இடுகைகள்

ரஜினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அத்தையின் கொட்டத்தை அடக்கி ஒட்டுமொத்த குடும்பத்தை ரேஷன்கார்டில் சேர்க்கும் அல்லுடு! - அத்தாக்கு மொகுடு - சிரஞ்சீவி

படம்
  அத்தாவுக்கு மொகுடு சிரஞ்சீவி, விஜயசாந்தி, பிரம்மானந்தம் இதுவும் ரஜினி நடித்த படம்தான். இதில் மாமியாரின் ஆணவத்தை மருமகன் எப்படி அடக்கி அவளின் குடும்பத்தை ஒன்றாக சேர்க்கிறான் என்பதே கதை.   படம் வெற்றி பெற்றது என்றாலும் பெரிய முரண், திருப்புமுனை என்பதெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு உள்ள படம். இன்று சீரியல்கள் வரிசையாக ஓடும் காலத்தில் இந்த படம் நெடுந்தொடர்களைத்தான் மீண்டும் நினைவுபடுத்துகிறது.  படத்தை தன் தோளில் தூக்கி சுமந்திருப்பது, சிரஞ்சீவிதான். படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் உள்ளது. அத்தனையிலும் தனியாக தெரியும் ஆட்கள் என்று பார்த்தால் யாருமில்லை.  இதில், விஜயசாந்தி எப்படி சிரஞ்சீவியை காதலிக்கிறார் அதாவது கல்யாண் என்ற பாத்திரத்தை என்று பார்த்தால், தலையே சுற்றிப்போகும். தன் தோழியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று இன்னொருவருக்கு மணம் செய்விக்கிறார். இதற்காக பெண்ணின் பெற்றோரை முந்திக்கொண்டு காவல்துறையில் புகார் கொடுக்கிறார். அதில்தான், கல்யாணின் குணம் புரிந்து குற்றவுணர்வு கொண்டு காதல் வயப்படுகிறார். இந்த காட்சிகளெல்லாம் அடடா, அப்பப்பா ரகத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். விஜயசாந்தியின

ரஜினியை பின்னாலிருந்து இயக்குகிறார்கள்! - கே.வீரமணி

படம்
சாதி பிரிவினைகளை ஆதரிக்க ராமாயணத்தை அடையாளம் காட்டுகிறார்கள்! பிரிவினையின் லாபம் அடையும் கட்சிகள் அதற்காக நவீன இந்திய சிற்பிகளை அவமானப்படுத்துவதும், அதற்காக பாடநூல்களை கூட மாற்றுவதும் நடந்து வருகிறது. இப்போது கூடுதலாக, பிரபலமாக உள்ள நபர்களை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் பிரிவினைப்படுத்த மதவாத கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதற்கான செயல்பாடுகளில் பெரியார் சிலைகள் உடைப்பு, அவரது கருத்துகள் திரிக்கப்படுவது என நடந்து வருகிறது. பிரபல நடிகரான ரஜினிகாந்த் துக்ளக் வார இதழில் பெரியார் பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருகிறார் என்று இதற்கு பதில் சொல்லுகிறார்   திராவிடர் கழக பொதுச்செயலாளரான கி.வீரமணி. மக்களிடையே பிரிவினை விதைக்கும் பிளவு செயல்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு ஜோதிடம் தெரியாது. இதுபோன்ற யூக கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. ரஜினி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று கூறியதற்காக பெரியாரிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நினைக்கிறீர்களா? இல்லை. அவசியம் கிடையாது. ரஜினி போன்ற நபர்கள் இப்ப

காமராஜரின் வழியில் ரஜினி பயணிக்கிறார் - தமிழருவி மணியன்!

படம்
காமராஜரைப் போலத்தான் ரஜினியும்! ரசிகர்களைவிட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விரும்புவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியாகத்தானே இருக்கமுடியும். எத்தனை மீம்ஸ்கள் கிண்டல் என தாளித்தாலும் ரஜினி மீது தீராத காதல் கொண்டு அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிஆர்ஓவாக வேலை பார்ப்பவர், மணியன். திரைப்படம் வரும் சமயம் ரஜினியின் அரசியல் விஷயங்கள் பேசப்படும். இப்படியே இருபது ஆண்டுகள் போய்விட்டன. இதுபற்றி அவரிடம் பேசினோம். ரஜினியோடு உங்களுடைய உறவு எப்படிப்பட்டது? நண்பர், ஆலோசகர், உதவியாளர் என எப்படி வகைப்படுத்துவீர்கள்? நான் கடந்த 32 மாதங்களாக அவரோடு தொடர்பில் இருக்கிறேன். அவருடைய ஆலோசகர் என்று கூறமுடியாது. நான் அவருடைய நண்பர் என்று கூறவே விரும்புகிறேன். அவருக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை. நீங்களே சொல்லுங்கள். ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார்? அடுத்த ஆண்டு ஏப்ரல் – செப்டம்பருக்குள் ரஜினி தன் கட்சியை முறைப்படி அறிவிப்பார். உடனே திமுக, அதிமுக போல பூத் கமிட்டிக்கான ஆலோசனைகளைத் தொடங்குவார். 234 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை விரைவில் அறிவிப்பார். தற்போது 80 சதவீத வேலைகள் முடிந்