இடுகைகள்

ஒடிசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடல் புற்றுநோயை வென்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரி ஆடிய இரண்டாம் சுற்று! - இரண்டாம் சுற்று - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
  இரண்டாம் சுற்று -ஆர்.பாலகிருஷ்ணன் இரண்டாம் சுற்று ஆர். பாலகிருஷ்ணன் எஸ்ஆர்வி பதிப்பகம் இந்த நூலை எஸ்ஆர்வி பள்ளியின் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதன் பெயர் இரண்டாம் சுற்று என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. எழுத்தாளர், குடலில் புற்றுநோய் வந்து குணமான பிறகு நூலை எழுதியிருக்கிறார்.  ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறகுக்குள் வானம் போலவே இந்த நூலும் முக்கியமானது. மாணவர்களுக்கான நூல்தான். ஆனால் இம்முறை பணி சார்ந்த பல்வேறு ஆழமான அனுபவங்களை வாசகர்கள் படிக்க முடியும். நூலின் வடிவம் கட்டுரை, கவிதை என்று அமைந்துள்ளது.  இதில் ஒடிசா மாநிலத்திற்கு தேர்வாகி செல்வது, அங்கு தொலைதூர கிராமத்திற்கு செல்வதும், வளர்ச்சிப்பணிகளைப் பற்றிச்சொல்வது சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நவடா என்ற கிராமத்திற்கு அரசு அதிகாரிகளே செல்லாதபோது, வளர்ச்சிப் பணிக்காக ஆர். பி அங்கு செல்கிறார். இதன் விளைவாக அந்த கிராமத்தினருக்கு கவனம் கிடைக்கிறது. பிந்தைய ஆண்டுகளில் வளர்ச்சிப் பணி காரணமாக மீண்டும், கிராமத்தின் பெயரை உச்சரிக்கிறார்கள். அந்த கிராமத்தினருக்கும் அரசின் திட்டங்கள் மெல்ல சென்று சேருகின்றன.  சாலைத்திட்டங்கள், குடிநீர் வ

மருத்துவர்களுக்கு எதற்கு விடுமுறை? - ஒடிசா பரிதாபம்!

படம்
தோல் பாதிப்புக்காக அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவமனை கூட வேண்டாம் என்று ஞாயிறு ராயப்பேட்டை கிளம்பினேன். பொதுவாக எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் மருத்துவமனைகள் உண்டு. கொடுமுடி, சிவகிரி என இரண்டு மருத்துவமனைகளும்தான். ஆனால் ராயப்பேட்டையில் அப்படியில்லை. ஞாயிறு ஒருநாள் மட்டுமே எனக்கு விடுமுறை. நான் மற்ற வேலைநாட்களில் வந்து பார்ப்பது நடக்காத விஷயம். மருத்துவமனையில் பாதுகாவலரை அடையாளம் காட்டச்சொல்லி யோகா இயற்கை வாழ்வியல் மையம் நோக்கிச் சென்றேன். கதவு திறந்திருந்தது. உள்ளே நோயாளிகளின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து அங்கு பணியாற்றும் பெண் ஊழியருடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நான் நுழைந்து மருத்துவரைத் தேடினேன். ஏன் என்கிறீர்களா? சித்த மருத்துவரைப் போல அடக்கமான மனிதர்களை எங்குமே பார்க்க முடியாது. அமைதியாக அறையில் சம்மணங்கால் போட்டு அகத்தியர் போல அமர்ந்துவிடுவார்கள். நாள்பட்ட வியாதிக்கார ர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களும் ஆறு மாதங்களுக்குள் காலாவதி ஆகிவிடுவார்கள்.இவர்களுக்கு வைத்தியம் செய்து அவரும் விரக்தியாகி விடுவார். உடனே ஊழியர் கேட்டார். என்னப்பா வேணும்? சித்தா டாக்டரைப் பார

எரித்தாலும் மனிதநேயம் வாழும்!

படம்
the battle ஒடிசாவில் அந்த கொடூரம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகப்போகின்றன. கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ், அவரது பிள்ளைகளான பிலிப், டிமோத்தி ஆகியோரை உயிரோடு எரித்துக்கொன்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரிலிருந்து 250 கி.மீ தூரத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் நடந்த அநீதி இது. அவர் இறந்துபோனதை நம்பவே முடியவில்லை. அவர் எங்களோடுதான் சாப்பிட்டார். சந்தாலி, ஒடியா, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பேசுவார். அவரது மகன்களும் கூட இனிமையாக நடந்துகொண்டார்கள் என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான பிக்ரம் மராந்தி. 700 வீடுகளைக் கொண்ட பழங்குடிமக்கள் வாழும் பகுதி இது. சந்தாலி, முண்டா, கோல்கா ஆகிய இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் இங்கு இன்னுமே வறுமை உள்ளது. கல்வியும், உணவும் தரும் யார் பேச்சையும் இம்மக்கள் கேட்பார்கள். உணவு தருபவர், இந்துவோ, கிறிஸ்தவரோ அதில் என்ன பிரச்னை வரப்போகிறது என்கிறார் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த ரோடியா சோரன். மாற்றம் வந்திருப்பது கலாசாரம் குறித்துத்தான். யாரேனும் வெளியில் இருந்து வந்து கலாசாரத்தை மாற்ற முயன்றால் உடனே போலீசுக்கு போய்விடுகின்