இடுகைகள்

முத்தாரம் - வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாபம் விடும் எழுத்தாளர்கள்!

படம்
புத்தகத்தை காணோம் ! இன்று புத்தகத்தை களவாடிச் செல்பவர்கள் குறைவு . அந்த இடத்தை ஸ்மார்ட்போன்களும் , பவர்பேங்குகளும் பிடித்துவிட்டன . ஆனால் மத்திய காலங்களில் ஐரோப்பாவில் நூலகங்களில் , கடைகளில் நூல்களை திருடுவது என்பது விலையுயர்ந்த காரை திருடுவது போல . எழுத்தாளர்கள் புத்தகத்தை திருடுபவர்களுக்கு என்னென்ன சாபம் கொடுத்தார்கள் தெரியுமா ? பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள 1172 ஆண்டுகால அர்னெஸ்டைன் பைபிள் உள்ளது ." இந்த நூலை திருடுபவர்கள் நிச்சயம் மரணம் உண்டு . காய்ச்சல் , தொழுநோயால் பாதிக்கப்படுபவர்கள் வாணலியில் அவர்கள் வறுக்கப்பட்டு இறப்பார்கள் . அல்லது தூக்கிலடப்படுவார்கள் " என்று மிரட்டலாக ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டுள்ளது . வாட்டிகன் நூலகத்திலுள்ள ட்ரோகின் என்பவரின் பதிமூன்றாம் நூற்றாண்டு நூலில் புத்தகங்களை திருடுபவர்களுக்கு கண் , உயிர் போகும் . கிறிஸ்துவின் கருணை கிடைக்காது என சாபமிடப்பட்டுள்ளது . பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த The Medieval Book  என்ற நூலை எழுதிய பார்பரா சைலர் ,  நூலை யாரேனும் திருடினால் அவர்களுக்கு கிறிஸ்துவே இறுதி தீர்ப்பு நாளில் தண்டனை தருவ

வெள்ளையர்களுக்கு உதவிய அடிமையின் கதை!

படம்
அடிமையின் வாழ்க்கை ! அமெரிக்காவின் வர்ஜீனியாவிலுள்ள லீஸ்பர்க்கைச் சேர்ந்த ஜான் டபிள்யூ ஜோன்ஸ் , 1844 ஆம் ஆண்டு தன் அம்மாவிடம் பார்ட்டிக்கு போவதாக சொல்லி வீட்டைவிட்டு பிஸ்டலுடன் வெளியேறினார் . பிளான் - அடிமை முறையில்லாத வடக்கிலுள்ள பென்சில்வேனியா செல்வது . துணைக்கு நான்கு நண்பர்கள் . தினசரி 20 மைல்கள் பயணம் செய்த ஜோன்ஸ் , ஹாரிஸ்பர்க் , வில்லியம்ஸ்போர்ட் ஆகிய இடங்களை மிகவும் விழிப்பாக உறங்கி கடந்தார் . நடந்து களைத்துப்போனவர்களுக்கு நாதெனியல் ஸ்மித் என்ற வெள்ளையர் உணவு கொடுத்து உபசரித்தார் . பின் நியூயார்க்கின் எல்மிராவில் தங்கியவர் , கல்லறைகளை பராமரிக்கும் வேலையைச் செய்து பணம் சேர்த்தார் . உள்ளூர் நீதிபதியின் அனுசரணையைப் பெற்று கல்வி கற்ற ஜோன்ஸ் சிறிய வீடு வாங்குமளவு பணம் சேர்த்தார் . 1850 ஆம் ஆண்டு தப்பி ஓடும் அடிமைகளை பிடித்து அவர்களுக்கு உதவுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமுலானது . அதனை தீவிரமாக எதிர்த்த ஜோன்ஸின் பேட்டிகளும் பத்திரிகைகளில் வெளியானது . அதோடு தன் வீட்டில் 800 க்கும் மேற்பட்ட அடிமைகளை தங்கவைத்து தப்பிக்க வைத்தார் . உள்நாட்டுப்போரின் கடைசி