மெய்நிகர்உலகத்திற்கு வரவேற்பு கொடுக்கும் மெட்டா! - பேஸ்புக்கின் எதிர்கால ஐடியா

 மெட்டாமெட்டாவெர்ஸ்


கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட். அதைப்போலவே பேஸ்புக்கின் கைவசம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்த நிறுவனத்திற்கு மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை இப்போது மார்க் ஸூக்கர்பெர்க் ரீபிராண்டிங் செய்து வருகிறார். எதிர்காலத்திற்கான புது விஷயங்களை நம்பிக்கையுடன் செய்கிறோம் என்று மார்க் கூறியிருக்கிறார். 

மெட்டாவெர்ஸ் என்பது புதுமையான விர்ச்சுவல் உலகம். முதலில் கணினி, பிறகு இணையம் அதிலிருந்து ஸ்மார்ட்போன் என சென்றுகொண்டிருக்கும் பயணம் இதோடு நிற்காது புதுமையாக செல்லும் என்பதை தனது டெமோ வீடியோ மூலம் கூறியிருக்கிறார். மார்க் அவரது நண்பர்களை விர்ச்சுவல் ஸ்பேஸ் ஒன்றுக்கு அழைத்து விளையாடும் காட்சியை இணையத்தில் பார்த்திருக்கலாம். இதில் எப்படி தோன்றலாம் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். மக்கள் ஒருவரையொருவர் எப்படி சந்திக்கிறார்கள், இணைகிறார்கள் என்பதுதான் மெட்டாவெர்ஸ் என மார்க் நினைக்கிறார். 

இதில் ஒருவரின் முகத்தைப் பார்ப்பது மட்டுமன்றி, அவருடனான உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்ள முடியும். இதனை மார்க் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என நினைக்கவில்லை. இத்துறையில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் உள்ளே நுழையும். அப்போதுதான் விர்ச்சுவல் ஸ்பேஸ் என்பது இன்னும் மேம்பாடு அடையும். இப்போதுள்ள தொழில்நுட்பத்தை விட புதிய தொழில்நுட்பத்தில் ஒருவரின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள், உடல்மொழியை நாம் அறியலாம் என்கிறார் மார்க். 

விளையாட்டு நிறுவனமான எபிக், மைக்ரோசாப்ட், என்விடியா ஆகிய நிறுவனங்கள் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகின்றன. சாதாரண உலகம் போன்ற  அமைப்பை கணினிவழியாக உருவாக்க உலாவுதல்தான் மெட்டா வெர்ஸ். மார்க் விர்ச்சுவல் ரியாலிட்டி பொருட்களை குறைந்த விலையில் உருவாக்கி விற்றால்  ஃபேஸ்புக் ஸ்பேசஸ் வசதிகளை மக்கள் விரைவில் பயன்படுத்த தொடங்குவார்கள். இதில் ஒருவர் தனது அந்தரங்கத்தை பாதுகாப்பது கடினமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள். இதற்கான விதிகளை உருவாக்கி பிறகே அதில் பயனாளர்கை அனுமதிக்கவேண்டும் என கருத்துகள் உருவாகி வருகின்றன. பயனரின் விருப்பத்தைப் பொறுத்தே பேஸ்புக் விளம்பரங்களை கட்டமைக்கிறது. இதில் பயனரின் தகவல்கள் பதிவு செய்யப்படும் வாய்ப்பு அதிகம். 

இந்து ஆங்கிலம்

ஸ்ரீராம் சீனிவாசன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?