இடுகைகள்

திரில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுவாரசியமாக கத்துக்கலாம் வாங்க! - யூடியூப் இருக்க கவலை என்ன?

படம்
  RealLifeLore நம் வாழ்க்கையில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கமுடியுமா என்ற அளவில் ஏராளமான கேள்விகளைக் கேட்டு பதில் சொல்கிறது இந்த சேனல். 29 லட்சம் பேர் பின்தொடரும் இந்த சேனலில், இருவாரங்களுக்கு ஒருமுறை வீடியோக்களைப் பதிவிடுகின்றனர். மூன்றாம் உலகப்போரில் பாதுகாப்பான இடம் எது, பூமியை எவ்வளவு ஆழம் தோண்டலாம், நம்மால் கேட்க முடிந்த அதிகபட்ச ஒலி அளவு என கேள்விகளைக் கேட்டு வியக்க வைக்கின்றனர்.  https://www.youtube.com/channel/UCP5tjEmvPItGyLhmjdwP7Ww/featured CrashCourse தமிழ், ஆங்கிலம் என படித்தாலும் இதைத் தாண்டிய பல விஷயங்களைப் படிக்கும் ஆர்வம் மாணவர்கள் பலருக்கும் உண்டு. உதாரணமாக, நாடகம், புராணம், ஊடகம், அறிவியல் வரலாறு என பல்வேறு படிப்புகள் என கற்றுத் தருவது இந்த யூடியூப் சேனலின் சிறப்பு. அமெரிக்கர்களான நிக்கோல் ஸ்வீனி, கேரி அன்னே பில்பின், மைக் ருக்னெட்டா ஆகியோர் பாடங்களை சுவாரசியமாக கற்றுத் தருகின்றனர். 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேனலைப் பின்தொடர்கின்றனர் . https://www.youtube.com/user/crashcourse/featured Mike Boyd  மாதம் அல்லது வாரம் தோறும் புதிய சவாலை ஏற்று சாதிப்பது மைக்கின் சி

சுயநலம், காசு இவற்றை மட்டுமே பார்க்கும் ஒருவனின் இரவு வாழ்க்கை! - இடம் ஜகத்

படம்
இடம் ஜகத் - தெலுங்கு இயக்கம் அனில் ஸ்ரீகாந்தம் ஒளிப்பதிவு இசை ஸ்ரீசரண் பகலா கதை முழுக்க நெகட்டிவ்வான கதை. ஆனால் யதார்த்தமாக இருக்கிறது. டிலேய்டு ஸ்லீப் டிஸ் ஆர்டர் எனும் தூக்க குறைபாடு பிரச்னை நிஷித்திற்கு இருக்கிறது. இக்குறைபாட்டால் இரவு முழுக்க விழித்திருப்பவர், பகல் முழுக்க தூங்குகிறார். இதனால் அவருக்கு வேலை பறிபோகிறது. என்ன வேலை செய்யலாம் என்று தேடுபவருக்கு ப்ரீலான்சாக செய்திகளை டிவி சேனலுக்கு தரும் வீடியோகிராபர் வேலையை அமைத்துக்கொள்கிறார். இதில் இரக்கமே அவருக்கு கிடையாது. சேனலுக்கு அவர் தரும் செய்திகளுக்கு முடிந்தளவு அதிக காசு வாங்குகிறார். இதில் அவருக்கு சீனியரான ஒருவருடன் முட்டல் ஆகிறது. அப்போது, போதைப்பொருள் கும்பல் ஒன்றின் போலி விபத்து வீடியோவை பதிவு செய்கிறார். இதனால் அவரின் காதல், நட்பு அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனை எப்படி அவர் சமாளித்தார் என்பதுதான் கதை. ஆஹா இயக்குநரின் கதை. இறுதிவரை மாறாமல் பயணிக்கும் திரைக்கதைதான். கதைக்கு சரியான நடிகர்களை அவர் தேர்வு செய்யவில்லை. சுமந்தின் நண்பராக வரும் சத்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். சுயநலம

சிறைக்கைதியை மீட்க அபாய போராட்டம் - வேய்ன் ஷெல்டன் அதிரடி!

படம்
ஒரு போராளி ஒரு ஜென்டில்மேன் வேய்ன் ஷெல்டன் தோன்றும் ஒரு பயணத்தின் கதை! துரோகத்தின் கதை ! லயன் காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் கலாக்ஜிஸ்தானில் நடைபெறும் விபத்து எப்படி முக்கியமான தொழிலதிபரின்(க்வெய்ல்) வணிக ஒப்பந்தத்திற்கு தடையாகிறது. இதற்கு காரணமான ஓட்டுநரை சிறையிலிருந்து மீட்க தொழிலதிபர் நினைக்கிறார். அதற்கு புகழ்பெற்ற ஷெல்டனை அழைக்கிறார்கள். ஷெல்டன் தன் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் செய்யநினைக்கிறார். ஆனால் தொழிலதிபரின் பி.ஏ. (கரினி) ஷெல்டனை ஏமாற்றி டபுள் கிராஸ் ஏஜெண்டாக மாறுகிறார். இதனால் நடக்கும் பிரச்னைகள், வன்முறைகள், துரோகங்களை ஷெல்டன் எப்படி சமாளித்து சிறையிலிருந்து ஓட்டுநரை மீட்கிறார் என்பதுதான் கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை தனி புத்தகமாக போட்டு எழுதலாம். திருடர்களுக்கும் ஷெல்டனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஷெல்டன் குழுவைத் தீர்த்துக்கட்ட நடக்கும் குறுக்கும் மறுக்குமான துரோக சம்பவங்களை கதையை சுவாரசியப்படுத்துகின்றன. கதையில் ஷெல்டன் தன் வயதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டுதான் சண்டையிடுகிறார். இதனால் நேரட