பரிணாமவளர்ச்சி பெறும் ஜோம்பிகளை போட்டுத்தள்ளும் வேட்டைக்குழு! - ஜோம்பிலேண்ட் - டபுள் டேப்

 




#ஜோம்பிலேண்ட் - டபுள் டேப்


ஜோம்பிலேண்ட்
 டபுள் டேப்
கொலம்பியா பிக்சர்ஸ் - சோனி


முழு அமெரிக்காவுமே ஜோம்பிகளால் அழிந்துபோகிறது. மிஞ்சிய சிலரில் டெலிகாஸி, மேடிசன், கொலம்பஸ், விசிட்டா, லிட்டில் ராக் என மிகச்சிலரே மிஞ்சுகிறார்கள். இவர்களுக்குள் வரும் ஈகோ, காதல் தகராறுகளும் இன்ன பிற ஜோம்பிகளின் வம்பு தும்புகளும்தான் கதை. 



அமெரிக்கா முழுக்கவே புல் பூண்டுகள் முளைத்து நாசமாகி கிடக்கிறது. அங்கு பெருசு டெலிகாசியுடன் இளைஞன் கொலம்பஸ், அவனது பெண் தோழி விசிட்டா, அவளது தங்கை லிட்டில் ராக் ஆகியோர்  மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் முதல் காட்சியில் ஒரு டஜன் ஜோம்பிகளை தலையில் சுட்டுக் கொல்கிறார்கள். இதனை  இயக்குநர் கவித்துவமாக ஸ்லோமோஷனில் படமாக்கியிருக்கிறார். ரத்தம் பார்த்தாலே பதறும், மண்டை உடைந்தாலே வாய் அலறும் என்பவர்கள் படத்தைப் பார்க்காமல் இருப்பதே நல்லது. 

படம் ரத்தம் தவிர, முறுக்கேறும் உடல் கொண்ட எல்விஸ் ப்ரெஸ்லி பார் பெண், ஃப்ரீசரில் இருந்த மேடிசன் 18 பிளஸ் காட்சிகள் உண்டு என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமான படம்தான் இது. இதை மனதில் வைத்துக்கொண்டு பாருங்கள். தமிழ் டப்பிங்கில் நம் ஆட்கள் அசத்தியிருக்கிறார்கள். 


ஜோம்பிலேண்ட் - டபுள்டேப்
பெட்ரூமில் மேடிசனோடு கொலம்பஸ்



அதுவும் மேடிசன் கட்டிலில் கொலம்பஸை கிடத்தி வேட்டையாடும்போது, டெலிகாசி அடிக்கும் கமெண்ட் ஆசம். படம் முழுக்க டெலிகாசி என்பவர் குழுவின் கேப்டன் போல வருகிறார். இவர்களில் ரூல்ஸ்களை அப்போதைக்கப்போது படத்தில் ஸ்க்ரீனும் பார்க்கலாம். 

இதனால் படம் புரியவில்லை என்று சொல்ல ஏதுமில்லை. படத்தில் முக்கியமான சுவாரசிய அம்சம். ஜோம்பிகளும் டி8 என்ற பெயரில் பரிணாம வளர்ச்சி பெற்று டெர்மினேட்டர்களாக மாறுவதுதான். இதனையும் முடிந்தளவு சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். 




கொலை செய்யும் தேசத்திலும் காதலுக்கும் செக்சுக்கும் பஞ்சமில்லை கிடைத்த வாய்ப்புகளை டெலிகாசியும் கொலம்பசும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கொலம்பசுக்கும் மேடிசனுக்குமான செக்ஸ் உறவால் அவனை காதலிக்கும் ஆனால் கல்யாணத்திற்கு மறுக்கும் தோழி விசிட்டா, கோபம் கொள்கிறாள். அவனுக்காகவே திரும்ப வெள்ளை மாளிகைக்கு வருகிறாள். ஆனால் அங்கு கொலம்பஸ் இன்னொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்து கோபம், விரக்தி, பொறாமை என அனைத்து உணர்வுகளும் கொள்கிறாள். இதிலிருந்து மீண்டு இருவரும் எப்படி ஒன்றாக சேர்ந்தார்கள் என்பது துணைக்கதை. இறுதியில் டெலிகாசியும் கூட தனக்கான துணையைக் கண்டுபிடிக்கிறார். லிட்டில் ராக்கைத் தவிர பிறர் ஜோடியாக காரில் பயணிப்பதோடு படம் முடிகிறது. 

அதிகம் யோசிக்காமல் யாரையாவது கொல்லும் அளவுக்கு கோபம் இருந்தால் படத்தை தாராளமாக இயக்கி பாருங்கள். சந்தோஷமாகுங்க...


போட்டுத்தாக்குங்க...

கோமாளிமேடை டீம்

நன்றி

எம்எக்ஸ்பிளேயர்



Budget$45 million


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்