Time magazine 100 peoples- Amanda sefried, ariana debose, Nathan chen

 










டைம் 100 - அரியானா டிபோஸ் 


ஆச்சரியமூட்டும் கலைஞர் 



அரியானாவை நான் க்வாட்ரூபல் த்ரெட் என்றுதான் கூறுவேன். அவர் வெறும் நடனக்கலைஞர் மட்டுமல்ல சிறந்த நடிகை, பாடகி என்பதோடு கருணையும் கொண்டவர். நான் அவரை முதன்முதலாக ஹாமில்டனில்தான் அவரது நடிப்பைப் பார்த்தேன். அதில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் மிக மெதுவாக நகர்ந்து வரவேண்டும். அதற்கு உடல் வலிமையும், நடிப்புத் திறனும் வேண்டு்ம். அதை அரியானா மிக அற்புதமாக சமாளித்திருந்தார். அவரை நான் மீண்டும் அதேபோலான பாத்திரத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறது. அண்மையில் நாங்கள் ஸமிகாடூன் என்ற டிவி நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அதில் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம். அரியானாவைப் பொறுத்தவரை சிறுபிள்ளைத்தனமாக, வேடிக்கையாக நடந்துகொண்டார். அவரது செயல்பாட்டைப் பார்த்தபோது பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதவர் என புரிந்துகொண்டேன். எந்த பயமுமில்லை. அவர் எனது பாத்திரத்தைப் புரிந்துகொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டார். 


வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற நடிகை. தன்னை வெளிப்படையாக பால் புதுமையினர் என்று கூறிக்கொண்டவர். அவர் அடுத்ததாக எந்த டிவி நிகழ்ச்சி, சினிமாவில் நடித்தாலும் நான் அவரை ஐந்தாவது வரிசையில் மையமாக அமர்ந்து ஊக்கப்படுத்துவேன் என்பது உண்மை. அவரது நடிப்பைப் பார்த்து கத்தி கூச்சல் போடுவது, கைதட்டுவது ஆகியவற்றுக்கான பாதுகாவலர்கள் என்னை நிகழ்ச்சிக் கூடத்திலிருந்து வெளியேற்றக் கூட செய்யலாம். அதையும் நான் அரியானாவுக்காக ஏற்றுக்கொள்வேன். 


செனோவெத் - எம்மி விருது பெற்ற நடிகர். 









அமண்டா சீஃபீரைட்


நான் அமண்டாவை  மங்க் என்ற படத்திற்காக நடிக்க கேட்டேன். அப்போது அமண்டாவைப் பார்ப்பவர்கள் அவர் காதல் மற்றும் நகைச்சுவை படத்தில் நடிப்பதற்கானவர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். நான் அவரிடம் படத்தின் பாத்திரம் பற்றி பேசியபோது, அவர் தன்னைப் பற்றி பிறர் நினைத்ததை தாண்டிய பரிமாணம் கொண்டவர் என்பதைப் புரிந்துகொண்டேன். 


தி டிராப்அவுட்டில் எலிசபெத் ஹோல்ம் வேடத்தில் அமண்டா நடித்திருந்தார். அவர் ஏற்ற பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்ததோடு, அதற்கேற்ப நடித்தும் இருந்தார். தான் ஏற்கும் பாத்திரங்களைப் புரிந்துகொண்டு நடித்து விருதுகளைப் பெறும் அளவுக்கு முன்னேறியுள்ளார். தான் ஏற்கும் பாத்திரங்களுக்கு நியாயம் செய்யும் வகையில் அவர் நடித்து வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. 


டேவிட் ஃபின்ச்சர், அமெரிக்க திரைப்பட இயக்குநர் 






நாதன் சென்


தொடக்க காலத்தில் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றபோது குழந்தை ததும்பியபடி இருந்தவர் நாதன் சென். இப்போது ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கிறார். ஸ்கேட்டிங் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்போது தான் ஸ்கேட்டிங்கில் போட்டியிடும் திறமையான போட்டியாளர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். 


2002ஆம் ஆண்டு நான் சால்ட் லேக் சிட்டி ஒலிம்பிக்கில் பங்கேற்றேன். அப்போது நாதன் சென்னுக்கு இரண்டு வயது. சீன அமெரிக்க ஸ்கேட்டிங் வீரராக அவர் பின்னாளில் மாறினார். என்னை தனது ரோல்மாடலாக கருதினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் இப்படி ஊக்கத்தை வெளியில் தேடினாலும் இப்போது அவர் தன்னையே தனக்கு அளவுகோலாக வைத்துக்கொண்டு முன்னேறி வருகிறார். புதிய எல்லைகளை தனக்கென வைத்துக்கொள்கிறார். அடுத்த தலைமுறை ஒலிம்பிக் வீரர்களுக்கு நாதன் சென் முக்கியமான ஊக்கத் தூண்டுதல் என்று கூறலாம். 


கருத்துகள்