அத்தையின் கொட்டத்தை அடக்கி ஒட்டுமொத்த குடும்பத்தை ரேஷன்கார்டில் சேர்க்கும் அல்லுடு! - அத்தாக்கு மொகுடு - சிரஞ்சீவி

 


அத்தாவுக்கு மொகுடு
சிரஞ்சீவி, விஜயசாந்தி, பிரம்மானந்தம்


இதுவும் ரஜினி நடித்த படம்தான். இதில் மாமியாரின் ஆணவத்தை மருமகன் எப்படி அடக்கி அவளின் குடும்பத்தை ஒன்றாக சேர்க்கிறான் என்பதே கதை.  


படம் வெற்றி பெற்றது என்றாலும் பெரிய முரண், திருப்புமுனை என்பதெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு உள்ள படம். இன்று சீரியல்கள் வரிசையாக ஓடும் காலத்தில் இந்த படம் நெடுந்தொடர்களைத்தான் மீண்டும் நினைவுபடுத்துகிறது. 


படத்தை தன் தோளில் தூக்கி சுமந்திருப்பது, சிரஞ்சீவிதான். படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் உள்ளது. அத்தனையிலும் தனியாக தெரியும் ஆட்கள் என்று பார்த்தால் யாருமில்லை. 


இதில், விஜயசாந்தி எப்படி சிரஞ்சீவியை காதலிக்கிறார் அதாவது கல்யாண் என்ற பாத்திரத்தை என்று பார்த்தால், தலையே சுற்றிப்போகும். தன் தோழியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று இன்னொருவருக்கு மணம் செய்விக்கிறார். இதற்காக பெண்ணின் பெற்றோரை முந்திக்கொண்டு காவல்துறையில் புகார் கொடுக்கிறார். அதில்தான், கல்யாணின் குணம் புரிந்து குற்றவுணர்வு கொண்டு காதல் வயப்படுகிறார். இந்த காட்சிகளெல்லாம் அடடா, அப்பப்பா ரகத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். விஜயசாந்தியின் பாத்திரமான சசிரேகா தேவி பாத்திரம் இப்படி அடித்தளமே இல்லாமல் கட்டப்பட்ட வீடுதான். கல்யாண் பாத்திரம் சற்று நம்பகத் தன்மையுடன் உள்ளது. அவர் வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர். சற்று துணிச்சலாக தனது வாழ்க்கை தாண்டி பிறரது நலனுக்கும் உழைப்பவர் என்றுதான் சொல்லவேண்டும். 


கல்யாண மண்டபத்தில் பைக்கில் அமர்ந்து கொண்டு நெருக்கமாக வில்லன்களோடு போடும் சண்டைக்காட்சி பரவாயில்லை ரகம். ஆனால், காரில் செல்லும்போது கார் கிரேன் மூலம் தூக்கப்பட்டு வில்லன்களோடுமோதும் சண்டைக்காட்சி படுமோசம். ஏணியை கல்யாணின் கழுத்தில் வைத்து நெருக்குகிறார்கள். அவர் அதை தட்டிவிட்டு வேறுபக்கம் திருப்பிவிட்டு எதிரிகளை பந்தாடினால் சரி. ஆனால், கால் வைக்கும் படிகளை குரல் வளையால் உடைத்துக்கொண்டு வந்து எதிரிகளை அடித்து உதைக்கிறார். அது எப்படி சாத்தியம் என தெரியவில்லை. ஃபேன்டசியாக சண்டைக் காட்சியை செய்திருக்கிறார்கள் போல... நிஜத்தில் ஒருவர் அப்படி செய்தால், அவரே தற்கொலை செய்துகொள்கிறார் என்று உறுதியாக கூறலாம். 


ஈகோ மோதல்


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை