சிறுவர் காப்பக சிறுவர்களை தொழில்முனைவோர்களாக்கும் மாணிக்க பாரதி! - நமது தோள்கள் அறக்கட்டளையின் அரிய பணி

 


மாணிக்க பாரதி, சமூக செயல்பாட்டாளர். இப்படி ஒற்றை வரியில் ஏதாவது சொன்னால் யாருக்குமே புரியாது அல்லவா? இவர் காப்பகத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளை தொழில்முனைவோராக்க பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். இதற்கு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் ஆதரவும் உதவியும் கிடைத்துள்ளது. பேக் அண்ட் சேஞ்ச் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முயன்று வருகிறார். 

தனது பேக்கரியில் உள்ள உணவுவகைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை இத்தொழிலுக்கு வர உதவி வருகிறார். இதில் ஐந்து பேர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு பேக்கரி கல்வித் திட்டத்தை தொடங்கியபோது ஒரு மாணவர்தான் இதில் இணைந்திருந்தார். மாணிக்க பாரதிக்கு, குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தரவேண்டும் எப்போது தோன்றியது? அதற்கு சோகமான முன்கதை 2015ஆம் ஆண்டில் அவரது சகோதரி இறந்துபோனார். கடைசி வார்த்தையாக உன்னை உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயங்களைச் செய் என்று சொல்லியிருக்கிறார். அதற்குப்பிறகுதான் அரசு அமைப்புகளோடு இணைந்து மக்களுக்கு வாழ்க்கைத்திறன்களை சொல்லிக்கொடுக்கும் பணிகளை செய்யத் தொடங்கியிருக்கிறார். 

பாடங்களை நன்றாகத்தான் சொல்லித்தந்திருக்கிறார். ஆனால் சில மாணவர்கள் மட்டும் திடீரென காணாமல் போய் மறுபடியும் மீண்டு வந்திருக்கிறார்கள். எங்கு போனார்கள் என்று பார்த்தால் அவர்கள் அரசு காப்பகத்திலிருந்துவிட்டு மீண்டு வந்திருக்கிறார்கள். அப்போதுதான் மாணிக்கப் பாரதி அப்படி ஒரு இடத்தைப் பற்றி கேள்விப்பட்டார். அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று அந்த காப்பகத்தில் உள்ளவர்களுக்கும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்திருக்கிறார். 

வாழ்க்கைத்திறன்களை சொல்லிக் கொடுக்கும்போது பதினைந்து வயது சிறுவன் ஒருவன், தான் குடும்பத்திற்காக வேலை செய்யவேண்டியுள்ளது என்று கூறியுள்ளான். அதைப் பற்றி யோசித்த மாணிக்க பாரதி, கைவிடப்பட்ட கட்டிடத்தை அரசு உதவியுடன் பெற்று அங்கு செஃப் ஒருவரின் உதவியுடன் பேக்கரி ஐட்டங்களை செய்வது எப்படி என சொல்லித்தர கூறியுள்ளார். அவர் ஷோல்டர்ஸ் பௌண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை மாணிக்க பாரதி நடத்தி வருகிறார். தனது பணிகளை இதன் வழியாகத்தான் செய்கிறார். 

குற்றங்களை செய்துவிட்டு காப்பகத்தில் இருந்துவிட்டு வரும் சிறுவர்களை யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் எதிர்காலம் முழுக்க குற்றங்களை சார்ந்தே அமையவும் வாய்ப்புள்ளது. மாணிக்க பாரதியின் செயல்பாடு, சிறுவர்களை இதிலிருந்து மீட்க உதவியுள்ளது. இன்று மாணவர்கள் பேக்கரி உணவுகளை தயார் செய்பவர்களாக இருப்பதால், அவர்களால் தங்களின் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ள முடியும். வெறும் பயிற்சிகளை கொடுத்துவிட்டு மாணிக்க பாரதி சென்றுவிடாமல் சிறுவர்களுடனே தங்கியிருக்கிறார். இதனால் அவர்களும் நம்பிக்கையுடன் தங்கள் பயிற்சிகளை  செய்து வருகிறார்கள்.  பேக்கரி புரசைவாக்கத்தில் கெல்லீஸில் உள்ளது. 


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?