இடுகைகள்

தடயவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றம் செய்தது யார் என கண்டறிவது எப்படி?

படம்
  ரத்தசாட்சி ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திக்கொல்கிறார். சுத்தியால் தலையை சிதைக்கிறார். அல்லது கோடாரி வைத்து நெஞ்சை அல்லது கபாலத்தை பிளந்து கொல்கிறார். இப்படி கொல்லும் முறையைப் பொறுத்து சில பாணிகள் அமைந்துவிடும். செல்வராகவன் படம் என்றால் நெருப்பு டான்ஸ் எங்கேப்பா என்கிறார்களே அதுதான். ஆனால் இப்படி இந்த பாணி கொலை என்று சொல்ல முடியாதபடி கொலைகளும் நிறைய நடந்தபடி உள்ளன. காவல்துறையினரும் ஏபிசி என வரிசைமுறைப்படி பழகிவிட்டதால், இது அவனாக இருக்குமோ, இல்லை இவனாக இருக்குமோ என குழம்பும்படி ஆகிவிட்ட வழக்குகளும் ஏராளம் உண்டு. இங்கு நாம் அதுபோல சில விஷயங்களைப் பார்ப்போம். நியூயார்க்கில் ரோசெஸ்டர் நகரம். 2005ஆம் ஆண்டு. இங்கு ராபர்ட் ஸ்பாஹால்ஸ்கி என்பவர் தான் நான்கு கொலைகளை செய்ததாக கூறி சரண் அடைந்தார். காவல்துறையினருக்கு எப்போதும் ஈகோ அதிகம். நீ வந்து சரணடைந்தால் நாங்கள் விசாரிக்காமல் இருக்க முடியுமா விசாரித்து, முதலில் இரண்டு வழக்கு, பிறகு இரண்டு வழக்கு என சோதித்து உண்மையை அறிந்தனர். மூன்று கொலைகள் நடந்த ஆண்டு 90 முதல் 91 என ஓராண்டு என்றால் அடுத்த கொலை பதினைந்து ஆண்டுகள் கழித்து நடைபெற...

பெற்றோரைக் கொன்ற கொலைகாரரை பின்தொடரும் தடயவியல் வல்லுநர்! டாக்டர் ஷின் சீனத் தொடர்

படம்
                டாக்டர் ஷின் சீன தொடர் தடயவியல் வல்லுநர்களை கதாநாயகர்களாக்கும் படைப்பு . இதற்காகவே தடயவியல் வல்லுநரை விட புத்தியில் குறைந்த கேப்டனாக பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . தடயவியல் தொடர்பான இரண்டாவது சீனதொடரை இங்கு எழுதுகிறோம் . இரண்டிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன . குடும்பம் சார்ந்த மர்மமான பிரச்னைகள் தடயவியல் வல்லுநருக்கு இருக்கிறது . அதாவது தடயவியல் பிரிவின் தலைவருக்கு… அந்த பிரச்னைகளோடு பிற வழக்குகளையும் இணைத்து அவர் தடயங்களை சேகரிக்கிறார் . குற்றவாளிகளை பிடிக்க கேப்டனுக்கு உதவுகிறார் . இதோடு தலைவரின் கீழ் உதவியாளராக இருக்கும் பெண்ணை காலம் கடந்தேனும் நம்பிக்கை இழக்காமல் காதலிக்கிறார் . இவை மாறாது நடக்கின்றன . டாக்டர் ஷின் தொடரில் புதுமை என்னவென்றால் , வன்முறையைக் குறைத்து காதலையும் இருக்கிறதா இல்லையா என பார்வையாளர்களை தேட வைத்திருக்கிறார்கள் . ஷின்னை நாயகனாக்குவது சரிதான் . ஆனால் அதற்கான போலீஸ் குழுவை வழிநடத்தும் கேப்டனை காஸனோவா அளவுக்கு காட்டி , புத்தியில்லாதவராக மாற்றிருக்க வேண்டும...