இடுகைகள்

பகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வில்லியிடம் இருந்து காதலியை மீட்கும் நாயகனின் போராட்டம்!

படம்
  சகியா தெலுங்கு தருண், நவ்ஹீத் சைருஷி   கிராமத்தில் உள்ள சக்திவாய்ந்த பெண்மணியின் மகளை கூட்டி வர ஸ்விட்சர்லாந்து செல்லும் நாயகன், காதலில் விழுகிறார். பெண்மணி கூறியபடி அவரது மகளை கூட்டி வந்தபிறகுதான் தெரிகிறது. அந்தபெண்மணி, அவரது அம்மா கிடையாது. எதிரி குடும்பத்து பெண். பழிவாங்குதலுக்காக அவரை ஏமாற்றி தனது மகளென கூறி வரவைத்திருக்கிறார் என்று. இப்போது நாயகன் எப்படி அவரிடமிருந்து அந்த அப்பாவி பெண்ணை மீட்டு திருமணம் செய்கிறார் என்பதே கதை. படத்தில் ஒரே ஒரு உருப்படியான விஷயம் ஆங்கில நடிகையான நவ்ஹீத் சைருஷிதான். அவரை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். மற்றபடி படத்தில் பாத்திரமாக சந்தனா என்று வருகிறார். அதில் பெரிய மாற்றமோ, ஆச்சரியமோ இல்லை. லூசுப்பெண் போல காட்டுகிறார்கள். துயரம். அதிலும் அவர் ஒரே மாதிரியான உடையில் படத்தில் பெரும்பாலான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார். எதற்கு என அவருக்கும் தெரிவதில்லை. நமக்கும் தெரியவில்லை. ஹரி பாத்திரத்தில் தருண் நடித்திருக்கிறார். முதல் காட்சியில் தனது அண்ணன் பற்றி மாற்றிப் பேசி அவர் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள உதவுகிறார். ஆனால் அதற்குப் ப

பாசநேச நண்பர்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளின் காதல் கதை!

படம்
  நுவ்வு லேக்கா நேனு லேனு தெலுங்கு தருண், ஆர்த்தி அகர்வால் இயக்கம் காசி விஸ்வநாத் இசை ஆர் பி பட்நாயக்   இரண்டு பாசநேசமான நண்பர்கள். ஒன்று சேர்ந்து வணிகம் செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணவேணி. இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை. அதை வெளியே சொல்லும்போது கிருஷ்ணவேணிக்கு இன்னொருவருடன் கல்யாணம் நிச்சயமாகிறது இறுதியாக அவர்கள் காதல் வென்றதா, ஒன்றாக சேர்ந்தார்களா என்பதே கதை. ராதாகிருஷ்ணன், கிருஷ்ணவேணி என இருவரும் ஒன்றாக படிக்கிறார்கள். ஒருவரையொருவர் கிண்டல் செய்வதும், கேலி செய்வதுமாக இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இருக்க முடிவதில்லை. இதை கிருஷ்ணவேணியே முதலில் உணர்கிறாள். அவள்தான் தனது காதலை கூறுகிறாள். ராதாகிருஷ்ணனுக்கும் அவள் மீது காதல் இருக்கிறது. ஆனால் அதை அவன் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படி தீவிரமாக எடுத்துக்கொள்ள நினைக்கும்போது குடும்ப வணிகத்தில் பிரச்னை ஆகிறது. இதில் அவர்களுக்கு ஒருவர் உதவுகிறார். அதன் காரணமாக நன்றிக்கடன் சிக்கல்கள் உருவாகிறது. தனது காதலியை

இரு குடும்பங்களின் பகையைத் தீர்க்கும் காரியஸ்தன் - காரியஸ்தன் - திலீப், அகிலா சசிதரன், ஹரிஶ்ரீ அசோகன்

படம்
  காரியஸ்தன் - மலையாளம் -திலீப் அகிலா சசிதரன் - திலீப் - காரியஸ்தன் காரியஸ்தன் திலீப், அகிலா சசிதரன், சுரேஷ் வெஞ்சரமூடு, ஹரிஶ்ரீ அசோகன் நட்பாக பழகிய இரு குடும்பங்கள் பிரிந்துகிடக்கின்றன. குடும்பங்கள் பிரிவதற்கு காரணமான ஒருவரே பின்னாளில் அதை ஒன்றாக சேர்க்க முயல்கின்றார் ஒருவர். அவ்வளவே கதை. வடக்கு, கிழக்கு என இரு குடும்பங்கள் முதலில் சுவர்களே இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு குடும்பங்களுமே மூடநம்பிக்கை கொண்ட ஆணாதிக்க வாதி குடும்பங்கள்தான். தங்கள் குடும்பத்திற்குள் திருமண உறவு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கிழக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தபிள்ளைக்கு, ஏற்கெனவே ஒரு காதல் இருக்கிறது. ஆனால்,அவரது அப்பா சொன்னதால் அவரது பேச்சையும் உடனே தட்டமுடியவில்லை. டௌரி பணமாக பத்து லட்சத்தையும் பெண் வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராஜன் என்ற கல்யாண மாப்பிள்ளை, சுசீலன் என்பவரிடம் டௌரிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வடக்கு குடும்பத்திடம் பணத்தை சேர்க்குமாறு சொல்லிவிடுகிறார். பிறகு, கல்யாண வீட்டிலிருந்து தப்பி, தனது காதலியோடு ரயிலில் ஏறப்போகிறார். இவர்களது காதலை அறிந்து ராஜனுக

தம்பிக்காக தியாக மெழுகுவத்தியாகும் அண்ணன்! - கிருஷ்ணபாபு - பாலைய்யா, மீனா, மந்த்ரா

படம்
  கிருஷ்ணபாபு பாலைய்யா, மந்த்ரா, அப்பாஸ்  இயக்கம் - முத்தியாலா சுப்பையா வசனம் - தொட்டபள்ளி மது  கதை - சாந்தி அட்டாலா பாலைய்யா பெரிய ஜமீன்தாரின் மகன், அவரின் அப்பா பெண்களின் சபலமான ஆள். இப்படி இருக்கும்போது அவர் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். அந்த பெண்ணின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஜமீன்தாரின் அதிகாரப்பூர்வ முதல் மனைவியைக் கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் தவறுதலாக மனைவிக்கு கொடுத்த விஷப்பாலை ஜமீன்தார் எடுத்து குடித்துவிட அவர் ரத்தவாந்தி எடுத்து பரலோக பிரவேசமாகிறார். இந்தப்பழி சிறுவனின் மீது சித்தியும் அவரது உறவினர்களும் போட சிறுவன் கிருஷ்ணபாபு சிறைக்கு செல்கிறான். அவனது அம்மா இந்த சோகம் தாங்காமல் இறந்துபோகிறார். இந்த நேரத்தில் கிருஷ்ணபாபுவின் தாய்மாமா தான் அனைத்து விஷயங்களையும் பார்த்து சொத்துக்களைப் பராமரிக்கிறார். கிருஷ்ணபாபு சிறையில் இருந்து வந்து என்ன செய்கிறார், தந்தை, தாய் இறப்புக்கு காரணமான சித்தி வகையறாக்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதே கதை.  படம் முழுக்க புத்திசாலித்தனமாக விஷயங்கள் என்பது கிளைமேக்ஸில் வரும் தம்பியைக் காப்பாற்றுவது மட்டுமே. வேறு எதுவும் கிடையாது. மற்றபடி தியாகம்

தீயவாள் பயிற்சிமுறையைக் கற்க போட்டிபோடும் பேராசைக்காரர்கள்! - தி ஸ்மைலிங் ப்ரவுட் வாண்டெரர்

படம்
  ஸ்மைலில் ப்ரவுட் வாண்டரெர் சீன தொடர் மாண்டரின் மொழித்தொடர் தமிழில்.. எம்எக்ஸ்பிளேயர் தொன்மை சீனாவில் உய், ஓஷன், பௌத்தம் என பல்வேறு மதங்களைக் கடைபிடிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்து தலைவர்களையும் சந்தித்துப் பேசி முடிவெடுக்கும் திறமை உய் பள்ளிக்கு உண்டு. பிற பள்ளிகள் அனைத்தும் உய் பள்ளித் தலைவரின் கட்டளைகளை கேட்பார்கள். இதன் அனைத்து பள்ளி தலைவர்களும் கலந்துபேசி தங்களது பொது எதிரிகளை சமாளிப்பார்கள். இவர்களது பொது எதிரி, மந்திர சக்திகளை பயன்படுத்தும் அசுரர்கள். இவர்கள் டாபோ எனும் கலையைக் கற்றவர்கள்.  ஒரே பள்ளி ஒரே தலைமை என்ற கொள்கையை உய் பள்ளி தலைவர் எடுக்கிறார். இதற்காக கூலிப்படைகளை அமர்த்தி தனது கொள்கைகளுக்கு ஒத்துவராத பள்ளி தலைவர்களை கொல்கிறார். அவர்களின் பள்ளி கற்றுக்கொடுக்கும் தற்காப்புக்கலை நூல்களையும் திருடி வந்து பயிற்சி எடுக்கிறார். இதெல்லாம் தாண்டி அவருக்கு தீராத வேட்கையை ஏற்படுத்துவது தீயவாள் பயிற்சி எனும் வாள்சண்டை முறை.  இதனை ஒருவர் கற்றுவிட்டால் பிற வாள்பயிற்சி முறைகளை எளிதாக உடைக்க முடியும். பிரிந்துள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து உய் பள்ளி என்ற பெயரில் அதன

அம்னீசியா பலவீனத்துடன் துரோகத்தை களையெடுக்கும் குற்றவியல் அதிகாரி! ரீபார்ன் - சீன தொடர்

படம்
            ரீபார்ன் சீனத்தொடர் 28 எபிசோடுகள் நகரில் உள்ள புகழ்பெற்ற குற்றக்குழுவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் சிலர் செய்யும் துரோகத்தால் தனது சகாக்களை போலீஸ் அதிகாரி இழக்கிறார் . உண்மையில் அந்த துரோகத்தின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து அவர்களை அழிப்பதே கதை . பொதுவாக உடலில் நோய் , ஊனம் கொண்ட நாயகர்களை தொடரில் படத்தில் நடிக்கவைப்பது பார்வையாளர்களிடையே எப்படி இவர் வெல்வார் என எதிர்பார்ப்பை உருவாக்கும் . இந்த தொடரில் நாயகனுக்கு அம்னீசியா பிரச்னை உள்ளது . தலையில் தோட்டா பாய்ந்து அதன் சில்லுகள் மூளையில் தேங்கி நிற்கின்றன . ஆபரேஷன் கூட செய்யமுடியாத நிலை . முழங்காலில் தோட்டா பாய்ந்ததில் தினசரி காலில் பதினைந்து மில்லி சீழை அகற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . இந்த சிக்கல்களோடு குற்றவியல் பிரிவின் துணைத்தலைவராக குழுவை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது . என்கவுண்டர் சம்பவத்தில் தனது அத்தனை சகாக்களையும் பலி கொடுத்துவிட்டு கோமாவிலிருந்து எழுந்து வருபவரை பலரும் கைதட்டி வரவேற்று பதவி உயர்வு கொடுக்கின்றனர் . அதில் உரையாற்ற சொல்லும்போது , தனது விருதை து