காந்தியை குழிதோண்டி புதைக்க முயலும் இந்து தீவிரவாத அமைப்பும், அதன் அரசியல் அமைப்பும் !
ஒருவர் நிஜத்தில் எப்படி இருக்கிறார் என்பதும், தன்னை எப்படி வெளியே காட்டிக்கொள்கிறார் என்பதிலும் தான் வேறுபாடுகள் உள்ளன. ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரைப் பார்த்திருப்பீர்கள். அவரது செயல்களையும் அறிந்திருப்பீர்கள். சிறிய உருவம் கொண்ட மனிதர்தான் லட்சக்கணக்கான யூத மக்களின் அழிவுக்கு காரணமானவர். இதை ஊடகங்களின் வழியே எளிதாக அறிய முடியாது. அவர் வைத்திருந்த ஊடக பிரசாரகர்கள் குழந்தைளள், மாணவிகளோடு இருக்கும் புகைப்படங்களைக் காட்டுவார்கள். சைவ உணவுப்பழக்கம் கொண்டவர். இசையை ரசிப்பவர். குறையாததற்கு ஓவியர் வேறு. ஆனால் அவர் புகைப்படத்தின் பின்னாலுள்ள அசுர மனதை அறிந்தவர்கள் மிகச்சிலரே.
இந்தியாவில் அப்படி அரசியல் களங்களில் வேறுபட்ட காரண காரியங்கள் நடக்கும். புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் யோக்கியர்களின் முகத்திரை கிழிந்துவிடும். காவிக்கட்சி ஒருமுறை காந்தி சங்கல்ப் யாத்ரா என்ற பேரணியை தொடங்கியது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கிய பேரணியில் சுத்தம், உண்மை, சுய ராஜ்ஜியம், அகிம்சை ஆகிய விஷயங்கள் முன்வைத்து பேசப்பட்டன. ஆனால் காந்தி வாழ்நாள் முழுக்க போராடிய தீண்டாமை ஒழி்ப்பு, இந்து - முஸ்லீம் ஒற்றுமை ஆகிய விஷயங்களை பேரணியில் தெரியாதது போலவே காட்டிக்கொண்டார்கள். இப்படி தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக பிறரை வெட்டி ஒட்டி எடுத்து பயன்படும் மோசமான புத்தி ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எப்போதும் உண்டு. இப்போது அந்த அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக, அதே பாணியைக் கையில் எடுத்துள்ளது.
முதலில் பாஜக அரசின் தலைவர் செங்கோட்டையில் காந்தியைப் பற்றிப் பேசியதும் பலருக்கும் குழப்பமாகிவிட்டது. அங்குதான் ஸ்வட்ச் பாரத் அபியான் என குப்பை அள்ளும் திட்டத்திற்கு முகவராக காந்தியை கூறி பெருமைப்பட்டார் பிரதமர் மோடி. இது பலருக்கும் எதிர்பார்க்காத செய்தி. நிகழ்ச்சி. ஏனெனில் காந்தியை முஸ்லீம்களுக்கு ஆதரவானவர் என்று அவரைச் சுட்டுக் கொன்றதே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்தான். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் எனும் தீவிரவாத இயக்கம் சொல்லும் அனைத்திற்கும் எதிராக பேசி செயல்பட்ட காந்தியை எதற்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள்? அதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அந்த தீவிரவாத அமைப்பு மற்றும் அரசியல் பிரிவினரிடம் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் சிந்தனையாளர்களோ, விடுதலை வீரர்களோ கிடையாது. சொல்ல முடியாத இன்னொரு காரணம், காந்தி மீதுள்ள ஒவ்வாமையும் வெறுப்பும் தான். விளக்கமாக பார்ப்போம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்தியாவை உருவாக்கிய நவீனச்சிற்பிகளில் ஒருவராக உள்ள காந்தியை தனது அரசியல் திட்டங்களுக்கு பயன்படுத்தி அவரின் புகழைக் குறைத்துக்காட்ட முயல்கிறது. இதற்கான திட்டங்களை பல்லாண்டுகளாக செய்து வருகிறது., காந்தியை படுகொலை செய்த காலத்திலிருந்தே இதற்கான பணியைத் தொடங்கிவிட்டது. இப்போது ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பிற்கு கெட்டப்பெயரை நீக்க மூன்று தலைவர்கள் உள்ளனர். தேசியத் தலைவர்களான காந்தி, அம்பேத்கர், பகத் சிங் ஆகியோர்தான் அவர்கள். இந்த மூவருமே அவர்களது துறையில் சாதனைகளை செய்தவர்கள். காந்திக்கு அரசியல் என்றால் அம்பேத்கருக்கு சட்டம், பகத் சிங்கிற்கு தைரியம், துணிச்சல் எனவே, ராணுவம்.
மக்கள் அனைவரும் வந்தே மாதரம் என்று சொல்லவேண்டும். கையில் தேசியக்கொடியைப் பிடித்தால்தான் இந்தியர் என மத்திய அரசு நிறைய பலவந்த தேசப்பற்று விவகாரங்களைச் செய்கிறது. இதைக் காந்தி பார்த்திருந்தால், இப்படி செய்து எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்றுதான் சொல்லியிருப்பார். இந்தியாவைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அது இந்துக்களுக்கான நிலப்பரப்பு. அங்கு இரண்டாம், மூன்றாம் வகுப்பு மக்களாக வாழவேண்டியவர்கள் முஸ்லீம், கிறிஸ்தவ, பௌத்த மக்கள் என்பதே அவர்களது சித்தாந்தம்.
குப்பை அள்ளும் திட்டத்திற்கு காந்தியை முகவர் போல காட்டி விளம்பரப்படுத்தியபோது, பலரும் குப்பை என்ற விஷயத்திற்காக காந்தியை கீழிறக்கவேண்டுமா என்று கேட்டார்கள். ஏறத்தாழ அது உண்மைதான். திட்டத்தில் காந்தியின் கண்ணாடியைப் பார்க்கலாம். புகழ்வது போல இகழ்தல் என்று சொல்லுவார்களே அதுதான். பாஜக அதை பல்வேறு வழிகளில் சாதிக்க முயன்று வருகிறது. இப்போது காந்தியின் இடத்திற்கு வர சாவர்க்கர் என்ற கோழை ஆர்எஸ்எஸ் மனிதரை பாஜக தேர்ந்தெடுத்து விட்டது. அடுத்தடுத்து சிறுபான்மை மக்களை வெறுத்த, அவர்களை படுகொலை செய்த பிற தலைவர்களும் வருவார்கள். இதற்கு எதிராக நாம் காந்தியை அவரது அரசியல் சார்ந்த செயல்பாடுகளுடன் முன்னிறுத்த வேண்டும். தற்போது இருக்கும் பாடத்திட்ட அளவில் காந்தியைக் கூறினால் அடுத்து வரும் தலைமுறையினருக்கு அவர் பற்றி முழுமையாக தெரியாது. காந்தியின் எழுத்துக்களைப் படிக்காத, அவரின் முழுப்பரிமாணம் தெரியாதவர்கள் எளிதாக அவருக்கு எதிர்ப்புறம் செல்ல வாய்ப்புள்ளது. பிறகு, மிஸ்டுகால் கொடுத்து தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவில் சேர்ந்து வன்முறையாளர்களாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதைத்தடுக்க காந்தியின் அரசியல் செயல்பாடுகளை பிரசாரம் செய்வது அவசியம்.
அபூர்வானந்த்
இந்தியா டுடே
image pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக