர் போன் செய்தபோது விசாரித்தார். நலமோடு இருப்பதாக பதில் கூறினேன். நாகப்பட்டினத்தில் இருந்து இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் மனைவி அகிலா, அரசுத்தேர்வுக்கு படித்து தேர்வுகளை எழுதி வருவதாக கூறினார்.   ஒருமுறை தேர்வு எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார். திருவான்மியூர் ரயில் நிலையம் என்று சொன்னார். அங்கு, ஆதவன் நாளிதழில் முன்னர் பணியாற்றிய குமார் என்பவரை சந்தித்திருக்கிறார். முழுநேர ஜோதிடரும், பகுதிநேர ஃப்ரூப் ரீடருமான குமார் ரயில் நிலையத்திலேயே அகிலாவுக்கு ஜோதிடம் பார்த்து வேலை பற்றி கூறுவதாக சொல்லியிருக்கிறார். கதிரவனுக்கு மனதில் சங்கடமாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கதிரவன் குமாரை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் அப்போதும் தனது ஜோதிட திறனை நிரூபிக்க வாய்பைத் தேடியிருக்கிறார். அகிலா தடாலடியாக பேசக்கூடியவர். கணவரின் நண்பர் என்பதால் நிதானம் கூட்டி பொறுத்திருக்கிறார்.  நாளிதழ் பணிக்கான கட்டுரைகளைத் தேடி படித்து வருகிறேன். கோவைய

அறையில் கூடும் வெப்பமும், வடகிழக்கில் அதிகரிக்கும் அரச பயங்கரவாதமும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  6 3.10.2021 அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இந்த வாரம்தான் சற்று நிதானமாக இருக்க நேரம் கிடைத்தது. எல்லாமே காந்தியின் அருள்தான். வேலைகள் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதிப்பக வேலைகள் இந்தளவு சலிப்பாக நகரும் என நினைக்கவில்லை. நான் வேலைசெய்யும் நாளிதழ் நிறுவன ஆட்களால் தான் வேலை மோசமாக மாறியுள்ளது. சிற்பி கற்களை உளி கொண்டு செதுக்குவது போல செதுக்கி வருகிறார்கள். இப்படி நகாசு பார்த்தால் எப்போது நூலை அச்சுக்கு அனுப்பி வேலையை முடிப்பது? நூல்களுக்கான சந்தை என்பதே இனி டல்லாகத்தான் இருக்கும். வேலை இழப்பு, பொருளாதாரம் என நிறைய சிக்கல்கள் நமக்கு முன்னே உள்ளன.  அறையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மழைக்காலமாக இருந்தாலும் மாறி வரும் காலநிலை மாற்றத்தை உடலால் தாங்குவது கடினமாக உள்ளது. ஒவ்வாமை பற்றிய நூலை எழுதி தொகுத்து வருகிறேன். சொந்த உடல்நலம் சார்ந்த சுயநலம் காரணமாகவே நூலை எழுதுகிறேன். உலகம் முழுவதும் அலர்ஜி பிற நோய்களை விட அதிகரித்து வருகிறது.  ஃபிரன்ட்லைன் மாத இதழின் கட்டுரைகளை படித்து வருகிறேன். ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் செ