இடுகைகள்

அகதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்! - மஜூ வர்க்கீஸ், ஜோபிடன் தேர்தல் பிரசார அதிகாரி

படம்
          மஜூ வர்கீஸ் ஜோ பைடன் அரசியல் கூட்டத்திற்கான செயல்பாட்டு அதிகாரி நீங்கள் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடன் தேர்தல் பிரசாரத்தில் முதல் நாள் தொடங்கி கூடவே இருக்கிறீர்கள்? பிப்ரவரி 2020 அன்று நாங்கள் ஐயோவா, நியூ ஹாம்ஸையர், அலபாமா ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். மிக கடினமான நாட்கள் அவை. மெல்ல நாங்கள் இதில் தேர்ந்து வருகிறோம். எங்களிடம் மிகச்சிறிய குழு உள்ளது. குறைவான வளங்கள்தான் உள்ளது. நாங்கள் பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளோம். ஜோவின் அனுபவங்கள், பிறருக்காக யோசித்து செயல்படும் தன்மை ஆகியவை முக்கியமாக என்னை ஈர்த்தவை. கோவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு நாம் இரங்குதலை செலுத்த வேண்டும். இந்திய அமெரிக்கராக செனட்டர் கமலா ஹாரிசை துணை அதிபராக நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். இந்த தேர்வு சரியா? அது முக்கியமானதுதான். எங்களுக்கு ஏராளமான இமெயில்கள், போன் அழைப்புகள் இதுதொடர்பாக வந்துள்ளன.  இந்தியர்கள் கமலா ஹாரிசுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதானது. அவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம், இந்தியர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது. அரசில் இந்தியர்கள் மருத்துவர்களாகவோ, பொறிய

ஆங்கிலம் பேசினால் இங்கிலாந்து செல்லலாம்!

படம்
அமைச்சர் ப்ரீத்தி படேல் இங்கிலாந்தில் குடியேற்றத்துறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விசா நடைமுறைகளை மாற்றவிருக்கிறது. இதன்விளைவாக, ஆங்கிலம் பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருக்கிறது. “சிறப்பாக ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் இதன் மூலம் பயன் பெறமுடியும். திறன் வாய்ந்த மனிதர்களை இம்முறையில் நாங்கள் அடையாளம் கண்டுகொண்டு இங்கிலாந்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார் குடியேற்றத்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல். அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து முற்றாக விலகி விடும். இதனால் அரசு தன் குடியேற்றம், பாதுகாப்பு, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் மாறுதல்களை ஏற்படுத்த முயன்றுவருகிறது. பிரெக்ஸிட் பற்றியே பேச்சுகளும், வாக்கெடுப்பும் நடந்தபோது தெரசாமே இந்தியாவுக்கு வருகை தந்தார். தொழில்சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது உறுதியாயின. அதே முறையில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை அங்கு கல்வி கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் இங்கிலாந்து அரசு வரவேற்று விசா காலத்தை கூட இரண்டு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது ஆங்கிலத்தை சரளமாகப் பேசி, இ

அகதிகளை மரியாதையாக நடத்த கற்பது அவசியம் - சேட்டன் பகத்

படம்
மியான்மரில் புத்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி இனப்படுகொலை முயற்சிகளை அரங்கேற்றினர். இதன் விளைவாக, வாழ வழியற்ற அம்மக்கள் வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மிளகு ஸ்ப்ரே அடித்து விரட்டினர். உண்மையில் இந்த விவகாரத்தில் இந்தியா இப்படி நடந்துகொள்ளும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. முக்கியமான விவகாரத்தில் இப்படி முதிர்ச்சியற்று நடந்துகொண்டது என்னை வேதனைப்படுத்தியது. உலகம் முழுக்க போர்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். சில நாடுகள் அகதி மக்களை ஏற்கின்றனர். உதாரணம்  -கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள். சிலர் தீவிரமாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர். உதாரணம் - ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள்.  அவரவருக்கு ஏற்பதா, இல்லையா என்பதில் கருத்துகள் உண்டு. இந்தியா ரோஹிங்கயா முஸ்லீம்களை தங்க வைப்பதில் பெரிய பிரச்னை வந்துவிடாது. ஏற்கனவே இங்கு 40 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது அரசுக்கு பிரச்னையாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்றாலும் அரசு, அம்மக