இடுகைகள்

கலைஞர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடக கலைஞர் அவ்வை சண்முகம் அவர்களின் நாடக வாழ்க்கை போராட்டங்கள்!

படம்
    அவ்வை சண்முகம் படைப்புகள் ப.830 மின்னூல் அதிக பக்கங்களைக் கொண்ட நூல், பொதுவாக மின்னூலை இவ்வளவு பெரியநூலாக வைத்து படிப்பது அயர்ச்சியை உருவாக்கும். அதையெல்லாம் தாண்டி அவ்வை சண்முகத்தின் கட்டுரைகள், நாடக அனுபவங்கள் நம்மை ஈர்க்கின்றன. இந்த நூல் நாடக கலைஞர் அவ்வை சண்முகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, நாடக வாழ்க்கை என இரண்டையும் பேசுகிறது கூடுதலாக, நாடக அனுபவங்கள் பற்றி பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரையும் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் அதையும் வாசித்து நாடகம் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம். அவ்வை சண்முகம், அவ்வையார் நாடகம் வழியாக புகழ்பெற்றவர். இடதுசாரிகள், திராவிடர் கழகம், திமுக, தமிழரசு கட்சி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். இவரை சங்கரதாஸ் சுவாமிகள் என்பவர் நான்கு ஆண்டுகள் பயிற்சி கொடுத்து உருவாக்கினார். நூலின் இறுதிப்பகுதியில் சங்கரதாஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அவ்வை சண்முகம் தனது குருவுக்கான காணிக்கை போல அப்பகுதியை உருவாக்கியுள்ளார் போல. அவ்வை சண்முகம் படைப்புகள் நூலில் தொடக்கத்தில் அவர் ஆற்றிய உரைகள் இடம்பிடித்துள்ளன. இந்த உரைகள், அனைத்தும் மாணவர்கள...

சிறந்த திரைப்படங்கள் -2021

  சிறந்த திரைப்படங்கள் என்பவை எல்லாம் டிசம்பர் மாதத்தில்தான் வருமா என்று தெரியவில்லை. இப்போது அப்படித்தான் படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த லிஸ்டில் உள்ள படங்கள் அனைத்தும் மேற்குலகு படங்கள். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தை தரவிறக்கி பாருங்கள். படம் தரும் அனுபவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.  தி பவர் ஆப் தி டாக் ஜேன் காம்பியன் எடுத்த படம். காட்டில் ரேஞ்சராக உள்ள அண்ணனுக்கும் அவரது தம்பிக்கும் உள்ள உறவு, அவர் கல்யாணம் செய்து கூட்டிவரும மனைவி, மகன் ஆகியோருக்குமான உறவு சிக்கல்கள்தான் கதை. பெனடிக்கின் வெறுப்பு உமிழும் நடிப்பு ஏற்கெனவே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதை விட முக்கியமானது. விமர்சனங்களை ஓரம்கட்டிவிட்டு படத்தைப் பார்ப்பதுதான்.  பேரல்லல் மதர்ஸ் பெட்ரோ அல்மோடோவர் எடுத்துள்ள மெலோடிராமா. பெனலோப் க்ரூஸ் மத்திய கால வயது பெண்ணாக நடித்துள்ளார். ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அவரது கொள்ளுத்தாத்த கொல்லப்பட்டு உடல் தூக்கியெறியப்படுகிறது. அதற்கான நீதியை எப்படி பெறுகிறார் என்பதுதான் கதை. வலி நிறைந்த நாட்டின் வரலாற்றை இயக்குநர் உணர்ச்சிகரமாக சிறப்பாக எடுத்திருக்கிறார்.  தி வ...

அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களுக்கும், சமூகநலத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா?

படம்
            இலவசங்களும் மாநிலத்தின் பொருளாதாரமும் ! பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுப்பது தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையாக நடக்கிறது . யார் பதவிக்கு அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களே தலைவர்களாகிவிடுவார்கள் . இந்த வகையில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பகிரங்கமாக விற்கப்படுகிறது என்பதை நான் தனியாக சொல்லித் தெரியவேண்டியதில்லை . தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தவிப்பு சூரியக்கட்சிக்கும் , அதைவிட அதிகமாக இலைக்கட்சிக்கும் உள்ளது . இதன் விளைவாகவே தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது . இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நலத்திட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி அன்பளிப்புகளாகவே மாறிவிட்டன . பெண்களையும் மாணவிகளையும் குறிவைத்து வழங்கும் பல்வேறு இலவச பொருட்களை இப்படி கூறலாம் . நடப்பு ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி தமிழ்நாட்டின் கடன்தொகை 4.85 லட்சம் கோடியாக உள்ளது . அடிப்படைத் திட்டங்களுக்கும் , சுகாதாரங்களுக்கும் நிதியுதவி ஒதுக்ககி செலவிடவேண்டிய நேரத்தில் வீட்டு பயன்பாட்டு பொருட்களை தருகிறோம் . கேஸ் சிலி...