இடுகைகள்

தீவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில கடல் வாழ்

வைரக்கற்களை திருடிக்கொண்டு தனித்தீவுக்கு வரும் இருபெண்களை துரத்தும் கொலைகாரர்கள்! பாடி ஆஃப் சின்

படம்
  பாடி ஆஃப் சின் (2018) ஆங்கிலம்   Directors :   Amariah Olson ,  Obin Olson அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் கதை. அங்குள்ள பணக்கார தொழிலதிபர்கள், ஊதாரி பயல்கள் வரும் பார். அவர்களை வேட்டையாட நிறைய ஆட்களும் இருப்பார்களே? அப்படித்தான் எரிகா என்ற பெண் தனது தோழி லோரனுடன் அங்கு இருக்கிறாள். அங்கு வரும் பணக்கார ஆட்களை ஆசைப் பேச்சால் மயக்கி, உடலுறவு கொண்டுவிட்டு பிறகு மயக்க மாத்திரையால் நிஜமாக தூங்கவைத்துவிட்டு வேலையைத் தொடங்குகிறார்கள். அவர்களின் பணம், அணிகலன் என அனைத்தையும் திருடிக்கொண்டு கம்பி நீட்டுவதே வழக்கம். தனது அடையாளத்தை மறைத்து திருட்டு வேலையை செய்துவருகிறாள். உடலுறவு சந்தோஷமும், திருட்டில் தனது சாமர்த்தியம் மேம்படுவதையும் அவளே சிலாகித்து கொள்கிறாள். தனது தோழி லோரனுக்கும் இதுபற்றி கற்றுத் தருகிறாள். வறுமையான நிலைக்காக எரிக்காவை தேடி வந்த லோரனுக்கு, திருட்டு செய்வதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் அவள் எரிக்காவை நம்புகிறாள். எரிக்கா அப்படி ஒரு பணக்காரனை சந்தித்து பேசி இறுதியாக உடலுறவு கொள்கிறாள். பிறகு கிளம்பும்போது, மதுபானத்தில் மாத்திரையை கலந்துகொடுத்து அவனிடமிருந்த பணத்தை,

பூமியில் உள்ள வேற்றுக்கிரகத்தீவைக் காண வாருங்கள்! சோகோட்ரா தீவு

படம்
  பூமியில் ஓர் வேற்றுகிரகத் தீவு! ஏமன் நாட்டுக்குச் சொந்தமான தீவு, சோகோட்ரா. 2008ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் தொன்மையான பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள தனித்துவமான தாவரங்கள், உயிரினங்களால் பூமியில் உள்ள வேற்றுகிரகம் என்ற செல்லப்பெயரும் இதற்குண்டு.  அமைந்துள்ள இடம் : ஏமன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் 340 கி.மீ. தொலைவில் இந்தியக் கடலில் அமைந்துள்ளது. அரபிக்கடலுக்கும், கார்டாப்யூ சானல் நீரோட்டத்திற்கு இடையில்  உள்ளது. 3 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியாவிலிருந்து பிரிந்த தீவுப்பகுதி. தீவுகளின் எண்ணிக்கை : 4 (சோகோத்ரா (Socotra), அப்ட் அல் குரி (Abd al kuri), சம்ஹா (Samhah), தர்ஷா (Darsha))  மொத்த பரப்பு: 3,796 சதுர கி.மீ.  சோகோட்ரா பரப்பு: நீளம் 132 கி.மீ. அகலம் 49 கி.மீ.  வெப்பநிலை: 25 டிகிரி செல்சியஸ்     மழைப்பொழிவு அளவு 150 மி.மீ. கண்டறிந்தவர்கள்: கிரேக்க, அராபிய கப்பல் மாலுமிகள் மொத்த பறவை இனங்கள்:  225 அழியும் நிலையில் உள்ளவை: 6 (சோகோட்ரா ஸ்பாரோ (Socotra sparrow), சோகோட்ரா சிஸ்டிகோலா (Socotra Cisticola), சோகோட்ரா ஸ்டார்லிங் (Socotra Starling), சோகோட்ரா சன்பேர்ட் (S

மெக்சிகோவின் கலாபகோஸ் தீவுகள்! - ரெவில்லேஜிஜெடோ தீவுகள்

படம்
  மெக்ஸிகோவின் கடற்புரத்தில் ரெவில்லேஜிஜெடோ தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை மெக்ஸிகோவின் கலாபகோஸ் என்று புவியியலாளர்கள் அழைக்கிறார்கள். இதற்கு, இங்கு காணப்படும் பல்லுயிர்த்தன்மையே முக்கியக் காரணம். கடல் பகுதியில் அமைந்துள்ள சங்கிலித் தொடரான தீவுக்கூட்டங்களுக்கு ஆர்ச்சிபெலகோ என்று பெயர்.  இவற்றில் நிறைய எரிமலைகள் அமைந்துள்ளன. இவை என்ன காரணத்தில் வெடிப்புக்குள்ளாகின்றன என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  1953ஆம் ஆண்டு பார்சினாவில் உள்ள ஆர்ச்சிபெலகோ எரிமலை லாவாவை வெளியேற்றியது. பிறகு, 1993 ஆம் ஆண்டு பசிபிக் பகுதியிலுள்ள எவர்மன் எரிமலை, வெடித்தது.இந்த இரண்டு எரிமலைகள் இரண்டுமே இன்று வரை இயங்கி வருகின்றன. “நாங்கள் இந்த எரிமலையில் வெளியாகும் லாவா அளவையும், ஏற்படும் ஆபத்து பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் நெதர்லாந்தின் உட்ரெச்ட் பல்கலைக்கழக பேராசிரியரான தூவே வான் ஹின்ஸ்பெர்ஜன் (). எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்ற பயம் இருப்பதால்தான் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர். எனவே, எரிமலைகளின் வெடிப்பை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.  லாவாவில் க

தீவு மக்கள் மீது திடீரென கோபம் கொண்டு வேட்டையாடும் தொன்மை கடவுள்! - அலோகா ஸ்கூபி டூ

படம்
                அலோகா ஸ்கூபி டூ ஹவாயிலுள்ள அழகான தீவுதான் அலோகா . அங்கு அரசுக்கு முக்கியமான வருமானம் சுற்றுலா பயணிகளும் , கடலில் மீன் பிடித்து விற்பதும்தான் . இப்படி இருக்கையில் திடீரென அ்ங்குள்ள தொன்மையான கடவுளின் ஆன்மா அம்மக்களை தாக்க தொடங்குகிறது . விரைவில் அங்கு கடலில் அலைச்சறுக்கு போட்டி நடக்கவுள்ளது . இதனால் அந்த நகரின் மேயர் பதறுகிறார் . அங்கு நிலங்களை விற்று கட்டிடங்களை கட்டி எழுப்ப நினைத்தவர்களும் தொழிலை இழக்கின்றனர் . உண்மையில் திடீரென நடக்கும் அந்த தாக்குதலின் பின்னணி என்ன ? சிறு மனிதர்களை அனுப்பி சுற்றுலா பயணிகளை அடித்து உதைத்து விரட்டும் நோக்கம் என்ன ? வெளியாட்களை மெல்ல உள்ளூர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு சூழல் மாறுகிறது . இந்த சூழ்நிலையை எப்படி மிஸ்ட்ரி மெஷின் குழு கண்டுபிடிக்கிறது என்பதுதான் கதை .    ஹவாய் மக்களின் கலாசாரம் , அவர்களின் நம்பிக்கை , உணவு என நிறைய விஷயங்களை அனிமேஷன் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் . மக்களிடையே உள்ள நம்பிக்கையை வைத்து எப்படி சிலர் அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை ஃபிரெட் , டெப்னி , வெல்மா , சே

பொறியாளரின் சுதந்திர வேட்கையை உடைத்து நொறுக்கும் மத, அரசியல் அமைப்புகளின் கோர முகம்! ரோஸ் ஐலேண்ட் 2020

படம்
                ரோஸ் ஐலேண்ட் சுதந்திரமாக வாழ நினைக்கும் பொறியாளரின் கனவை அரசியலும் மதமும் இணைந்து எப்படி அழிக்கின்றன என்பதுதான் கதை.  இத்தாலியில் வாழும் பொறியாளர் ஜார்ஜியா ரோஸ். இவருக்கு தனித்துவமாக வேலைகளை செய்வது பிடிக்கும். எனவே, பிற பிராண்டு வண்டிகளை வாங்கி நம்பர் பிளேட் வைத்து ஓட்டாமல் தானே மோட்டார் காரை வடிவமைத்து அதனை ஓட்டிச்செல்கிறார். இவரது கனவு பெரியது. ஆனால் அதனை உலகம் புரிந்துகொள்வதில்லை. ஏன்  வழக்குரைஞராக இருக்கும் அவரது காதலி கூட புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை. அப்படியா ஃபைன் என கடந்துபோய்விடுகிறார். தான் சுதந்திரமாக இருப்பதோடு பிறரும் அப்படி வாழும்படி ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதற்கு காதலி  கோபத்தில் திட்டும் ஒரு வாக்கியம்தான் காரணமாக உள்ளது. நீ வேறு உலகத்தில் வாழ்கிறாய். நானும் நீயும் ஒன்றாக வாழ முடியாது. நீ ஏதாவது சாதிக்கணும்னா அதை உன்னுடைய உலகில் உருவாக்கிக்கொள் என திட்டிவிட்டு சென்று செல்கிறாள் கேப்ரியெல்லா. அந்த வாக்கியம் ரோஸை அதிகம் யோசிக்க வைக்கிறது. எனவே, உடனே தனது தொழிலதிபர் நண்பனைத் தொடர்புகொள்கிறான். அதி

கடல்நீர்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? - அலசல் பார்வை

படம்
      cc     நகரங்களை மூழ்கடிக்கும் கடல்நீர்மட்ட உயர்வு ! 2100 ஆம் ஆண்டில் கடல் மூலமாக ஏற்படும் வெள்ள அபாயம் 48 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தகவல் தெரிவித்துளளன . கடந்த சில ஆண்டுகளாகவே கடல்நீர்மட்டம் உயர்நது வருவதைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன . இவை வெறும் பயமுறுத்தல் அல்ல என்பதற்கான சான்றுகளை , நாம் உலக நாடுகளில் கடற்கரையோர நகரங்கள்மூழ்குவதன் மூலம் அறியலாம் . இதுபற்றிய ஆராய்ச்சியில் 2100 ஆம் ஆண்டு கடல் அலைகள் மூலமாக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்துளளது . இதன்மூலம் ஏற்படும் சொத்துக்களின் பாதிப்பு காரணமாக 20 சதவீத பொருளாதார இழப்பு ஏற்படும் எனறும் எப்ரு கிரெஸி , லான் யங் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுளளது . பாதிப்பைக் கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவேண்டும் . அடுத்து , கடல்நீர் நகரங்களுக்குள் புகாதபடி சுவர்களை கட்டலாம் என பல்வேறு ஆலோசனைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன . கடல்நீர் மட்டம் உயருவதற்கான முக்கிய காரணம் , வெப்பநிலை உயர்வு , துருவப்பகுதிகளில் உள்ள