இடுகைகள்

ட்யுராங்கோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் உறுதி வேண்டும்! - ட்யுராங்கோ அதிரடிக்கிறார்!

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ அதிரடிக்கும் மனதில் உறுதி வேண்டும் - அத்தியாயம் 2 வ்யோமிங் பகுதியில் கொள்ளை கும்பலைப் புரட்டி எடுக்கும் நொண்டி நாயகன் ட்யுராங்கோவின் கதைதான் இது. முதல் அத்தியாயத்தில் துப்பாக்கித் தோட்டாக்களால் காயமுற்றவர், தானாக குதிரையில் ஏறி பயணிக்கிறார். அவரை கிழவர் ஒருவர் மனிதாபிமான முறையில் சிகிச்சை அளித்து உதவுகிறார். ஆனால் அதையும் அருகிலுள்ள ஃபீஸ்புல் சர்ச் ஊரிலுள்ள மக்கள் தவறு என்று கூறி தடுக்கின்றனர். அப்போது அங்கு கல்லஹன் எனும் குழு, வ்யோமிங் வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்து அடைக்கலமாகிறது. அந்தக்குழுவினரிலுள்ள ஸ்காட் என்பவன் பெண்ணிடம் தவறாக நடக்க கொலை செய்யப்படுகிறான். இந்த கொலை காரணமாக கொலைவெறி ஆகும் கல்லஹன் அந்த ஊர்க்காரர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பாதிரியாரை தூக்கிலிட்டு சுட்டுக்கொல்கிறார். அவரின் மற்றொரு கூட்டத்தை ட்யுராங்கோ கொன்று விட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சையளித்த கிழவரைக் கொன்றதுதான் காரணம். இதற்குப்பிறகு அவர் ஃபீஸ்புல் சர்ச் ஊருக்குச் செல்கிறார்.  அந்த ஊர் மக்கள் அவருக்கு உதவினார்களா இல்லையா என்பதுதான

மௌனப் புயல் ட்யுராங்கோ - ரௌத்திரம் பழகு அத்தியாயம் 1

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ கலக்கும் ரௌத்திரம் பழகு! கதையில் நீதி, நேர்மை இத்யாதிகளுக்கு இடமில்லை. ட்யுராங்கோ காசுக்கு கொலைகளை செய்யும் மௌன எமன். பேசுவது குறைவு. ரத்தப்பொத்தல் விழுந்த கையுடன் பத்து பேர்களை போட்டுத்தள்ளும் மனதிடம், உடல்பலம் கொண்டவன். தன் குடும்பத்திடமிருந்து விலகிப்போய் துப்பாக்கியும் தோட்டாக்களுமாக் வாழ்பவனை கடிதம் ஒன்று அமெரிக்காவின் பண்ணைக்கு வரவைக்கிறது. அங்கு வசிக்கும் ஹாரி லாங் என்ற அவரின் சகோதரர், அவனுக்கு பணம் தருவதாக கூறி அங்கு வரச்சொல்லி கடிதம் எழுதி அனுப்புகிறார். ஆனால் ட்யுராங்கோ அங்கு வரும்போது காரியம் மிஞ்சியிருக்கிறது. செனட்டர் ஹ்யூலெட் தன் பண்ணையை விரிவாக்க அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். தனக்கு போட்டியாக கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளுகிறார். லாரியும் அப்படி கூலிப்படையால் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் தோள், வயிறு, கை என பல்வேறு தோட்டாக்கள் துளைக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்கும்போதுதான் ட்யுராங்கோவுக்கு தெரிகிறது. பின் எப்படி எதிரிகளை வீழ்த்தி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை.