இடுகைகள்

ரெஜினா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதரவற்ற பெண்களை கருமுட்டைக்காக கடத்தும் மாபியாவை வேட்டையாடும் இரு பெண்கள்! - சாகினி தாகினி - சுதீர் வர்மா

படம்
 சாகினி தாகினி  ரீமேக் - மிட்நைட் ரன்னர்ஸ்  சுதீர் வர்மா ரெஜினா, நிவேதா தாமஸ்  கொரிய படமான மிட்நைட் ரன்னர்ஸ் படத்தை ரீமேக் செய்து மாற்றி எடுத்து இருக்கிறார்கள். படத்தை தமிழில் பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. டப் படம் என்றால் படம் உள்ள பகுதி சார்ந்தே பெயரை சொல்லி படத்தை தமிழ் செய்தால் என்ன கெட்டுவிடப்போகிறது.... தெலுங்கானவை எப்படி மதுரை ஆக்க முடியும்..  போலீஸ் அகாடமிக்கு இருவர் தேர்வாகி வருகிறார்கள். ஷாலினி, தாமினி. இவர்கள்தான் சாகினி, தாகினி என்ற இரு பாத்திரங்கள். இருவரும்  தொடக்கத்திலேயே முட்டி மோதி பிறகு நடைபெறும் சம்பவத்தால் நண்பர்களாகிறார்கள். நட்பு என்றால்,  ஒருவர் கண் அசைத்தால் இன்னொருவர் அப்படியே செய்து முடிக்கும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள். ஒருமுறை பப்பில் மது அருந்திவிட்டு சாலையில் வரும்போது திடீரென பைக்கில் வேகமாக இளைஞர்கள் வர அவர்களை இளம்பெண் ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவளை திடீரென வேன் ஒன்றில் பிடித்து செல்கிறார்கள். அதைப் பார்த்து ஷாலினி, தாமினி என இருவரும் அவளை பின் தொடர்கிறார்கள். அதில், அவளை தூக்கிச்சென்றவர்கள் எப்படிப்பட்ட குற்றவாளிகள் என தெரிகிறது. இந்த நேரத்த

மனிதநேயத்தை மறைய வைக்கும் பேராசை! - எவரு - குற்றவாளி யார்?

படம்
எவரு - தெலுங்கு  இயக்கம் - வெங்கட் ராம்ஜி ஒளிப்பதிவு  - வம்சி பச்சிபுலுசு இசை - ஸ்ரீசரண் பகலா சமீரா என்ற தொழிலதிபரின் மனைவி, குன்னூர் ரிசார்ட் ஒன்றில் வல்லுறவு செய்யப்படுகிறார். வல்லுறவில் ஈடுபடுபவர் டிஎஸ்பியான அசோக் கிருஷ்ணா என்ற உயரதிகாரி. அவரை சமீரா, துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார். அதாவது தன்னைக் கற்பழித்தார், அதனைத் தடுக்கும் முயற்சியால் அவரைக் கொன்றேன் என்கிறார். ஊடகங்களில் தன்னை பாவமாக காட்டிக்கொள்கிறார். விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு உள்ளுக்குள் பதற்றம் அதிகரித்து வருகிறது. காரணம், வழக்கு நகரும் திகுதிகு வேகம்தான. இதற்கிடையே போலீஸ்துறை தங்கள் மீதான களங்கத்தைப்போக்க ரத்னாகர் எனும் தனியார் வக்கீலை  நியமிக்கின்றனர். இதனால் தான் பாதிக்கப்படுவோமோ என சமீரா பயப்படுகிறார். அப்போது அவரைக் காப்பாற்ற, வருகிறார் விக்ரம் வாசுதேவ்.ஆம் லஞ்ச லாவண்யம் வாங்கி குற்றவாளிகளுக்கு உதவுபவர் இவர். இருபது லட்சம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சமீராவுக்கு உதவுகிறார். அரசு வழக்குரைஞரிடம்  எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்போது வழக்கு தொடர்பான உண்மைய