பறவைகளுக்கு ஒகே ஆனால் நமக்கு விஷம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

 

பறவையும் பெர்ரியும்


பூச்சிகளுக்கு மழை ஈரம் பிடிக்காதா?

மானாவாரி பூமிக்கார ர்களுக்கு மழை பெய்வது பிடித்திருந்தாலும் அதில் நனைந்துகொண்டே இருப்பார்களா என்ன? அதேதான் பூச்சிகளும் கூட மழை பெய்யும் போது இலைகளின் அடியில் அல்லது புல்லுக்கு அடியில் சென்றுவிடும். சூரியன் எப்போது வெளியே வருகிறதோ அப்போதுதான் வெளியே வரும். அனைத்து பூச்சிகளுக்கும் இதமான வெப்பம் அவசியம். எனவேதான் சூரிய வெப்பம் இருக்கும்போது தனது இரை தேடுதலை வைத்துக்கொள்கின்றன. இதில் நிலப்பரப்பு சார்ந்த வேறுபாடுகள் உண்டு. 

அதிக காலம் தூங்கும் விலங்கு எது?

ஆஸ்திரேலியாவை பூர்விகமாக கொண்ட கோலா கரடிதான். யூகலிப்டஸ் மரத்தில் ஏறினால் அதை மொட்டையடித்துவிட்டுத்தான் கீழே இறங்கும். இதில் சத்துகள் குறைவு. நச்சுத்தன்மை அதிகம். இதனை செரிக்கவே கோலாவுக்கு பதினெட்டு மணிநேரம் ஆகிறது. ஆனாலும் அடம்பிடித்து அதையே சாப்பிட்டுவிட்டு தூங்கி மீண்டும் சாப்பிட்டு... என வாழ்கிறது. 

பெர்ரிகள் நச்சுத்தன்மை கொண்டவை என்றாலும கூட பறவைகள் அதனை எப்படி சாப்பிடுகின்றன?

குறிப்பிட்ட உயிரினம் சாப்பிடுகிறது என்றால் அந்த தாவரம், பழம் நமக்கும் செட் ஆகும் என்று கூற முடியாது. பறவைகளுக்கு விஷத்தை முறிக்கும் செட்டப் கல்லீரலில் அல்லது சிறுநீரகத்தில் இருக்க வாய்ப்புள்ளது. நமக்கு பாலிலுள்ள மூலக்கூறை உடைக்கும் அவசியம் கிடையாது. ஆனால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதனை சாப்பிட்டு செரிக்கும் தன்மை உருவாகிவிட்டது. எப்படி? தேவைதான் காரணம். இதன் காரணமாகத்தான் அணில்கள் விஷம் கொண்ட காளான்களையும் பெர்ரிகளையும் சாப்பிடுகின்றன. பறவைகள் இதனை சாமர்த்தியாக செரிமானம் செய்து வெளித்தள்ளிவிடுகின்றன. கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?