திரைப்படக் கலைஞர் அஷ்விகா கபூர் |
அஷ்விதா கபூர்
க்ரீன் ஆஸ்கர் வென்ற கானுயிர் திரைப்பட கலைஞர்
நான் கானுயிர் திரைப்படக்கலைஞர் மற்றும் அறிவியல் செய்திகளை பகிர்பவர், இயற்கை செயல்பாட்டாளர். சிறுவயதிலேயே நான் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவளாக இருந்தேன். எங்கள் குடும்பம் கொல்கத்தாவில் இருந்தபோது தங்கியிருந்த 12 வது மாடி முழுக்க ஆதரவற்று கிடந்த விலங்குகளை கொண்டு வந்து வைத்திருந்தோம்.
கோழிகள், புறா, முயல், முயல் ஆகியவற்றை நாங்கள் வளர்த்து வந்தோம். ஏறத்தாழ பண்ணை போலவே இருந்தது. பயணம் செய்யும் சூழலிலும் இந்த உறவு தொடர்ந்தது. இப்போது தங்கியுள்ள வீடுகளில் கூட அருகிலுள்ள இரண்டு பூனைக்குட்டிகளோடு நட்பு உள்ளது. நான் விசில் அடித்தால் அவை இரண்டும் பால்கனிக்கு அருகில் வரும். ஒடாகோ பல்கலைக்கழகத்தில் இயற்கை வரலாறு பற்றி படிக்க விரும்பினேன். படிப்பை முடித்தபிறகு, 2014ஆம் ஆண்டு தொடங்கி இயற்கை சார்ந்த திரைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன்.
இயற்கை செயல்பாட்டாளர் அஷ்விகா கபூர் |
என்னுடைய படங்களில் புகழ்பெற்றது நியூசிலாந்தில் எடுத்த காகாபோ கிளி பற்றியது. உலகத்தில் உள்ள மிக முக்கியப் பறவை இது. நான் படம் எடுக்கும்போது காகபோ கிளி இனம் அழிவின் விளிம்பில் இருந்தது. மொத்தம் 125 கிளிகள் மட்டுமே உயிருடன் இருந்தன. இப்போதும் நிலைமை பெரிதளவு மாறவில்லை.
இன்று சிராகோ என்ற கிளிதான் நியூசிலாந்தில் இயற்கை பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு உதவுகிறது. விமானத்தில் அதனை கொண்டு செல்லவும் அனுமதி கிடைத்துள்ளது. நான் வேலை செய்த அனைத்து விஷயங்களும் மகிழ்ச்சியானவை கிடையாது. அந்தமானில் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றேன். அங்கு சென்றபோது கடலில் உள்ள பவளப்பாறைகளைப் பார்க்க நினைத்தேன். ஆனால் கடலில் டைவ் அடித்து நீருக்குள் சென்றபோது, பவளப்பாறைகள் அனைத்து வெள்ளையாக இருந்தன. அதன் பொருள், அவை என்றோ அழிந்துபோய்விட்டன என்பதுதான். அப்போதுதான் பருவநிலை பற்றிய விஷயங்களை நான் நினைத்துப் பார்த்தேன். இன்று இந்த விவகாரம் காரணமாக உலகம் முழுக்க உள்ள 14 சதவீத பவளப்பாறைகள் அழிந்து போய்விட்டன.
பவளப்பாறைகளில் சிறு மீன்கள் வாழும். அவை வளர்ந்தபிறகு அதனை பெரிய மீன்கள் உணவாக சாப்பிடும். பவளப்பாறைகள் உயிருடன் இருந்தால்தான் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை இயற்கையின் வலையமைப்பு என்று கூட கூறலாம். நான் எதிர்காலத்திற்கான திரைப்படக்கலைஞர்கள் எனும் கூட்டமைப்பில் இருக்கிறேன். பொதுவாக இயற்கை பற்றிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்பி வருகிறார்கள். ஆனால் இனிமேல் இயற்கை பாதுகாப்பு பற்றிய அக்கறையுடன் நிகழ்ச்சிகளை தயாரிக்கவேண்டும்.
ரேஞ்சர்களுடன் அஷ்விகா கபூர் |
நான் சுந்தரவனக்காடுகளில் வேலை செய்துள்ளேன். அங்குதான் அழிந்து வரும் நிலையில் உள்ள வங்கப்புலி வாழ்கிறது. மனிதர்களின் செயல்பாடு, பருவநிலை மாறுபாடு காரணமாக சுந்தரவனக்காடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலின் மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் ஒரே கவசம், இக்காடுகள்தான். அலையாத்திக் காடுகள் வளர்ந்துள்ள இடங்களில் புயல் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இவை இல்லாத இடங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதோடு விளைநிலங்களையும் பாதிக்கும். சுந்தரவனக்காடுகள் இல்லையென்றால் கொல்கத்தா என்ற ஊரே இன்று இருக்காது. அந்தளவு இயற்கை பாதிப்புகள் நம்மை பாதித்திருக்கும்.
அரசுகள் உடனே இயற்கை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அப்படியல்லாதபோது, பாதிப்புகளை மக்கள் அனுபவிக்கும்படி இருக்கும். பருவநிலை மாறுபாடு, பல்லுயிர்த்தன்மையை காக்க நம்மால் முடிந்தளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக