திருமண உறவுகளைக் காப்பாற்ற பேச வேண்டிய காதலின் மொழிகள் !

 
காதல் மொழிகள் ஐந்து 


கிரேக் சேப்மன் 


தமிழில் நாகலட்சுமி சண்முகம் 


மின்னூல்ஒருவர் திருமண வாழ்க்கை, நட்பு, உறவுகளைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டுமென கிரேக் சேப்மன் சொல்லித் தருகிறார். முக்கியமாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை. பரிசு, பாராட்டு, பிரத்யேக நேரம், ஸ்பரிசம், பணிவிடை ஆகியவற்றை முதல் அத்தியாயத்தில் எழுத்தாளர் சொல்லிவிடுகிறார். 


அடுத்து வரும் அத்தியாயங்களில் இந்த ஐந்து விஷயங்களுக்குமான எடுத்துக்காட்டுக்களை சொல்லி விளக்குகிறார். பெரும்பாலும் எழுத்தாளர் வாழ்க்கை பயிற்சிக்கான பயிலரங்கு நடத்துபவர் என்பதால் அதில் கண்ட அனுபவங்களைத்தான் பகிர்கிறார். 


இதில் சில அனுபவங்களை அவர் பார்த்து, அதன் காரணம் என்ன என்பதை அறிகிறார். குறிப்பாக, அதிசயம் என யாராவது ஒரு தம்பதியினர் சொல்லிவிட்டால், அந்த அதிசயத்தை அறியாமல் சேப்மன் விடமாட்டார். அதை வைத்து பயிலரங்கு நடத்தலாமே? பிறகு அனுபவங்களைத் திரட்டி நூலாகவும் எழுதி விற்கலாம். 


மனித உறவுகள் எளிதாக உடையும் இயல்பு கொண்டவை. அதை எப்படி காப்பாற்றுவது என்பதற்கு தனது சொந்த வாழ்க்கை எடுத்துக்காட்டுகளையும் எழுத்தாளர் சொல்லுகிறார். அதுதான் நூலில் முக்கியமானது. அதை எப்படி கடந்துவந்தேன் என்றும், ஒருவருக்கு பிடித்த விஷயங்களை அறிய முயல்வது ஆகியவை பற்றியும் பேசியுள்ளார். 


காதல் காலகட்டம், பிறகு திருமணம் என்ற உறவு உருவானபிறகு என்னவாகிறது என்பதையும் தெளிவாக விளக்கியிருப்பது முக்கியமானது. ஏனெனில் பலருக்கும் காதலிக்கும் காலகட்டத்தில் இருந்த மனிதர், கல்யாணமானபிறகு மாறிவிடுகிறார் என நினைக்கிறார்கள். உண்மையில் மாறுவது என்ன என்பதை ஆசிரியர் நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார். இது திருமண உறவுகளுக்கு முக்கியமான நூல் என்று கூறலாம். 


கோமாளிமேடை டீம் 


நூலை வாங்க 


https://www.commonfolks.in/books/d/kaathal-mozhigal-ainthu


 கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை