காதலித்த வெளிநாட்டு காதலன் அக்காவின் கணவரா? - பாவாகாரு பாகுன்னாரா - சிரஞ்சீவி, ரம்பா
பாவகாரு பாகுன்னாரா
சிரஞ்சீவி, ரம்பா, பிரம்மானந்தம், பரேஷ் ராவல்
இயக்குநர் ஜெயந்த் பானர்ஜி
இசை மணி சர்மா
வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் கதையை எடுத்து தட்டி டிங்கரிங் பார்த்து நம்மூருக்கான மசாலாக்களை சற்று ஜாஸ்தியாக சேர்த்தால் பாவா பாகுன்னாரா படம் தயார்.
கதை தொடங்குவது வெளிநாடு ஒன்றில்தான். அதாவது நியூசிலாந்து. அங்குதான் ரம்பா படித்துக்கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டார் என அவரது தோழன் புகார் செய்ய, அப்படியா என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடித்து உதைக்க கிளம்புகிறார் ரம்பா. அதாவது சொப்னா. அவர் அடித்து கை, காலை முறிக்க வேண்டுமென கூறியது ராஜூ என்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவிதான்.
அவர் அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வரு1,280 × 720கிறார் கூடவே இந்தியாவில் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறார். அறம் செய்யவும் பொருள் வேண்டுமே? அதற்குத்தான் ஹோட்டல் தொழில்.. இந்த சூழலில் சொப்னாவுக்கு ராஜூவுக்கும் காதல் வருகிறது. ராஜூ நான் இந்தியாவுக்கு போய்விட்டு வருகிறேன் என கிளம்பிவிடுகிறார். அங்கு வந்து அனாதை ஆசிரம வேலைகளை முடித்துவிட்டு பார்த்தால், வயிற்றில் பிள்ளையோடு இருக்கும் பெண்ணைப் பார்த்து அவளுக்கு உதவ முயல்கிறார் வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் படமேதான். தன்னை கணவன் என்று வீட்டில் சொல்லிவிடு, அடுத்தநாள் நான் ஊருக்கு போய்விடுகிறான். உன்னை ஏமாற்றிவிட்டான் என ஊர் என்னைத்தான் சொல்லும். நீயும் உன் பிள்ளையும் சௌக்கியமாக இருக்கலாம் என்கிறார்.
ஆனால் ஊருக்கே புத்தி சொல்லும் மாளிகையில் வாழும் பெரிய மனிதரின் பெண்தான் மாசமான பெண். அது ராஜூவுக்கு தெரிய வரும்போது, அடுத்தநாள் என்பதை அவர் மறந்துவிடுகிறார். அவர் மறக்கி றாரா இல்லை இயக்குநர் மறந்துவிடுகிறாரா என்று தெரியவில்லை. அங்கேயே ராஜூ தான் சொன்ன விஷயங்களைக் கூட மறந்து தங்கி விடுகிறார். பிறகு பெரிய மனிதரின் இரண்டாவது மகளான வெளிநாட்டு சொப்பன சுந்தரி மன்னிக்கவும் சொப்னா வந்துவிடுகிறார். தனது மாமா யார் என பார்ப்பவள், தன்னை வெளிநாட்டில் காதலித்த ராஜூ என்று தெரிந்த பிறகு விடுவாளா அதேதான். பயங்கரமான ஈகோ சண்டை நடக்கிறது.
ஊரில் நாலுபேர் நாலுவிதமாக பேசுவார்கள் என நினைக்கும் பெரியவர் ராஜூவை ஏற்று கல்யாணம் செய்துவைக்க கூட விரும்புவதில்லை. மேலும் தனது இரண்டாவது மகளை கனகராஜ் என்ற கிராமத்து மைனருக்கு மணம் செய்துவைக்க தயாராகிவிடுகிறார். அக்காவை மாசமாகிகயவனை கண்டுபிடித்து கல்யாணம் செய்துவிட்டு ராஜூ தனது சொப்னாவை எப்படி கல்யாணம் செய்துகொள்கிறார் என்பதே இறுதிக்காட்சி.
படத்தை எதற்கு பார்க்க வேண்டும். சிரஞ்சீவியின் நகைச்சுவை, நடனம் ஆகியவற்றுக்காகத்தான். கூடவே ரம்பா வேறு இருக்கிறார். அப்புறம் என்ன பாடல்கள் எல்லாம் அதிரடியாக வெடிக்கின்றன. காதுகளில்தான். இதனால் படத்தின் முடிவு எப்படி இருந்தால் என்ன படத்தை நீங்கள் ஜாலியாக பார்க்கலாம்.
படத்தில் சிரஞ்சீவி, ரம்பா பாத்திரத்தை தவிர வேறு பாத்திரங்களை பற்றியெல்லாம் இயக்குநர் கவலையே படவில்லை. அதெல்லாம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என நினைத்துவிட்டார். போல.... வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் படத்தில் கீனு ரீவ்ஸ், கருவுற்ற பெண், அவளின் குடும்பம் என பலரின் உணர்வுகளைப் பற்றி இயக்குநர் காட்சி ரீதியாகவே காட்டியிருப்பார். இதெல்லாம் அண்ணய்யாவின் படத்தில் இல்லை.
தாளம் போடலாம் பாடலைக் கேட்டு...
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக