காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இருக்கிறது என நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்! - ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்




ஜெய்ராம் ரமேஷ்




 ஜெய்ராம் ரமேஷ்

மூத்த காங்கிரஸ் தலைவர்


ஜெய்ராம் ரமேஷ்


தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கமிட்டி பற்றிய மசோதாவில் நாடாளுமன்ற கமிட்டியின் செயல்பாடு என்ன? கடந்த இரு ஆண்டுகளாக கமிட்டி செயல்பாட்டில் உள்ளது?

நவம்பர் 22 அன்று நாங்கள் இதுபற்றிய அறிக்கையைப் பெற்றோம். கமிட்டி தலைவர், பிபி சௌத்ரி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், இதனை எதிர்த்து வந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். 

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இது எப்போது முடிவுக்கு வரும்?

நாங்கள் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான கட்சி. எங்கள் கட்சியில் ஒருவர் வெளிப்படையாக கருத்துகளை கூற முடியும். இந்தியாவை அதன் தனித்துவமான தன்மையோடு வெளியே காட்டுகிறோம். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளது என நீங்களே கூறினாலும் நான் அதனை ஏற்க மாட்டேன். இதனை காங்கிரஸ் தலைவர் சோனியாவே பலமுறை கூறியுள்ளார். நான் இப்போது இதனை புதிதாக கூறவில்லை. பாஜகவை எதிர்க்கும் ஒரே தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ் மட்டுமே. 

திரிணாமூல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் காங்கிரஸ்தான் ஒரே தேசிய அளவிலான கட்சி எனும் கூற்றை மறுக்கிறார்களே?

மேற்கு  வங்கத்தில் திரிணாமூல் பெற்ற வெற்றி மகத்தானது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அர்கள் பாஜகவை தோற்கடிக்கவில்லை. முழுக்க அழித்தே விட்டார்கள். இதைப்போலவே தமிழ்நாட்டில் திமுக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் இதைப் புரிந்துகொண்டுள்ளது. இவர்களுடன் ஒன்றாக சேர்ந்து இணைந்து  பணிபுரிய தயாராக உள்ளது. பாஜகவிற்கு எதிரான சக்திகள் ஒன்றாக இணையவேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புகிறது.

மணிப்பூரில் நீங்கள் காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக இருக்கிறீர்கள். அங்கு வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை  இருக்கிறதா? 

2017இல் மணிப்பூரில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாக இருந்தோம். 28 எம்எல்ஏக்கள் இருந்தனர். கூடுதலாக மூன்று எம்எல்ஏக்கள் இருந்தால் நாங்கள் ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால் வேறு சில சக்திகள் உள்ளே தலையிட்டுவிட்டன. 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சதிகளில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் தடுத்து விட்டனர். 

இந்தியன் எக்ஸ்பிரஸ்

சோபனா கே நாயர்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்