இடுகைகள்

வெ.நீலகண்டன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ப்ரொஃபைல் பத்திரிகையாளர் வெ.நீலகண்டன்

படம்
**பத்திரிகையாளர் வெ.நீலகண்டன்:  ஒரு காலத்தின் கனவைப் பதிவு செய்யும் எழுத்தாளர்** பத்திரிகையாளர் வெ.நீலகண்டன், தமிழ் இதழியல் துறையில் முக்கியமானவரும், ஆழமான ஆய்வுகளுக்குப் பெயர் பெற்றவருமான எழுத்தாளர் ஆவார். தற்போது ஆனந்த விகடன் இதழின் துணை நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், பண்பாடு, வரலாறு, இசை, மற்றும் மனித ஆவணங்கள் குறித்தான எழுத்துக்களால் அறியப்படுகிறார். **தொழில் வாழ்க்கை** இருபதாண்டுகளுக்கும் மேலான பத்திரிகை அனுபவம் கொண்ட வெ.நீலகண்டன், கலாச்சாரம், மரபுகள், உணவு முறை, இசை, கலைகள், வரலாறு மற்றும் மனித வாழ்க்கைக் கதைகள் போன்ற பல்வேறு தளங்களில் நிபுணத்துவம் பெற்றவர். **முக்கிய படைப்புகள்** இவர் சுமார் **28 நூல்களை** எழுதியுள்ளார். அவற்றில் சில முக்கியமானவை: *   **ஊர்க்கதைகள்** *   **உறங்காநகரம்** *   **அந்தர மனிதர்கள்** *   **கிராமிய இசைக்கருவிகள் - ஒரு பண்பாட்டு வரலாறு**: இது வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகளை ஆவணப்படுத்தும் முக்கியமான பணியாகக் கருதப்படுகிறது. *   **ரோல் மாடல்** *   **எமக்க...

திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி

 திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி காங்கேயத்திற்கு அதிகாலையில் தனியார் பேருந்தைப் பிடித்து சென்றுகொண்டிருந்தேன். எப்போதும் துள்ளிசை பாடல்களைப் போடும் ஓட்டுநர், அன்று பொழுது விடியவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, பாடல்கள் ஆன்மிகத்தில் முழுகியிருந்தன. ஷண்முகா ஷண்முகா என புஷ்பவனம் குப்புசாமி குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர். அடுத்து பாடியவரும், முருகன் பாடலையே பாடினார். அப்போது என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. ஒருவரிடம் உதவி கோரிப்பெற சென்று கொண்டிருந்தேன். அங்கு உதவி கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். இரண்டாவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு.  மனக்கலக்கமடைந்த நேரத்தில், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடல் தொடங்கியது. அப்பாடலைக் கேட்க கேட்க மனதிலுள்ள கலக்க எண்ணங்கள் குறைந்தது. அந்தப் பாடலின் வரிகளைக் கவனிக்க தொடங்கினான். முருகனுக்கு எண்ணற்ற மனக்கோயில்கள் உண்டு, அதில் அன்புக்கோ பஞ்சமில்லை என பெண் குரல் பாடியது. நிதானமாக குரலை உயர்த்தாமல் பாடியவிதம்தான் முக்கியமானது.  அந்தப் பாடலை எழுதியவர் இதை எப்படியான மனநிலை...