நிஜ உலகில் உள்ள வில்லனை வீழ்த்த உதவும் செயற்கை நுண்ணறிவு பாத்திரம்! - ஃப்ரீ கய் 2021
ஃப்ரீகய்
ரியான் ரினால்ட்ஸ்
ப்ரீசிட்டி எனும் விளையாட்டு இரண்டு கணினி விளையாட்டு வல்லுநர்களின் கோடிங்குகளை திருடி உருவாக்கப்பட்டது. அதனை கண்டுபிடிக்கும் இருவரும் அதனை எப்படி மீட்கின்றனர் என்பதுதான் கதை.
கதையில் வரும் நாயகன் ரியான் ரினால்ட்ஸ் செயற்கை நுண்ணறிவு கொண்ட பாத்திரம் ஆகும். உண்மையான வாழ்க்கையில் நாயகன் என்பது கீஸ் எனும் பாத்திரம் ஆகும்.
படத்தில் ரியான் ரினால்ட்ஸ் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட பாத்திரம்தான். ஆனால் அதனை அவர் புரிந்துகொள்ள மாட்டார். அவருக்கு வங்கியில் வேலை. தினசரி ஒரே மாதிரியான காபியைக் குடித்துவிட்டு வேலைக்கு செல்வார். அவருக்கு வங்கி செக்யூரிட்டிதான் நண்பர். தினசரி அவரது வங்கியில் கொள்ளை நடைபெறும். அதை எதிர்க்காமல் பணத்தை திருடு கொடுப்பது அந்த வங்கியின் வழக்கம். ஒருநாள் இந்த வழக்கத்தை ரியான் ரினால்ஸ்ட் மாற்றுகிறார். அதாவது அவரது பாத்திரமான கய். இதனால் சில நாட்களில் அவர் ப்ளூ சர்ட் என்ற பெயரில் பிரபலமாகிறார்.
இந்த நேரத்தில் கணினி விளையாட்டுக்குள் வந்து தான் எழுதிய கோடிங்குகளை தேடுகிறார் மிலி என்ற இளம்பெண். அந்த பெண்ணை பார்த்ததும் கய்க்கு காதல் சிறகுகள் முளைக்கின்றன. கட்டிப்பிடித்தால் இந்தப் பெண்ணைத்தான் பிடிக்கவேண்டும் என நினைக்கிறார். இதற்காக அவர் மிலியின் திட்டத்திற்கு உதவுகிறார். இதனால் மிலி அவரை விரும்பத் தொடங்குகிறாள். ஏன் பபிள்கம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு முத்தம் கூட கொடுக்கிறார். ஆனால் அவர்களின் உறவு எதுவரை செல்லும்? கய் என்ற பாத்திரம் பற்றிய உண்மையை மிலிக்கு கீஸ் சொன்னாரா, அவளது வாழ்க்கை என்னவானது என்பதுதான் கதை.
படம் பாதி விளையாட்டிலும், பாதி நிஜ உலகிலும் நடைபெறுகிறது. கணினியில் விளையாட்டு கோடிங்குகளின் திருட்டு, அதனை சரிசெய்வது என்பது படத்தை எளிதாக நடத்திச்செல்லும் விஷயமாக தெரியவில்லை. ரியான் ரினால்ட்ஸை பார்ப்பது மட்டும்தான் உற்சாகமாக உள்ளது. ஒருகட்டத்தில் நிஜ உலகை விட விளையாட்டு உலகமே நன்றாக இருப்பது போல தோன்றுகிறது.
நீலச்சட்டை நல்லவன்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக