இடுகைகள்

மந்திரவாதியின் சீடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெய்ஞானத்தை தேடும் சீடனுக்கு குரு வைக்கும் பல்வேறு சோதனைகள்- மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்

படம்
  மந்திரவாதியின் சீடன் இவால்ட் ஃப்ளிசர் தமிழில் அசதா காலச்சுவடு பதிப்பகம்   வெளிநாட்டுக்காரரான இவால்ட் இந்தியாவிற்கு ஞானம் தேடிப்பெற வருகிறார். அவருக்கு குருவாக வரும் யோகானந்தர் அவரை எப்படி சோதித்தார், தனது சீடனாக ஏற்றாரா, ஞானம் பெற உதவினாரா என்பதே கதையின் மையம். அசதா,ஆங்கில நூலை தமிழில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அதில் எந்த பழுதுமில்லை. ஆனால், இந்த நூல் மனிதர்கள் தேடும் ஞானத்தை, மெய்ப்பொருளை பற்றியது என்பதால் திரும்ப திரும்ப வாக்கியங்களை, இவால்டின் மனவோட்டங்களை படித்தால் மட்டுமே புரியும். இவால்டின் பயணமாகவே மட்டுமே குறுக்கி பார்க்க முடியாதபடி நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நூலை படிக்க சற்று கடினமானது போல தோன்றும். ஆனால், சற்று வாசித்து ஐம்பது பக்கங்களை கடந்துவிட்டால்   பிரச்னை ஏதுமில்லை. நூலை வாசித்தவர்கள் உறுதியாக தாந்த்ரீகத்தைப் பற்றி தேடிப்போவார்கள். உறுதியாக அதற்கான அனைத்து விஷயங்களையும் ஆசிரியர் நூலில் விதைத்திருக்கிறார். மடாலயங்களின் உள்கட்டுமானது, சடங்குகளை முடிந்தளவு விளக்க முயன்றிருக்கிறார். இறுதியாக இவால்ட் தனக்கு கிடைத்த இரண்டு நிமிட உள்ளொ