இடுகைகள்

மெட்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடை செய்யப்பட்ட நூல்களை படிக்க உதவிய நூலகர்! - டைம் 100 போராளிகள்

படம்
  நிக் ஹிக்கின்ஸ் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் நிக் ஹிக்கின்ஸ்   45 புத்தக விற்பனையாளர் சங்கமே மாஃபியா குழு போல நடந்துகொண்டு சில நூல்களை விற்க கூடாது என மிரட்டும் சூழல் இருக்கிறது. சில இடங்களில் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கொண்ட நூல்களை விற்க கூடாது என காவல்துறை அதிகாரமீறல்களை செய்வது உண்டு. இந்த சூழலில் நூல்களை காப்பாற்றி வைத்து அதை வாசகர்களுக்கு கொண்டு செல்வது வேறு யார்? நூலகர்கள்தான். ப்ரூக்ளின் பொது நூலக தலைவரான நிக் ஹிக்கின்ஸ், பல்வேறு மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட நூல்களை சேகரித்து அதை டிஜிட்டலாக சேமித்து வாசகர்கள் படிப்பதற்கு உதவுகிறார். பொதுவாகவே உலகின் பல்வேறு நாடுகளில் பழமைவாதிகள், பழமைவாத அரசுகள் அமைந்து வருகின்றன. எனவே, ஏராளமான நூல்களை தடை செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக நிக் ஹிக்கின்ஸ் நிற்கிறார். நிக்கும் அவரது குழுவினரும் தடை செய்யப்பட்ட நூல்களை வாசகர்கள் படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தணிக்கை செய்வது, தடை செய்வது என்பது குழந்தைகள், வயது வந்தோர் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே ஆகும். இப்படிப்பட்ட நெ

மெய்நிகர்உலகத்திற்கு வரவேற்பு கொடுக்கும் மெட்டா! - பேஸ்புக்கின் எதிர்கால ஐடியா

படம்
  மெட்டா மெட்டாவெர்ஸ் கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட். அதைப்போலவே பேஸ்புக்கின் கைவசம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்த நிறுவனத்திற்கு மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை இப்போது மார்க் ஸூக்கர்பெர்க் ரீபிராண்டிங் செய்து வருகிறார். எதிர்காலத்திற்கான புது விஷயங்களை நம்பிக்கையுடன் செய்கிறோம் என்று மார்க் கூறியிருக்கிறார்.  மெட்டாவெர்ஸ் என்பது புதுமையான விர்ச்சுவல் உலகம். முதலில் கணினி, பிறகு இணையம் அதிலிருந்து ஸ்மார்ட்போன் என சென்றுகொண்டிருக்கும் பயணம் இதோடு நிற்காது புதுமையாக செல்லும் என்பதை தனது டெமோ வீடியோ மூலம் கூறியிருக்கிறார். மார்க் அவரது நண்பர்களை விர்ச்சுவல் ஸ்பேஸ் ஒன்றுக்கு அழைத்து விளையாடும் காட்சியை இணையத்தில் பார்த்திருக்கலாம். இதில் எப்படி தோன்றலாம் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். மக்கள் ஒருவரையொருவர் எப்படி சந்திக்கிறார்கள், இணைகிறார்கள் என்பதுதான் மெட்டாவெர்ஸ் என மார்க் நினைக்கிறார்.  இதில் ஒருவரின் முகத்தைப் பார்ப்பது மட்டுமன்றி, அவருடனான உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்ள முடியும். இதனை மார்க் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என