உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் பற்றி சிறு பார்வை - இயற்கை 360 டிகிரி

 ஆண்டு முழுவதும் வெப்பம் இருக்கும் புல்வெளிப்பகுதி. ஆப்பிரிக்காவின் சாவன்னா பலருக்கும் நினைவுக்கு வரலாம். அதேதான் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இங்கு, வெப்பம் இருந்தாலும் மழையும் பெய்வதுண்டு. இதில் முளைக்கும் புற்களை தின்ன வரிக்குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் வருகின்றன. அப்போது அதை வேட்டையாடி உணவாக உண்ணும் உயிரினங்களும்தானே வரும்? ஆம் சிங்கம் உள்ளிட்ட இரையுண்ணிகள் இதை தமது ஆகாரமாக்கிக்கொள்கின்றன. 

சாவன்னா

துருவப்பகுதி

நாம் வாழும் உலகம்

பூமியில் நமது வாழ்க்கை முதன்முதலில் கடலில்தான் தொடங்கியது. 3.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு, (ஒரு பில்லியன் - நூறு கோடி). உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி நிலம், நீர் என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கியது. அப்போது பூமியில் பல்வேறு இயல்புகள் கொண்ட நிலப்பரப்புகள், நீர்ப்பரப்புகள் இருந்தன. அவற்றைப் பார்ப்போம். 

ரோனி

வடதுருவப்பகுதியில் ஆர்க்டிக் கடல் சூழ்ந்துள்ளது. தென்பகுதியில் அன்டார்டிகா அமைந்துள்ளது. எனவே இருதுருவப் பகுதிகளிலும் உறையும் பனி உள்ளது. இங்கும் உயிரினங்கள் உள்ளன. இவை குளிரைத் தாங்கும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. உடலில் அடர்த்தியான ரோமம், சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு, குளிரில் உறையாத ரத்தம் கொண்டவை. 


விளைநிலம் 


நிலப்பரப்பில் பத்தில் ஒரு பகுதிதான் விளைச்சலுக்கு பயன்பட்டுவருகிறது. இப்படி பயிர் செய்யப்படும் பயிர்கள் மனிதர்களுக்கு உணவாகவும் வர்த்தகம் செய்யவும் உதவுகிறது. இதைத்தாண்டி பண்ணை விலங்குகளை வளர்க்க இப்படி செய்யும் விவசாயம் உதவுகிறது. மனிதர்களின் விவசாயத்தை சார்ந்து நிறைய விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மக்கள் தொகை பெருகி வருவதால் பல்வேறு இடங்களில் காடுகளை அழித்து நகரங்களை அமைப்பது அதிகரித்து வருகிறது. 


அடர்த்தியான காடு


வடக்குப்பகுதியில்தான் அதிகளவு அடர்த்தியான காடுகள் உள்ளன. இங்கு கோடையில் விலங்குகள் எளிதாக உணவு தேடி உண்கின்றன. ஆனால், பனிக்காலத்தில் உணவு கிடைக்காது. அந்த காலங்களில் தனது குகைகளில், இருப்பிடங்களில் உறங்குகின்றன. பிறகு எழுந்தால் பருவம் மாறியிருக்கும். விருந்துதான். வேட்டைதான். 


பருவக்காடுகள்


பசுமை மாறாத காடுகள் ஈகுவடார் அருகே அமைந்துள்ளன. உலகின் பாதிக்கும் மேலான அரிய விலங்கினங்கள் இங்கு பார்க்க கிடைக்கின்றன. இந்த காடுகளைத்தான் உண்மையில் ஜங்கிள் என்று கூறவேண்டும். இவை எப்போதும் கதகதப்பாகவும் ஈரமாகவும் காணப்படுகின்றன. தாவரங்களின் இலை, பூ, கனிகள் ஆகியவை விலங்குகளுக்கு முக்கியமான உணவு. 


பாலைவனம் ம


ஆண்டுக்கு 25 செ.மீ. அளவுக்கு மட்டுமே மழை பெய்யும் இடங்களை பாலைவனம் என்று வரையறுக்கலாம். இங்கு பொதுவாக உள்ள வெப்பநிலை அளவு 50 டிகிரி செல்சியஸ் ஆகும். இங்கு வாழும் விலங்குகள் குறைவான நீரை உடலில் கொண்டுள்ளன. பகலில் ஓய்வெடுப்பவை. இரவில் வேட்டை மன்னனாக மாறி இரையை தேடுகின்றன. 


துந்த்ரா


தட்டையான மரங்களே இல்லாத நிலப்பரப்புகளை துந்த்ரா என்று அழைக்கலாம். இப்பகுதி நிலம் ஆர்க்டிக்கில் காணப்படுகிறது. இதன் மேற்பரப்பு சற்று பனியால் உறைந்தது போலவே இருக்கும். கோடைக்காலத்தில் இந்த நிலப்பரப்பில் புத்துயிர்ப்பு தெரியும்., அப்போதுதான் பல்வேறு நிலப்பரப்புகளிலிருந்து பூச்சிகள், பறவைகள், விலங்குகள் இங்கு இடம்பெயர்ந்து வரும். மத்திய தரைக்கடல் பகுதி


இங்கு வெப்பம், குளிர், மழை என அனைத்துமே சற்று மிதமாக இருக்கும். உயரம் குறைந்த மரங்கள் காணப்படுகின்றன. சப்பாத்திக்கள்ளி போன்ற தாவரங்கள் பல்வேறு வகைககளாக இருக்கும். காட்டு ஆடு, நரி, காட்டுப்பன்றி, கழுகுகள் ஆகியவை சுற்றித்திரியும். 


ரோனி 


சூப்பர் நேச்சர் என்சைக்ளோபீடியா 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை