இடுகைகள்

சூரிய ஒளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரிய வெளிச்சத்தை தடுக்க தடுப்பரணாக அமையும் கண்ணாடி தாள்!

  பூமியைக் காக்க விண்வெளியில் தடுப்பு அரண் உலகை காக்க நிலப்பரப்பில், நீர்ப்பரப்பில் செய்யும் பல்வேறு திட்டங்களுக்கு ஜியோ எஞ்சினியரிங் என்று பெயர். ஆனால் இந்த திட்டங்கள் அங்கேயே நின்றுவிடக் கூடியவை அல்ல. விண்வெளியிலும் இந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என சில அறிவியலாளர்கள் முயன்றுள்ளனர். இவை கோட்பாடு அளவில் வியப்பு ஏற்படுத்துவனதான். ஆனால் சாத்தியமா என்பதுதான் யோசிக்க வேண்டியதாக உள்ளது. இன்று பூமியைக் காக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அதில் முக்கியமானது, சூரியனின் வெப்பத்தை எப்படியாவது பிரதிபலித்து வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுப்பது. இந்த வகையில் ஒரு முயற்சியை ஜேம்ஸ்   என்பவர் 1989ஆம் ஆண்டு செய்தார். அதாவது பூமியின் புவி வட்டப்பாதையில் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உருவாக்கி பொருத்திவிடுவது…. இதன் மூலம் அந்த சூரிய வெளிச்சம் அப்படியே விண்வெளிக்கு சென்றுவிடும். கதிர்வீச்சும்தான். இதனால் பூமி எளிதாக வெப்பமயமாதல் பாதிப்புக்கு உட்படாது. மக்களும் பாதிப்படைய மாட்டார்கள். கதையின் மையம் என தந்தி அளவுக்கு சுருக்கமாக சொல்லும் விவகாரம்தான். ஆனால் செய

முகத்தில் தோன்றும் ஃபிரெக்கில்ஸ்!

படம்
  ஃபிரெக்கில்ஸ்  சில பெண்களுக்கு அல்லது ஆண்களுக்கு முகத்தில் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும். பெரும்பாலும் வளரும்போது உருவாகும் ஒன்றுதான். குழந்தைகள் பிறக்கும்போது இதுபோன்ற புள்ளிகளோடு இருப்பதில்லை.   இதை ஆங்கிலத்தில் எப்ஹெலிடெஸ் என்று சொல்லுவார்கள். இப்படி புள்ளிகள் தோலில் கடினமான தன்மையில் இருக்காது. ஆனால் சொல்லும்போது, அப்படித்தான் நினைக்கத் தோன்றும். ஃபிரக்கில்ஸ் முகம், கழுத்து, தோள், மார்பு ஆகிய இடங்களில் உருவாகிறது.  சூரிய வெளிச்சம் படுபவர்களுக்குத்தான் ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது. இதில் புற ஊதா கதிர்களுக்கும் பங்கிருக்கிறது. மரபணு என்பது ஒருவரின் உடல்நிறம், முடியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அப்படியெனில் ஃபிரெக்கில்ஸ் என்பதும் இந்த வகையில் உருவாகுமா என்றால் உருவாக வாய்ப்புள்ளது என்றே கூறலாம். மற்றபடி இதை உறுதியாக கூறுவது கடினம்.  ஆசியா மற்றும் காகசிய நாடுகளில் எம்சி1ஆர் என்ற மரபணுவின் வேற்று உருவங்கள் காணப்படுகிறது. சூரியவெளிச்சம் பட்டு ஐந்து நாட்கள் கழித்து ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது. வெப்பத்தாக்குதல் காரணமாகவும் மெலனின் நிறமி சார்ந்தும் ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது.  ht

க்ரௌன் ஷைனெஸ் -மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி

படம்
  மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி! பெருந்தொற்று தொற்றாமலிருக்க ஆறு அடி இடைவெளி அவசியம். இதுபோலவே, இயற்கைச்சூழலிலுள்ள மரங்கள்  இடைவெளி விட்டு வளருவதை கடைபிடித்து வருகின்றன. காட்டில் மரங்கள்  நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு மரத்தின் உயர்ந்த கிளைகள்  அருகிலுள்ள மரங்களை தொடுமளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அவற்றைத் தொட்டிருக்காது. சிறிய இடைவெளி இருக்கும். இதற்கு க்ரௌன் ஷைனெஸ் (Crown Shyness)என்று பெயர். அடர்ந்த காடுகளின் மேற்புறத்தைப் பார்த்தால் இதனை எளிதாக  புரிந்துகொள்ளலாம். மரத்தின் கிளைகளுக்கு இடையிலான இடைவெளி, ஜிக்ஸா புதிர்போலவே இருக்கும்.  1920ஆம் ஆண்டிலேயே அறிவியல் ஆய்வு அறிக்கைகளில் க்ரௌன் ஷைனெஸ் பற்றி எழுதப்பட்டுள்ளது. மரங்களின் இந்த இயல்பை அறிவியல் முறையில் தீர்மானித்து கூறியவர், தாவரவியலாளர் ஃபிரான்சிஸ் ஜேக் புட்ஸ் (Francis jack putz). 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஃபிரான்சிஸ் தனது குழுவினருடன் கள ஆய்வுக்காக சென்றார். அங்குதான் கருப்பு மாங்குரோவ் மரத்தைக் கவனித்தார். மேற்புறத்தில் கிளைகள் படர்ந்திருந்தாலும் அவை பிற மரத்தின் கிளைகளுடன் இணையவில்லை. இதனால், மரங்கள் தங்களின் தனி

சூரிய ஒளி ஹார்மோன்களை பெருக்குமா? நிஜமா? நிழலா?

படம்
  ஒலிம்பிக்கில் ஒவியம் மற்றும் இசைப் பிரிவில் பரிசை வெல்ல முடியும்! உண்மையல்ல.  இன்றைக்கு ஒலிம்பிக்கில் கலைப்பிரிவுகள் கிடையாது. 1912 முதல் 1948ஆம் வரையிலான காலகட்டத்தில் ஒலிம்பிக் கமிட்டி, கலைப்பிரிவுகளில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தது. ஓவியம், இசை  என்பது அதனை உருவாக்குபவரின் எண்ணம், செயல் பொருத்து மாறுபடும். இதனை போட்டி வைத்து தீர்மானிப்பது மிக கடினம். எனவே, ஒலிம்பிக்கில் தொடக்கத்தில் இடம்பெற்ற ஓவியம் மற்றும் இசைப்பிரிவுகளை நிர்வாகத்தினர் விலக்கிவிட்டனர். மத்திய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் இரண்டு அடி நீளம் கொண்டிருந்தன!  உண்மை. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டில் காலணிகள் இரண்டு அடி நீளத்தில் உருவாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்த நாகரிகப்படி காலணிகள் அப்படி வடிவமைக்கப்பட்டன. நீட்டப்பட்ட முனையில் பாசி, புற்கள், முடி, கம்பளி ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. இவற்றை இன்றும் இங்கிலாந்தின் லண்டனினுள்ள விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.  டான்சில்ஸ் கட்டி மீண்டும் வளரும்!  சிலசமயங்களில் என்று கூறலாம். தொண்டையில் உள்ள அதிகப்படியான சதை வளர்ச்சியை, அறுவைசிகிச்

சூரிய ஒளி, ஆக்சிஜன் பட்டால் மட்கிப்போகும் பிளாஸ்டிக்!

படம்
  செய்திஜாம் ஆஹா! மறுசுழற்சி! சூரிய ஒளி பட்டாலே மட்கும் வகையில் புதிய பிளாஸ்டிக் வகையை சீனாவின்  ஹூவாஸாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள தனித்துவமான மூலக்கூறுகள் ஒளி, தண்ணீர் பட்டால்  உடனே ஒரே வாரத்தில் மட்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படி மட்கும்போது சக்சினிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதனை மருந்து தயாரிப்பில் அல்லது உணவு உற்பத்தியில் பயன்படுத்தமுடியும். இந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  https://www.indiatimes.com/technology/science-and-future/plastic-sunlight-disintegration-one-week-544896.html வெள்ளத்தில் நகரம்! மழை வெள்ளத்தில் சாலைகள் மிதக்கும் காட்சி! இடம், ஜெர்மனி, பிளெஸ்ஸம் அப்படியா! பற்றாக்குறை! குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்ச்சியானார்கள். இதனால் அங்குள்ள 20 மாவட்டங்களில் 3000 கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர், கூடுதல் மாணவர்களை படிக்க வைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை, ஷிப்ட் முறை ஆகியவற்றை பின்பற்றலாம் என

வெயிலில் நின்றால் கொழுப்பு குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சூரிய ஒளியில் நின்றால் கொழுப்பு குறையுமா? சூரிய ஒளி தோலில்பட்டால் உடல் விட்டமின் டி சத்தை தயாரித்துக்கொள்கிறது. இது கொழுப்பு குறைய உதவுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். கோடையில் நீங்கள் தோட்டவேலை செய்தால் வியர்வை வரும். எடை குறையும். பனிக்காலத்தில் இதைச் செய்யமுடியாது. எனவே டயட்டில் இருந்து எடை குறைப்பதே சிறப்பு. கொழுப்பு குறைய வெயிலில் நின்று நீர்ச்சுருக்கம் ஏற்பட்டுவிடப்போகிறது. ஜாக்கிரதை நன்றி: பிபிசி