இடுகைகள்

டால்ஸ்டாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் கண்டு புத்தி தெளிந்த சம்பவங்களின் தொகுப்பு - வனவாசம் - கண்ணதாசன்

படம்
  வனவாசம்  கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் மின்னூல் வனவாசம், மனவாசம் என இரு நூல்களை கண்ணதாசன் எழுதினார். இதில் வனவாசம் அவரின் அரசியல் அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் காலத்திலேயே எழுதிய நூல் என்பதால் வனவாசம் முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப்படித்தேன் என்று சொன்னபோது, நண்பர் ஒருவர், கண்ணதாசன் நம்ம ஊரு டால்ஸ்டாய் போல என்றார். டால்ஸ்டாயின் ஒழுக்க விதிகளைப்போலவே,  கண்ணதாசனும் பல்வேறு ஒழுக்க முறைகளை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறியிருக்கிறார். அதுவும் தன்னையே மோசமான எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு....  அவர் அதற்கு வெட்கமெல்லாம் படவில்லை.  வனவாசத்திலும் ஒழுக்கம் தவறுகிற,செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் விடுகிற மாது விஷயங்கள் நிறைய உண்டு. சினிமா நடிகை, விபச்சார பகுதியில் விலைமாது, பிறகு அவரே ஏற்கும் இரண்டாவது ஏற்பாடு.... என நீள்கிறது.  கண்ணனை வணங்கும் கண்ணதாசனுக்கு இப்படி சலனமுறுகிற குணம் இருந்தாலும் கவி பாடுவதில் எந்தக் குறையும் எக்காலத்திலும் வரவில்லை. மது, மாது, போதை, அரசியல் பழகினாலும் கூட அவருக்கு வருமானம் ஈட்டித்தர தமிழ் தயங்கவில்லை. அ

வெறுப்பின் வாசம் வீசும் ரத்தம் தோய்ந்த காற்று - இந்தியாவின் மதவாத வன்முறைக்கு எதிராக காந்தி

படம்
            காந்தி இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காலம் இருந்தது . ஆனால் அவர் மக்கள் மீது காட்டிய பாசங்கற்ற அக்கறையும் அன்பும் அவரது உயிரைப் பிரித்தது . அவரது உடலில் பாய்ந்த மூன்று தோட்டாக்கள் உடலை நம்மிடமிருந்து பிரித்திருக்கலாம் . பிறரைப் பற்றி அக்கறை கொள்ளும் காந்தியின் மதிப்புகளை அல்ல . இன்று காந்தி பிறந்த தேசத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு எதிர்காலத்தில் இருக்கும் என்று கூறமுடியாது . இந்து - முஸ்லீம் பிரச்னையில் காந்தியின் நிலைப்பாடு காரணமாக அவர் மீது விரோதம் பாராட்டி கருத்துகளைப் பேசும் பதிவிடும் குழுக்கள் அனைத்து இடங்களிலும் உருவாகி வளர்ந்து வருகிறார்கள் . காந்தி தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்தபோதுதான் வறுமையில் உள்ள விவசாயிகளின் நிலையைப் பார்த்து தனது உடையை அரையாடையாக மாற்றிக்கொண்டதாக கூறுவார்கள் . அவர் அந்த ஆடையை தனது செயல்பாடுகளுக்கு கருவியாக கொண்டார் . தனது போராட்டத்திற்கு தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்த காந்தி கற்றிருந்தார் . இதனால்தான் இங்கிலாந்தின் பக்கிங்காம் மாளிகைக்கு காந்தி அரையாடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . உண்மையில் அப்படி