பின்தங்கும் ஆங்கில நூல்கள் வாசிப்பு!

 








திறமைக்கான வாய்ப்பு!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? மருத்துவர் முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம். அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும். அதில் சாதித்து வெல்ல முடியும். நான் வேலை செய்யும் இதழின் பொறுப்பாசிரியர் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர். இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம். எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது. ஆனால், நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது. இதுவரையிலும் பிறரிடம் நான் செய்த வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது.

இப்போது முழங்கால் வலி மட்டுப்பட்டுள்ளது. இதனால் நடக்க முடிகிறது. உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன். இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன். அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம் எனத் தோன்றுகிறது.

அன்பரசு

13.8.2021

மயிலாப்பூர்

------------------------------------------------------------------------------





















டிஜிட்டல் வடிவில் மாறும் வாசிப்பு!

அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? வேலைப்பளு காரணமாக நேரம் ஒதுக்கி பேச முடியவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து வலைப்பூ எழுதுவதில்லை என முடிவு செய்துள்ளேன். எனவே அறைக்கு வந்துதான் செய்திகளை, கட்டுரைகளை தட்டச்சு செய்ய வேண்டியுள்ளது. இதை சரியாக நேரமேலாண்மை செய்யமுடியாமல் தடுமாறி வருகிறேன்.

பழைய புத்தக கடையில் புத்தகங்களை வாங்கிப் படிக்க முடிவு செய்துள்ளேன். காசும் குறைவு. மயிலாப்பூரில் ஆங்கில நூல்களை குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம். எந்த நூலை வாங்கினாலும் படிக்க நேரம் ஒதுக்கவேண்டும். படிப்பதில் நேரம் என்பதே மாறாத விதி.

உங்கள் ஊரில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு இந்த நடவடிக்கைகள் குழப்பமாகத்தான் இருக்கும். ஷோபாடே எழுதிய கட்டுரை நூலை வடபழனி கிராஸ்வேர்ட் கடையில் வாங்கினேன். அதில் குறிப்பிட்டிருந்த விலைதான். நயாபைசா கூட தள்ளுபடியெல்லாம் கிடையாது. முழுக்க இந்தியாவைப் பற்றிய பதிவுகள். நல்லதும் அல்லதும் என இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் படிக்கத் தொடங்கவில்லை.

இந்த ஆண்டு அதிகளவில் ஆங்கில நூல்களை படிக்க வேண்டும். பீடிஎப்பில் படிப்பது கண்களுக்கு கடும் சிரமத்தைக் கொடுக்கிறது. எனவே தான் இந்த முடிவு. உங்கள் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளுங்கள். வீட்டில் அம்மாவைக் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி!

அன்பரசு

22.8.2021

மயிலாப்பூர்



கருத்துகள்